10-30-2005, 04:04 PM
<b>தமிழீழ தேசிய கீதம்: விடுதலைப் புலிகள் உருவாக்குகின்றனர்
அக்டோபர் 30, 2005
கொழும்பு:
தமிழீழத்திற்கான தனி தேசிய கீதத்தை உருவாக்கும் பணியில் விடுதலைப் புலிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
தமிழீழம் எனப்படும் யாழப்பாணம் உள்ளிட்ட இலங்கையின் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் விடுதலைப் புலிகளின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
இங்கு இலங்கை ராணுவத்தால் நுழையக் கூட ¬முடியாத நிலை உள்ளது. இங்கு விடுதலைப் புலிகள் ஒரு அரசு நடத்தும் அளவுக்கு மிகத் திறமையான நிர்வாகத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
தனி ரூபாய் நோட்டு, தனி நீதிமன்றம், காவல் நிலையம், சுங்க வரி வசூல், வங்கிகள் என பக்கா நிர்வாகத்தை மேற்கொண்டுள்ளனர் விடுதலைப் புலிகள்.
இதுதவிர தமிழீழத்திற்கான தேசியக் கொடி, பறவை உள்ளிட்டவையும் உள்ளன. இருப்பினும் தனியாக தேசிய கீதம் என்று இதுவரை எதுவும் இல்லை.
அந்தக் குறையையும் தீர்க்கும் பொருட்டு தமிழீழத்திற்கான தேசிய கீதத்தை உருவாக்கும் ¬முயற்சியில் விடுதலைப் புலிகள் இறங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக விடுதலைப் புலிகளின் தமிழ்நெட் இணைய தளத்தில் ஒரு அறிவிப்பை விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர்.
அதில், எங்களது சொந்த தேசிய கீதத்திற்கான கவிதை மற்றும் யோசனைகள், கருத்துக்களை உலகத் தமிழர்கள் அனைவரும் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதில் பங்கேற்பவர்கள் தேச பக்தியுள்ள தமிழ்க் கவிஞர்களாக இருக்க வேண்டும். சுத்தமான தமிழில் 18 வரிகளில் தேசிய கீதம் அமைந்திருக்க வேண்டும்.
இலங்கை மற்றும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் இதற்கான கவிதைகளை எங்களுக்கு அனுப்பி வைக்கலாம். நவம்பர் மாதம் 27ம் தேதிக்குள் இந்தக் கவிதையை அனுப்பி வைக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது</b>
http://thatstamil.indiainfo.com/index.html