06-22-2003, 08:53 AM
மே மாதம் என்று திட்டமிடப்பட்டு பின்னர் ஜூன் மாதத்திற்கு மாற்றப்பட்டு அடுத்து ஜூலை மாதத்தில் நடக்கும் என்று சிறீலங்கா அரச தரப்பால் கூறப்பட்டு வந்த விடுதலைப்புலிகளுக்கும் - சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இடையேயான சமாதானப் பேச்சுவார்த்தைகள் இன்னமும் எப்போது நடக்கும் என்ற உறுதிசெய்யப்படாத நிலையில் - ஒரு தேக்க நிலையை அடைந்துள்ளதாக தெரிகிறது.
புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம் குறிப்பிட்ட கால வரையறைக்குள் மேற்கொள்ளப்பட வேண்டிய பல நடவடிக்கைகள் இன்னமும் முழுமை பெறாத நிலையில், அரச தரப்பின் வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்படாமல் இழுபறி நிலையில் இருப்பதும் இதற்கு ஒரு காரணமாகும்.
அரசுக்கும் படைதரப்பினருக்குமிடையே உடன்படிக்கையில் ஒப்புக்கொள்ளப்பட்ட சில முக்கிய அம்சங்களை செயற்படுத்துவது தொடர்பாக இன்னமும் ஒரு புரிந்துணர்வு ஏற்படவில்லை என்பது பகிரங்கமான விடயமாகியுள்ளது.
அரசின் உத்தரவுகளை படைதரப்பு ஏற்கமறுக்கிறதா, படைதரப்பினரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க அரசால் முடியாமல் இருக்கிறதா என்ற ஒரு தன்மையான இரு வினாக்கள் தற்போதைய தேக்கநிலையின் பின்னணியில் சந்தேகங்களை ஏற்படுத்தும் மையக் குழப்பங்களாக உள்ளன.
குறிப்பாக கடற்படையினர் மீதான கட்டுப்பாட்டை அரசு வெகுவாக இழந்துள்ளது போன்ற எண்ணத்தை அவர்களின் நடவடிக்கைகள் ஏற்படுத்திவருகின்றன.
பாடசாலைகள், வழிபாட்டு மையங்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து வெளியேறுவதாகக் கூறும் படையினர் புதிய இடங்களில், மக்களின் வாழ்விடங்களை ஆக்கிரமித்து புதிய முகாம்களை அமைத்ததுடன் அந்தப் பிரதேசத்தையே அதியுயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனம் செய்யும் ஒரு புதிய வகை நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றனர். இது உடன்படிக்கையை மீறும் ஒரு நடவடிக்கையேயாகும். இது குறித்து விடுதலைப்புலிகள் மட்டுமல்லாது தமிழ் மக்கள் அனைவருமே அரசுக்கு அறிவித்தும் கண்டனக்குரல் எழுப்பியும் அது தொடர்பாக அரசு எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வதாகத் தெரியவில்லை. தமிழ்மக்களின் இயல்பு வாழ்வுக்கு அச்சுறுத்தலாக தொடர்ந்தும் படைதரப்பு நடவடிக்கைகள் புதியபுதிய வடிவங்களில் மேற்கொள்ளப்பட்டே வருகின்றன.
