10-31-2005, 03:36 AM
வெளியே வெளிச்சமாக இருந்தாலும் அந்த ஹால் இருட்டாகவே இருந்தது. அத்துடன் கொஞ்சம் குளிர்ச்சியாகவும் இருந்தது. தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அந்த ஹாலுக்குள் நுழைந்தேன். இருந்தும் மேலே தொடர்ந்து கொக்கரித்து சிரிப்பது போலவும் எதையோ போட்டு உருட்டுவது போலவும் சத்தம் கேட்டுக்கொண்டுதான் இருந்தது. படிக்கட்டுக்கு அருகில் போக தைரியம் இல்லாததால் அங்கேயே நின்று கொண்டு "யாரங்கே" என்று உரக்கு கத்தினேன். இப்போது படிக்கட்டுகளில் யோரோ இறங்குவது போல சத்தம் கேட்க எதிர் கொள்ள எந்த தைரியமும் இல்லாது ஓட்டம் பிடித்தேன். மறக்காமல் வெளிக்கதவை மூடிவிட்டு வெளியே நின்ற நாயுடன் வீடுபோய்ச்சேர்ந்தேன்.
மறுநாள் காலை குழந்தைகளுடன் அவர்கள் விடுமுறை முடிந்து வந்துவிட்டிருந்தார்கள். உடனேயே அங்கு சென்று வீட்டை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு பணத்துடன் வந்துவிட்டேன். என்னை பயமுறுத்திய சம்பவங்கள் எதையும் நான் அவர்களிடம் சொல்ல சரியான சந்தர்ப்பம் அமையவில்லை. அன்று மாலை அவர்களிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அடுத்து வரும் வெள்ளி குழந்தைகளுடன் தங்க முடியுமா என கேட்டனர். என்னால் மறுக்க முடியவில்லை. ஆனால் எனது நண்பி ஒருத்தியையும் அழைத்து வருவதற்கு அனுமதி கேட்டுப்பெற்றுக்கொண்டேன்.
வெள்ளிக்கிழமை மாலை அவர்கள் சொன்ன நேரத்திற்கு எனது உற்ற தோழியொருத்தியுடன் அங்கிருந்தேன். குழந்தைகளுக்கு உணவு கொடுத்து படுக்க வைத்தபின் தொலைக்காட்சி பார்க்க அமர்ந்தோம். திடீரென தொலைக்காட்சி நின்று போனது. முன்பு இதே போல நடந்ததால் பயம் என்னை மெதுவாகப்பிடித்துக்கொண்டது. எனது நண்பிக்கு எதையும் நான் சொல்லாததால் அவள் தொலைக்காட்சி நின்றதால் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்க முடியவில்லை என்ற கவலையுடன் மட்டும்காணப்பட்டாள். சிறிது நேரம் கழித்து எம்மையாரோ பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. நான் அவளை சமாதானபடுத்தி வைத்திருக்க முயற்சிக்கையில் மேலே அன்றைக்கு கேட்டது போலவே கெக்கரித்துச் சிரிக்கும் ஓசை கேட்டது. இதனால் பயந்து போன அவள் உடனே தனது தாயை தொலைபேசியில் அழைத்து அவருடன் சென்றுவிட்டாள். பாவம் அவள் மிகவும் பயந்து போனது அவள் செய்கையில் நன்கு தெரிந்தது. அவள் சென்ற பின் என்னை நானே சமாதானம் செய்துகொண்டு நிலமையை சமாளிக்க எண்ணினேன். ஆனால் எதோ ஒன்று நடக்கப்போகின்றது என்பது தெளிவாகத்தெரிந்தது. வெளியேஅமைதியாகத்தூறிக்கோண்டிருந்த மழை இப்போது அடைமழையாக ஒரு மாறியது. விழித்துக்கொண்ட அந்த வீட்டின் மூத்த பெண் என்னை அருகில் படுக்கும் படி கேட்டுககொண்டாள். இப்போதுதான் தூக்கம் கலைந்து எழுந்தவளாயிருந்தாலும் ஏதோகாரணத்தால் அவளும் பயந்திருப்பது போலத்தான் தெரிந்தது. அவளின் அருகில் சென்று தலையைக்கோதி அவளின் போர்வையைச் சரிசெய்து விட்டேன். மேலே கேட்கிற சத்தம் தண்ணீர்க்குழாயில் இருந்து வருவதாக அம்மா சொல்லியிருந்தாள். ஆனால எனக்கு அதில நம்பிக்கையில்லை. என்று தனது பங்கிற்கு அவளும் என்னைப்பயமுறுத்தி வைத்தால்.
தொடரும்..