10-31-2005, 08:54 AM
குண்டு வெடிப்பை அடுத்து தில்லி மிகவும் தாமதமாகவே வழமைக்குத் திரும்புகிறது
இந்தியத் தலைநகர் தில்லியில் 60 பேர் பலியாகக் காரணமான நேற்றைய குண்டு வெடிப்புகள் குறித்து பொலிஸார் புலனாய்வுகளைத் தொடரும் அதே சமயம் அந்த நகர் மிகவும் தாமதமாகவே வழமைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.
தெருக்களில் காணப்படும் மக்களின் எண்ணிக்கை வழமையை விட மிகவும் குறைவாக காணப்படுவதாக ஒரு பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
இந்திய மக்கள் பண்டிகைக்களுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் இந்த நேரம் மிகவும் பரபரப்பாக இருந்திருக்க வேண்டும், ஆனால் தமது கடைகளில் வியாபாரம் மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக கடைக்காரர்கள் கூறுகிறார்கள்.
வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் தமது தங்கும் அறைகளுக்காக பதிவுகளை ரத்துச் செய்து வருவதாக குண்டு வெடிப்பு இடம்பெற்ற இடத்துக்கு அருகில் உள்ள விடுதிக்காரர்கள் கூறுகிறார்கள்.
விசாரணைகளில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் சிவ்ராஜ் பட்டேல் கூறியுள்ளார்; ஆனால் மேலதிக தகவல்களைத் தர அவர் மறுத்து விட்டார்.
இஸ்லாமி இன்குலாபி மஹஷ் என்று தம்மை அழைத்துக்கொள்ளும், இதுவரை அறிமுகமாகியிராத குழு ஒன்று, காஷ்மீர் குறித்த தமது இலக்கின் மேலதிக முன்னேற்றத்துக்காக இந்த தாக்குதலை செய்துள்ளதாக கூறியுள்ளது.
இந்த உரிமை கோரல் ஆதாரபூர்வமானதா என்பது குறித்து தெளிவாகவில்லை.
BBC Tamil

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>