அரச தரப்பும் இதை மௌனமாக அங்கீகரிப்பதாகவே தெரிகிறது. இதேவேளை கடற்படையினரும் புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பான விடயங்களில் அரசாங்கத்துடன் ஒத்துழைப்புக் கொடுப்பவர்களாக தெரியவில்லை. அவர்களின் நடவடிக்கைகள் யாவும் 'பாதுகாப்பு' என்ற சொல்லைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் அடாவடித்தனமாகவே தெரிகிறது. குறிப்பாகத் தீவுப்பகுதியில் ஈ.பி.டி.பி. யினருடன் சேர்ந்து கொண்டு அவர்கள் இயங்குவதென்பது நிச்சயம் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு ஆதரவான ஒன்றாக இருக்கப்போவதில்லை. தீவுப் பகுதியில் ஈ.பி.டி.பி.யினரைத் தவிர்த்துவிட்டு கடற்படையினர் அரச கட்டுப்பாட்டை அனுசரித்து நடப்பார்கள் என எதிர்பார்ப்பதும் முட்டாள்தனமானதாகும். தற்காலிகமாக சில விடயங்களில் - சில நிர்ப்பந்தங்களின் காரணமாக புரிந்துணர்வு உடன்படிக்கையை அவர்கள் மதித்து நடக்க முன்வருவதுபோல் நடித்தாலும் மனப்புூர்வமாக அவர்கள் சமாதான நடவடிக்கைகளை ஆதரித்து செயற்படுவார்கள் என்பதை நம்புதல் சாத்தியமற்ற விடயமாகவே உள்ளது. அண்மைக்காலத்தீவுப் பகுதி நிகழ்வுகள் இதற்கு சரியான உதாரணமாகும். செம்மண்ணன் தொடர்பான விடயத்தில் அவர் மீது தாக்குதலை நடத்தியோரை இனங்காண முடியவில்லை என விசாரணைக்குழுவினர் கைவிரித்துள்ளமையானது. குறிப்பிட்ட, இன்னமும் பிடிபடாத, நிலையில் உள்ள குற்றவாளிகளுக்கு மிகவும் உற்சாகமூட்டும் செய்தியேயாகும்.
தீவுப்பகுதியில் அண்மைக்காலங்களில் நடைபெற்ற சம்பவங்களின் சூத்திரதாரிகள் கடற்படையினரும் அவர்களின் கைக்கூலிகளாகச் செயற்படும் தமிழ்க்குழுவொன்றைச் சேர்ந்தவர்களும்தான் என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்த விடயமேயாகும். இந்த நிலையில் குற்றவாளிகள் இனம் காணப்படவில்லை எனக் கூறுவது உலகை ஏமாற்றும் செயலேயாகும்.
ஆக, படைதரப்பினர் புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பான விதிமுறைகளை அமுல்படுத்துவதில் ரணிலின் அரசுடன் ஒத்துழைப்பு வழங்குவதாக இல்லை என்பதையே அண்மைக்கால நிகழ்வுகள் பலவும் வலியுறுத்தி நிற்கின்றன.
இதேசமயம், விடுதலைப் புலிகளின், புரிந்துணர்வு உடன்பாட்டு விதிமுறைகளை அனுசரிக்கும் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணம் இருந்தாலும் அரசாங்கத்தின் முழுமையான ஒத்துழைப்பு என்பது முறையாக கிடைக்கவில்லை என்பதால் பேச்சுவார்த்தைக்கு முன்னரான இயல்புநிலையை உருவாக்கும் செயற்பாடுகள் எதிர்பார்த்த முன்னேற்றத்தைக் காட்டுபவையாக இல்லை.
ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் அவரது அமைச்சர்களும் மாறி மாறி வெளிநாடுகளுக்குப் பறந்த வண்ணம் போகும் நாடுகளில் எல்லாம் சமாதான நகர்வுகளின் முன்னேற்றம் குறித்து பிரச்சாராPதியிலான விளக்கமளிப்பவர்களாகவும் உள்ளனர். சிறீலங்காவில் நிலைகொண்டு பேச்சுவார்த்தைகளுக்கான முன்னேற்பாடுகள் குறித்து கவனம் செலுத்துவதில் காட்டும் அக்கறையை விடவும் 'பிரச்சாரம்' செய்வதிலும், வேறு சில தந்திரோபாயச் செயற்பாடுகளை தீவிரப்படுத்தி, சமாதான முயற்சிகள் குறித்த சந்தேகத்தையும் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தும் யுக்திகளைக் கையாண்டு விடுதலைப் புலிகளை மறைமுகமாக அச்சுறுத்தும் நடவடிக்கைகளிலேயே ரணிலும் அவரது அமைச்சர்களும் முனைப்புக் கொண்டு இயங்குவதாகவே தெரிகிறது.
