10-29-2005, 11:02 PM
விஜயனும் அவனது நண்பர்களும் ( 4000 பேர் என்று நினைக்கின்றேன்) நாடு கடத்தப்பட்ட போது வந்தடைந்தது இலங்கையில் அங்கு வேடுவ(இயக்கர் இனம்) பெண்ணான குவேனி விஜயனின் அழகில் மயங்கி அவனைத் திருமணம் செய்தாள். பின் குவேனியை விஜயன் கலைத்து விட்டு தனக்கும் தன் நண்பர்களுக்கும் தென்னிந்தியாவிலிருந்தே பெண்களை (இவர்கள் பாளி மொழி பேசுபவர்கள் தமிழர்கள் அல்ல) வரவழைத்துத் திருமணம் செய்தனர். குவேனியின் வழித்தோன்றல்கள் இப்போதும் வேடர்களாக இலங்கைக் காடுகளில் வாழ்கின்றனர். விஜயனின் வழித்தோன்றல்களே தற்போதய சிங்கள இன மக்கள். நாகர் இன மக்களே தற்போதுள்ள தமிழர்கள். இது இராவணனின் காலத்திற்கு பிற்பட்ட சரித்திரம்.

