10-30-2005, 02:36 AM
என்னுடைய இந்த பயண அனுபவம் நகைச்சுவை அல்ல.
நானும் மற்றும் எனது 3 உறவினார்களும் 2003ம் ஆண்டு இலங்கைக்கு சென்று இருந்தோம். நாங்கள் பாரிசில் இறங்கி மற்ற பிளைட் எடுக்க வேணும். ஆகவே நாங்கள் பாரிசில் மாறி இலங்கைக்கு காலை 7 மணிக்கு போனோம். எல்லா சேக்கிங் முடித்துக்கொண்டு லாக்கேச் எடுக்கும் பிரிவுக்கு சென்றோம். வழமை போல் 4 சூட்கேஸ் காணவில்லை. வந்தவற்றை எடுத்துக் கொண்டு அங்கு வேலை செய்பவர்களிடம் விசாரித்து கட்டார் எயர்லைன்ஸ் அலுவலகத்துக்கு சென்றோம். அங்கு இருந்தவர் எல்லா விபரங்களும் எடுத்து விட்டு நாளைக்கு உங்கள் லக்கேச் வருகுது வந்து எடுங்கள் என்றார். அதைக் கேட்டு பலர் ஒக்கேய் என்று போய் விட்டார்கள். நாங்கள் போகவில்லை. என்ன பிரச்சனை என்று கேட்க அதற்கு நாம் எங்களிடம் ஒரு லக்கேச்சும் இல்லை. உடுப்பு மாத்தக் கூட மாற்று உடுப்பு இல்லை அத்தோடு இன்று நாம் யாழ்ப்பாணம் போய் ஆகவேண்டும். இரண்டாம் நாள் கழித்து ஒரு திருமண வீட்டிற்காகத் தான் வந்திருக்கின்றோம். ஆகவே எங்களால் கொழும்பில் நிற்க முடியாது. அத்துடன் எங்களுக'கு பொக்கற் மணி தரவேணும். அப்போ அந்த சிங்கள அலுவலர் நோ அப்படியெல்லாம் செய்ய முடியாது. அந்த ரூல்ஸ் எல்லாம் இங்கு இல்லை என்று வாதடினார். நாங்கள் இல்லை என்று வாதாடி கடைசியாக எங்களுக்கு ஒவ்வொரு லக்கேச்சுக்கும் 2000 ரூபா தந்து அடுத்த நாள் யாழ்ப்பாணத்திற்கு அவர்களுடை செலவில் அவர்களே லக்கேச் கொண்டு வந்து தந்தார்கள்.
கள உறவுகளுக்கு நான் சொல்ல விரும்புவது உங்களுக்கும் இப்படியான அனுபவங்கள் ஏற்பாட்டால் அலுவலர்கள் சொல்வதை கேட்டு போகமால் அவர்களிடம் வாதாடி உங்களுக்கு உரியவற்றை வாங்கி செல்லுங்கள். எல்லா எயர்லைன்ஸ்க்கும் ஒரு கடமை உண்டு. லக்கேஸ் அவர்களின் தவறில் ஒரு இடத்தில் விடப்படும் என்றால் அவர்கள் அந்த பயணிக்கு அந்த லக்கேஸ் வரும் வரை பாவிக்க சோப்பிலிருந்து எல்லாமே கொடுக்கவேண்டும். பல நாடுகளில் அதற்காக ஒரு பொதி வைத்திருப்பார்கள். நீங்கள் அவற்றை எடுக்காவிடின் அந்த அலுவலர்கள் தான் உங்களின் பெயரை அதில் இட்டு எடுப்பார்கள். அன்று எம்முடன் வந்தவர்கள் பலர் அந்த ஒபிசரின் பேச்சைக் கேட்டு திருப்பினார்கள். அவர்க்குரிய அந்த பொக்கற் மணி எல்லாத்தையும் அந்த ஒபிசர் எடுத்திருக்க மாட்டார் என்று என்ன நிச்சயம்?