10-30-2005, 06:55 AM
Aruvi Wrote:<b>சுடர்மட்டும் தானே ஓய்ந்தது
சுடர் தந்த நினைவுகள்
தணலாய் தகதகக்கத்
தொடரும் இடர் தனையே
இடக்கையால் தள்ளிவிட்டு
வெற்றிப் படிகளிலே உன்
வாழ்வுதனை எரியவிடு,
கோடி பிரகாசம் தரமுடியா போதினிலும்
நீ போகும் வழிதனிலே
வழிகாட்டியாயிருக்கும் </b>
நம்பிக்கையூட்டும் நல்ல பதில் கவி..!
சுட்டித் தங்கையே... பிரிவுகள் தாங்க முடியாதவை தான்...அவை நேராமல் பார்த்துக் கொள்வது தனி ஒரு மனத்தில் மட்டும் தங்கியில்லை.. பழகும் மற்றவர்களுக்கும் பிரிவின் கனதி தெரிய வேண்டும்...உணர வேண்டும்...அப்போதுதான் அன்பாய் பழகிப்... பிரிவதை தவிர்ப்பார்கள்...! மனிதர்கள் பலவிதம்... அவரவர் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப பழகி விட்டு... தமக்கு நேரத்துக்கு வாய்ப்பானது வரும் போது அதோடும் தொற்றிக்கொண்டு போய்விடுவார்கள்..! அன்புக்கு பழக்கத்துக்கு அங்கு பெறுமதியில்லை...! அவர்களில் சிலர் அவற்றை வேணும் என்றும் செய்வர்...சிலர் பேராசை சுயநலத்தில் செய்வர்...சிலருக்கு நிலையில்லா மனசு....அடிக்கடி மற்றவர்களை ஏமாற்றி தாம் மகிழ்வர்..சிலர் சூழ்நிலைக் கைதிகளாகியும் செய்வர்... எனவே பழகும் முதல் நீங்களே உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள் சரியானவரோடுதான் பழகிறோமா என்பதை...அதுவே வேண்டாத கண்ணீருக்கு முடிவு தரலாம்..! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

