10-30-2005, 10:26 AM
ப்ரியசகி Wrote:Mathan Wrote:காதலிக்கப்படுவது ஒரு போதும் குறையாது, <b>காதலன் கணவனான பின்பு அவளை கவனத்தை ஈர்க்க செய்யப்பட்ட முயற்சிகள் குறையலாம்,</b> அது வாழ்க்கையில் உள்ளது தான், அதனை மனைவி அன்பு குறைவதாக தவறாக எடுத்து கொள்ள கூடாது, அப்படி எடுத்து கொண்டால் அதுவே மனத்தளவில் விரிசல் உண்டாவதற்கான முதல் காரணியாகிவிடும்![]()
இது கணவனுக்கும் பொருந்தும்
அதுதான் நான் கேட்பது..ஏன் திருமணத்தின் பின்னும் காதலன் போலவே...நடந்துக்க கூடது என்பது தான்...எவ்வளவு...கஷ்டம்...நாரதர் சொல்வது போல வந்தாலும்..குடும்பம் குடும்பம் தானே..அது ஏன் அப்படியே..இருக்க கூடாது...மனைவிமார்கள் இருக்கிறார்கள்..தானே சொல்லப்போனால்..திருமணத்தின் பின் தான் இன்னும் அன்பாக இருக்கிறார்களெ..அதை ஏன் கணவர்மாரும் செய்யக்கூடாது???(சாறி..நான் வடிவேலு சொன்னது போல சின்னப்புள்ளைத்தனமா கேள்வி கேட்டால் :? )
பிரியசகி நான் சொல்ல வந்தது திருமனத்திற்குப் பிறகும் காதல் இருக்கும்,ஆனால் அது திருமனத்திர்கு முன் இருந்த காதல் வயப்பட்ட செய்கைகள் போல் இருக்காது என்பது. நீங்கள் பாக்கும் பொழுது வெளியால் அப்படித் தெரிந்தாலும்.அவர்களுக்கிடயில் மனதில் இருக்கும்.மற்றது நடை முறை வாழ்வில் சிறு சிறு மனக் கசப்புக்கள் சண்டைகள் வெளி அழுத்தங்களால் நிகழ்ந்தாலும்,அவை உண்மயான புரிந்துணர்வு இருந்தால் அற்று விடும்.இந்த புரிந்துணர்வு எல்லாரிடமும் உருவாவதில்லை.பலர் இணை பிரியாக் காதலர்கள் போல் காட்டிக்கொண்டாலும் அவர்களில் ஒருவர் உண்மயாக நடக்கவில்லை என்றாலும் இந்த புரிந்துணர்வு அற்று விடும். முக்கியமாக இரட்டை வேடம் இடும் ஆண்கள்,பின்னர் தங்கள் உண்மயன முகத்தைக் காட்டும் பொழுது சிலரிற்கு காதல் மேலே வெறுப்பு ஏற்படுகிறது.ஆண்கள் எல்லோரும் அவ்வாறல்ல.ஆனல் துரதிஸ்ட்ட வசமாக பல பெண்கள் இந்த நடிப்பை உண்மை என்று நம்புவதே அவர்கள் ஏமாறுவதற்கான உண்மயான காரணம்.பெண்கள் நடிப்பவர்களை அடயாளம் கண்டு கொண்டால் ஏமாறாமல் இருக்கலாம்.இங்கே நான் சொல்லுவது பொதுவாக பலரது நடத்தைகளை அவதானித்தில் இருந்து எழுந்த விடயம்.

