Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீதி(க்கதைகள்)
#4
காட்டில் அலைந்து கொண்டிருந்த போது ஒரு மிதப்பான ஓநாய் புதர்களுக்கிடையே ஒரு முயல் ஒளிந்து கொண்டிருப்பதைப் பார்த்தது. உடனே அதைத் துரத்த ஆரம்பித்தது. சுவாரஸ்யமான துரத்தல், கீழ்க்கோர்ட்டில் முன் ஜாமீன் வாங்கி அது கிடைக்காமல் மேல் கோர்ட்டில் அப்பீல். அங்கே கேஸ் தோற்றுப் போய் உச்சநீதிமன்றத்தில் ரிட். இப்படி மெதுவானதாக இல்லாமல் விரைவானதுடிப்பான துரத்தல். அதை ஒரு ஆடோட்டும் சிறுவன் பார்த்துக் கொண்டிருந்தான்.
என்ன வேகமாகத் துரத்தினாலும் முயலை பிடிக்க முடியவில்லை. கடைசியில் முயல் தப்பித்துப் போய் விட்டது. களைத்துப்போன ஓநாயை, சிறுவன் சிரித்துக் கொண்டே கேட்டான். ''என்னப்பா... இவ்வளவு பெரிய ஓநாயா இருக்கே, உடம்பில் மயிர் அடத்தியுடன் வலுவான கால்களில் எல்லா சக்தியும் வைத்திருக்கிறாய். இத்தனை விரைவாக ஓடுகிறாய். கேவலம் ஒரு முயலை பிடிக்க முடியவில்லையே'' என்றான். ஓநாய் சிறுவனை அலட்சியமாகப் பார்த்தது. ''பிடிக்க முடியவில்லைதான். ஆனால் அதன் ஓட்டத்துக்கும் என் ஓட்டத்துக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. கவனித்தாயோ? நான் என் உணவுக்காக ஓடினேன். அது தன் உயிருக்காக ஓடியது.''

நீதி: உயிராசை மிக அதிசயமான தகுதிகளைக் கொடுக்கும்.

நன்றி:
எம்பரர்
[i][b]
!
Reply


Messages In This Thread
பாவனை - by சாமி - 11-11-2003, 09:26 PM
மனமாற்றம் - by சாமி - 11-11-2003, 09:28 PM
நீதி: உயிராசை மிக அதிச - by சாமி - 11-24-2003, 09:04 PM
[No subject] - by veera - 11-26-2003, 01:00 PM
[No subject] - by Thiyaham - 09-09-2004, 04:28 AM
[No subject] - by சாமி - 09-12-2004, 11:18 PM
[No subject] - by kavithan - 10-06-2004, 11:05 PM
பத்திரம் - by சாமி - 10-06-2004, 11:14 PM
[No subject] - by tamilini - 10-06-2004, 11:20 PM
[No subject] - by kavithan - 10-06-2004, 11:20 PM
வாபஸ் - by சாமி - 10-23-2004, 11:34 PM
[No subject] - by Sriramanan - 10-24-2004, 03:21 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)