ஒருபுறம் சந்திரிகாவை பொறிக்குள் சிக்கவைக்கும் முயற்சிகளை மிகவும் நுணுக்கமாகவும் சட்டாPதியாகவும் மேற்கொள்ள மௌனமாகத் திட்டமிட்டு செயற்படும் அரசாங்கமானது மறுபுறம் தான் விரும்பும் தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு முரணான, அரைகுறைத்தீர்வொன்றை சர்வதேசச்சக்திகள் சிலவற்றின் அனுசரணையுடன் விடுதலைப் புலிக@டாகத் திணிக்க - அல்லது அவர்கள் அதனை நிராகரிக்கும் நிலையில், சமாதான நடவடிக்கையை விடுதலைப் புலிகள் குழப்பும் ஒரு சூழ்நிலைக்குள் அவர்களை தள்ளி அவர்கள் மீது சர்வதேச அழுத்தத்தைப் பிரயோகிக்கும் தந்திரோபாயம் கொண்ட மூலோபாபயங்களை வகுப்பதில் ரணிலின் அரசு தீவிரம் காட்டிவருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதனை நிராகரித்து விடமுடியாத அளவுக்கு ஒன்றன்பின் ஒன்றாக சிறீலங்கா அரசு திடீர்திடீரென அயல்நாடுகளுடனும், அமெரிக்கா போன்ற பெரிய நாடுகளுடனும் செய்து கொள்ளும் ஒப்பந்தங்களின், மூலோபாய நோக்கங்களுடன் கூடிய தந்திரோபாய நகர்வுகள் தமிழ் மக்களை விழிப்புடன் இருக்க வேண்டிய எச்சரிக்கை உணர்வுக்கு இட்டுச் செல்வதுடன் 'ரணிலின்' உள்நோக்கம் குறித்து சில அச்சங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவுடனான கடற்பரப்பு, வான்பரப்பு தொடர்பான ஒப்பந்தம், இந்தியாவுடனான திருமலை எண்ணைக்குதம் தொடர்பான ஒப்பந்தம், வட கடற்பகுதியில் சீனாவுக்கு மீன்பிடிக்க அனுமதி வழங்கும் உடன் படிக்கைகளை மேற்கொண்டு வரும் ரணிலின் அரசு இதற்கு மாற்றீடாக இந்த நாடுகளிடமிருந்து சிறீலங்கா படையினரின் பலத்தை மேம்படுத்துவதற்கான ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கான, இராணுவத்திற்கு பயிற்சிகள் வழங்குவதற்கான ஒப்பந்தங்களையும் மேற்கொண்டு வருகின்றமையானது தமிழ் மக்களை அச்சுறுத்தும் போக்கை அரசு மேற்கொள்வதையே காட்டுகிறது.
தமிழ்மக்களின் பாரம்பரிய வாழ்விடப் பிரதேசங்களை, கடற்பிரதேசங்களை, கடல் வளங்களை, வான்பரப்பை, அந்நியர்களுக்கு உடன்படிக்கைகளின் அடிப்படையில் தாரைவார்க்க முனைப்புடன் செயலாற்றும் அரசு, தமிழ் மக்களது உரிமைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதில் தாமதம் செய்வது என்பது சமாதானம் தொடர்பான நகர்வுகளில் அதன் அக்கறையின்மையையே புலப்படுத்துவதாகவும் உள்ளது.
சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அரசு காட்டும் தாமதமானது இன்னும் பல ஒப்பந்தங்களை தமிழ் மக்களின் வாழ்நிலம் தொடர்பான விடயங்களில் அவர்களின் விருப்பத்திற்கு முரணாக அவற்றைப் புறக்கணித்துவிட்டு தன்னிச்சையாக தனக்கு அனுசரணையான நாடுகளுடன் மேற்கொண்டு, அந்தந்த நாடுகளை ஏதோ ஒருவகையில் எமது தாயக நிலப்பரப்பிற்கு அழைத்து வந்து நிலை கொள்ளச் செய்வதன் மூலம் தமிழீழ தேசத்தை பல்வேறு உலக நாடுகளின் காலனித்துவ பகுதிகளாக்கி பிரித்துக் கொடுக்கும் அதன் அணுகுமுறையை விரிவுபடுத்தவே வழிவகுக்கும்.
இதேவேளை சிறீலங்கா தனது ராணுவபலத்தை மேம்படுத்துவதில் காட்டிவரும் அமைதியான, ஆனால் தீவிரமான நடவடிக்கைகள் பல்வேறு வகையான சந்தேகங்களை தமிழ்மக்கள் மனதில் எழுப்பத் தொடங்கியுள்ளன.
ஒருகாலத்தில் தமிழ்மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் பல்வேறு புதிய குடியேற்றத்திட்டங்களின் சூத்திரதாரிகளும், தமிழ்மக்களை, சிங்கள காடையர்களை ஆயுதபாணிகளாக்கி அவர்களின் எல் லைப்புற வாழ்விடங்களில் இருந்து இரவோடு இரவாக ஓட ஓட விரட்டியடித்து அப்பிரதேசங்களை ஆக்கிரமித்து சிங்களக் குடியேற்றங்களாக மாற்றிய சிங்கள பௌத்த இனவெறியர்களுமான மெரில் குணரத்னவையும், ரவி ஜெயவர்த்தனவையும் ரணில் தனது அமைச்சரவையில் பாதுகாப்பு ஆலோசகர்களாக நியமனம் செய்துள்ளார்.
ஜே. ஆரை, முன்னாள் சிறீலங்காவின் பிரதமர்களில் ஒருவரான சேர். ஜோன் கொத்தலாவல 'பொலங்கா' எனச் சிங்களத்தில் வழங்கப்படும் 'விசக் கட்டுவிரியன்' பாம்புக்கு ஒப்பிட்டார் என்றால் அவரது மகன் எத்தகைய இனவாத விசம் கொண்டவராக இருப்பார் என யோசிக்க வேண்டியது அவசியமாகும்.
ஆக சமாதான கோசமெழுப்பியபடி சமாதானத்திற்கான புறச்சூழலை முழுமையாக உருவாக்க காலதாமதம் செய்யும் அரசாங்கம், அதற்கு அச்சுறுத்தலான புறச்சூழலை உருவாக்குவதில் தீவிரம் காட்டுவதானது ஆரோக்கியமான விடயமாகத் தென்படவில்லை.
ரணிலின் அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நியாயமான முறையில் சர்வதேச அனுசரணையுடன் தீர்த்து சிறீலங்காவையும் பாதுகாத்துக் கொள்வாரா அல்லது பேரினவாதிகளை திருப்திப்படுத்த முனைந்து சிறீலங்காவையும் சீரழிப்பாரா என்பதை அடுத்து வரும் மாதங்கள் உணர்த்தும்.
தமிழ்மக்களின் பாரம்பரிய வாழ்விடப் பிரதேசங களை, கடற்பிரதேசங்களை, கடல் வளங்களை, வான்பரப்பை, அந்நியர்களுக்கு உடன்படிக்கைகளின் அடிப்படையில் தாரைவார்க்க முனைப்புடன் செயலாற்றும் அரசு, தமிழ் மக்களது உரிமைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதில் தாமதம் செய்வது என்பது சமாதானம் தொடர்பான நகர்வுகளில் அதன் அக்கறையின்மையையே புலப்படுத்துவதாகவும் உள்ளது.
; -தூரனின் பார்வையில்.......