10-29-2005, 01:40 PM
பயத்தில் உடல் நடுங்க நான் கிறித்துவ இறைவன் துதியை உரக்கச்சொல்லியபடி கதவைக்கூட மூடாது வீட்டைவிட்டு வெளியே சென்றுவிட்டேன். அதன்பின் சிறிது நேரம் கழித்து அம்மாவைத்துணைக்கு அழைத்துக்கொண்டு மீண்டும் வந்தேன். அப்போது எந்த சத்தமும் இல்லை. எதுவும் நடைபெறாதது போல வீடு அமைதியாக மாறிவிட்டிருந்தது.
அதன்பின் இரண்டொரு நாளில் நான் நடந்த சம்பங்களை மறந்து எனது வேலையில் மூழ்கிவிட்டேன். ஒரு வாரம் கழித்து மீண்டும் வீட்டைச் சுத்தம் செய்ய அங்கே போகவேண்டியதாகிவிட்டது. அன்று வீட்டைச்சுற்றம் செய்து நாயை வெளியே விட்டு சிறிது நேரம் செய்தித்தாள் படிக்க அமர்ந்தேன். எங்கோ ஒரு புத்தகத்தில் பேய்களை எதிர்பார்த்துச்சென்றால் அவை எதிர்ப்படாது என படித்த ஞாபகம். அது உண்மையில்லை என தெரிந்தது. சிறிது நேரத்தின் பின் மீண்டும் முதல்த்தடவை கேட்டது போல கொக்கரித்துச் சிரிக்கும் சத்தம். இந்தத்தடவை மிகவும் பயந்துவிட்டேன் என்று சொல்லலாம்.