10-31-2005, 05:48 AM
அவளை சமாதானஞ்செய்ய வேறு கதைகள் பேசிக்கொண்டிந்த நான் அப்படியே தூங்கிவிட்டேன். ஏனோ திடீரென விழிப்பு வந்துவிட்டது. எனது உடல் வேர்வையில் குளித்திருந்தது. அப்போது நேரம் பதினோன்றைத்தாண்டியிருந்தது. யாரோ உள்ளே வருகின்றதுபோன்று ஒரு உணர்வு ஏற்பட்டது. நான் எழுந்து அமர்ந்துகொண்டேன். எதிர்பாராதவிதமாக எதிரே இருந்த கண்ணாடியைப்பார்த்த போது ஏதோ ஒரு உருவம் எனக்கு அருகில் இருப்பது போன்று தென்பட்டது. கட்டிலில் எனக்கு அருகில் யாருமே இல்லை. கட்டிலை கைகளால் தடவிப்பார்த்தும் தட்டியும் பார்த்தேன். யாருமே இல்லை. ஆனால் கண்ணாடியில் அந்த உருவம் எனக்கு அருகில் கட்டிலில் அமர்ந்திருந்தது. இப்போது பயந்துபோய் எனக்கு பக்கத்தில் படுத்pதருந்த அவர்களது மூத்;த மகள் தூக்கம் கலைந்து எழுந்துகொண்டாள். உடனே கண்ணாடியில் தெரிந்த அந்த உருவம் மறைந்துபோனது. ஆனாலும் பயம் எங்களை விட்டு அகலவில்லை. மூத்த மகளால் சரியாக சுவாசிக்க முடியாது திண்டாடினாள். அவள் நன்றாக பயந்திவிட்டிருக்க வேண்டும். உடனே அவர்கள் பெற்றோர்களை தொலைபேசியில் அழைத்து உடனே வரும்படி கேட்டுக்கொண்டேன். சமாதானஞ்செய்ய முனைந்தவர்கள் இறுதியில் வர ஒத்துக்கொண்டார்கள். அவர்கள் வந்ததும் அவளை ஒப்படைத்துவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.
ஒருவாரம் கழித்து எனது பயம் அடங்கிவிட்டது. மீண்டும் அவர்கள் அழைப்பை ஏற்று மாலை அங்கு சென்றேன். மீண்டும் தொலைக்காட்சி தானாக அணைந்து விளையாட்டு ஆரம்பித்துவிட்டதை உணர்த்தியது. குழந்தையை மேற்பார்வை செய்ய சிறிய 'மொனிட்டரில்" அவள் அழுவது போல தெரியவே அவள் அறைக்கு ஓடிச சென்று பார்த்தேன். அவள் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் மேலே யாரோ எதையோ தள்ளுவது போல ஓசைகேட்டது. உடனே அம்மாவை தொலைபேசியில் வரும்படி அழைத்தேன். அவர் வந்தும் மேலே நாடகம் தொடர்ந்தது. அம்மாமும் அதை தன் காதுகளால் கேட்டாள். பெற்றோர்கள் வரும் வரை அவள் எனக்கு துணையாக இருந்தாள். பெற்றோர்களிடம் நடந்ததைச்சொல்லி இனி என்னால் வேலைசெய்ய முடியாது எனக்கூறி அந்த வேலையில் இருந்து விலகிக்கொண்டேன்.
உண்மைக்கதை -- Jocelyn Callahan