Yarl Forum
பிரிவு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: பிரிவு (/showthread.php?tid=2698)



பிரிவு - வெண்ணிலா - 10-30-2005

<img src='http://img498.imageshack.us/img498/7353/sadbyfriendship0hg.jpg' border='0' alt='user posted image'>


<b>எங்கிருந்தோ ஓர் சுடர்
இங்கு வந்தது எனை நோக்கி
நன்கு சிலகாலம் கூடி மகிழ்ந்தது
அன்பு பெருக கோடி பிரகாசமாகியது
நாட்கள் மெல்ல நகர்ந்தன
நயவஞ்சகர் சிலரின்
நெஞ்சில் இருந்து வந்த
வஞ்சக மூச்சுக் காற்றால்
சுடர் ஓய்ந்தது
இடர் தொடர்கிறது....</b> Cry Cry


Re: பிரிவு - தூயவன் - 10-30-2005

Cry Cry Cry Cry


- MUGATHTHAR - 10-30-2005

ஏன் பிள்ளை இப்பிடி சோகமான கவிதைகளை எழுதி எங்களை அழ வைக்கிறீங்க...........


- அருவி - 10-30-2005

<b>சுடர்மட்டும் தானே ஓய்ந்தது
சுடர் தந்த நினைவுகள்
தணலாய் தகதகக்கத்
தொடரும் இடர் தனையே
இடக்கையால் தள்ளிவிட்டு
வெற்றிப் படிகளிலே உன்
வாழ்வுதனை எரியவிடு,
கோடி பிரகாசம் தரமுடியா போதினிலும்
நீ போகும் வழிதனிலே
வழிகாட்டியாயிருக்கும் </b>


- kuruvikal - 10-30-2005

Aruvi Wrote:<b>சுடர்மட்டும் தானே ஓய்ந்தது
சுடர் தந்த நினைவுகள்
தணலாய் தகதகக்கத்
தொடரும் இடர் தனையே
இடக்கையால் தள்ளிவிட்டு
வெற்றிப் படிகளிலே உன்
வாழ்வுதனை எரியவிடு,
கோடி பிரகாசம் தரமுடியா போதினிலும்
நீ போகும் வழிதனிலே
வழிகாட்டியாயிருக்கும் </b>

நம்பிக்கையூட்டும் நல்ல பதில் கவி..!

சுட்டித் தங்கையே... பிரிவுகள் தாங்க முடியாதவை தான்...அவை நேராமல் பார்த்துக் கொள்வது தனி ஒரு மனத்தில் மட்டும் தங்கியில்லை.. பழகும் மற்றவர்களுக்கும் பிரிவின் கனதி தெரிய வேண்டும்...உணர வேண்டும்...அப்போதுதான் அன்பாய் பழகிப்... பிரிவதை தவிர்ப்பார்கள்...! மனிதர்கள் பலவிதம்... அவரவர் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப பழகி விட்டு... தமக்கு நேரத்துக்கு வாய்ப்பானது வரும் போது அதோடும் தொற்றிக்கொண்டு போய்விடுவார்கள்..! அன்புக்கு பழக்கத்துக்கு அங்கு பெறுமதியில்லை...! அவர்களில் சிலர் அவற்றை வேணும் என்றும் செய்வர்...சிலர் பேராசை சுயநலத்தில் செய்வர்...சிலருக்கு நிலையில்லா மனசு....அடிக்கடி மற்றவர்களை ஏமாற்றி தாம் மகிழ்வர்..சிலர் சூழ்நிலைக் கைதிகளாகியும் செய்வர்... எனவே பழகும் முதல் நீங்களே உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள் சரியானவரோடுதான் பழகிறோமா என்பதை...அதுவே வேண்டாத கண்ணீருக்கு முடிவு தரலாம்..! <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Idea


- Mathan - 10-30-2005

ம் ஒருவர் அன்பை உதாசீனப்படுத்தி பிரிந்து செல்கிறார் என்றால் அவர் அந்த அன்புக்கு தகுதியற்றவர் என்று பொருள், தகுதியற்றவருக்காக வருந்தி உங்கள் வாழ்க்கையும் நேரத்தையும் வீணாக்க போகிறீர்களா? அதை மறந்து மகிழ்ச்சியாக வாழுங்கள்.


- shanmuhi - 10-30-2005

வெண்ணிலா குட்டிக்கு ஏன் இந்த சோகம்.


- Birundan - 10-30-2005

சுட்டி என்னாச்சுது.


- lollu Thamilichee - 10-30-2005

Mathan Wrote:ம் ஒருவர் அன்பை உதாசீனப்படுத்தி பிரிந்து செல்கிறார் என்றால் அவர் அந்த அன்புக்கு தகுதியற்றவர் என்று பொருள், தகுதியற்றவருக்காக வருந்தி உங்கள் வாழ்க்கையும் நேரத்தையும் வீணாக்க போகிறீர்களா? அதை மறந்து மகிழ்ச்சியாக வாழுங்கள்.


என் கருத்தும் இதுவே...


- வெண்ணிலா - 10-30-2005

MUGATHTHAR Wrote:ஏன் பிள்ளை இப்பிடி சோகமான கவிதைகளை எழுதி எங்களை அழ வைக்கிறீங்க...........

நானே அழுறேனாம். நீங்களும் ஒருநாளைக்கு அழுதால் என்னவாம்? ஆமா எப்ப இனிமேல் சிரிக்க வைக்கப்போறீங்க? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 10-30-2005

அருவியண்ணா குருவியண்ணா மதனண்ணா ஆகியோரது ஆறுதல் கவிக்கும் கருத்துக்கும் கோடி நன்றிங்க. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 10-30-2005

shanmuhi Wrote:வெண்ணிலா குட்டிக்கு ஏன் இந்த சோகம்.


நட்பின் பிரிவு தான் அக்கா. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 10-30-2005

Birundan Wrote:சுட்டி என்னாச்சுது.


சுட்டிக்கு ஒண்ணுமாகல்லை. பிரிவின் சோகம் தாங்க முடியல்லை. தற்ஸ் ஓல்


- Rasikai - 10-31-2005

கவிதை நன்று ரொம்ப சோகமா இருக்கு. வாழ்த்துக்கள்


- ப்ரியசகி - 11-01-2005

அழகான கவி நிலா...சோகத்தை விட்டு..கப்பியா இருங்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Vishnu - 11-01-2005

வெண்ணிலா Wrote:
shanmuhi Wrote:வெண்ணிலா குட்டிக்கு ஏன் இந்த சோகம்.


நட்பின் பிரிவு தான் அக்கா. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

பிரிவு என்பது உறவுக்காக தானே... இல்லையா?? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> சோகம் வேணாம்.. வெண்ணிலா....


- கீதா - 11-01-2005

நல்ல கவிதை வெண்ணிலா அக்கா தொடர்ந்து எழுதுங்கோ