10-30-2005, 11:50 AM
சீனப்புரட்சியோ அல்லது இரசியப் புரட்சியோ அல்லது கியுூபா புரட்சியோ தவறு என்று வாதிடுவது பொருத்தமற்றதாயிருக்கும் என்று எண்ணுகின்றேன். இந்தப்புரட்சிகள் அந்தக் காலகட்டத்தில் நிலவிய அடக்குமுறைகளுக்கெதிரான ஒரு கிளர்வாயிருந்தன. நிலப்பிரபுக்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட முதலாளித்துவத்தின் சுரண்டல் பண்பு மேலோங்கியிருந்த காலகட்டத்தில் இவை அவசியமானவையாக இருந்தன. அதன் பின்னர் உருவாக்கப்பட்ட சமத்துவ பொருளாதார கட்டமைப்பின்; பல அம்சங்கள் ஏற்றக் கொள்ளப்படக்கூடியதொன்றே.
ஆனால் அந்தப் பொருளாதார அமைப்பின் நெகிழ்வற்ற தன்மை, மக்களின், பொருளாதாரத்தின் தேவைகளை உள்வாங்க மறுத்த போக்கு அதன் முன்னேற்றத்தை தடுத்தன.
முதலாளித்துவத்தில் பலவகை (அதனை முதலாளித்துவம் என்று அழைப்பதா அல்லது சோசலிசம் என்று அழைப்பதா என்பதே விவாவத்திற்குரியது) ஆங்கிலோ அமெரிக்க, ஐரோப்பிய, கிழக்காசிய என்று அவை வேறுபட்டன. ஐரோப்பிய முதலாளித்துவத்தை மனித முகத்துடன் கூடிய முதலாளித்துவம் என்றும் கூறப்படுவதுண்டு.
குளக்கோட்டன் கூறிய திட்டமிடப்பட்ட பொருளாதாரக் கொள்கை என்பது தனியே சோசலிச பொருளாதாரக் கோட்பாட்டை மட்டும் கொண்டதாக இருக்கவேண்டியதென்பது அவசியமில்லை. சந்தைப் பொருளாதாரம் திட்டமிடப்பட்ட பொருளாதாரத்தின் ஒரு அம்சமாக இருக்கலாமல்லவா. அந்தந்த நாட்டின் பொருளாதார அரசியல் சமூக கட்டுமாணங்களுக்கேற்றவாறான ஒரு திட்டமிட்ட பொருளாதார அமைப்பு. இந்த திட்டமிடுதலில் முதலாளித்துவத்தின் அம்சங்களை கூடுதலாக சேர்ப்பதா அல்லது கம்யுூனிசத்தின் அம்சங்களை சேர்ப்பதா என்பது எப்போதுமே தொடர்ச்சியற்ற விவாவத்திற்குட்பட்ட ஒருபொருளாகவேயிருக்கும்.
சீனா இந்தியா விடயத்தில் இன்று கூட அவர்களது அதீத பொருளாதார வளர்ச்சி வேகம் எந்தளவுக்கு எல்லா மக்களையும் சென்றடைகின்றது என்பது ஆராயப்பட வேண்டியதொன்று. சில கணிப்பின்களின்படி இன்றும் 80 வீதமான மக்களில் அந்த நாடுகளின் வளர்ச்சி எந்த ஆரோக்கியமான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக அந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கா கைக்கொள்ளப்படும் முறைமைகள் இயற்கையை சீரழிவிற்கு உள்ளாக்குவதால் அது எல்லா மக்களையும் பாதிக்கின்றது.
ஒரு பக்கம் பொருளாதார வளர்ச்சி தனியே இலக்கங்களில் மட்டும் எட்டப்படுகின்றதா, அல்லது பரந்து பட்ட மக்களுக்கும் அதன் பலாபலன் வழிந்தோட வழிசெய்யப்படுகின்றதா, அந்த பொருளாதார வளர்சியின் போது எமது இயற்கையை எப்படி கனம்பண்ணுகின்றோம், அது எப்படி அடுத்த சந்ததியில் தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றன என்பன நிச்சயம் கருத்தில் கொள்ளப்பட வேண்டியன. இவற்றிற்கான பதில் தனியே முதலாளித்துவத்திலோ அல்லது தனியே கம்யுூனிசத்திலோஇருப்பதாக தெரியவில்லை.