10-29-2005, 08:15 AM
Jude Wrote:இந்த கருத்துக்கு ஆதாரம் தருவீர்களா? போரால் பாதிக்கப்பட்ட, எந்த நாடுகள் முதலில் சமவுடமை பொருளாதாரத்தாலும் பின்னர் முதலீட்டு பொருளாதாரத்தாலும் முன்னேறியுள்ளன?
உண்மையில் இரண்டாம் உலகப்போரின் பின் ஜேர்மனி, ஜப்பான், சிங்கப்புூர், கொரிய போரின் பின் தென் கொரியா, சீன புரட்சியின் பின் தாய்வான் போன்ற பல நாடுகள் நேரடியாக முதலீட்டு பொருளாதாரத்தை தழுவியே வளம் செறிக்கும் பணம்படைத்த நாடுகளாக வளர்ச்சியடைந்திருக்கின்றன.
சினாவைத் தயக்கமின்றி கூறலாம். பின்லண்ட் உம் சோசலிச பொருளாதாரக் கொள்கையில் தான் 2ஆம் உலகப்போரில் சிதைவடைந்த நாடு, கடன்பட்டு infrastructure கட்டி எழுப்பி அந்த கடனை அடைத்த பெருமையுண்டு.
மூதலீடு என்பது இலாபநோக்கோடு தான் என்றும் மேற்கொள்ளப்படுவது ஆனால் பொருளாதார இலாப நோக்கோடுதான் நீங்கள் கூறும் நாடுகளில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டனவா? 2ஆம் உலகயுத்த முடிவின் பின்னர் போரினால் அழிந்த மற்றய நாடுகள் போல் மேற்கு யேர்மனி அதிவிசேட உதவிகளின்றி தன்னை மீளக்கட்டி எழுப்ப முற்பட்டது, ஆனால் தோல்வி கண்டது. மக்கள் போராட்டங்கள் ஆட்சி மாற்றங்கள் என வந்தது. இது முதலாளித்துவ பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் மேற்குலகத்திற்கு ஒரு பிரச்சாரப்பிரச்சனை. காரணம் கிழக்கு யேர்மனியை விட மேலான வாழ்வுத்தரத்தை காட்டவேண்டும். மேலும் 1வது உலக யுத்தத்தின் பின்னர் உருவான பொருளாதாரப் பிரச்சனைகள் வேலையில்லாத்திண்டாட்டங்கள் தான் மக்களை பாசிசவாதத்தை எற்றுக் கொள்ளும் மனநிலையை உண்டாக்கியது எனவும் உணரப்பட்டது. இதன் விளைவுதான் மார்சல் பிளான்.
யப்பானை அணுகுண்டு போட்டு அழித்த பொறுப்பினால் யப்பானிற்கு விசேட முதலீடுகள் வணிகச் சலுகைகள் வழங்கப்பட்டது அமெரிக்காவினால். கெரிய யுத்தக்காலத்தில் சிங்கப்பூர் அதன் பூகோள நிலையில் பின்தளமாக செயற்பட்ட தால் முதலீடுகள் வந்தன (யப்பானும் இதனால் ஓரளவு பயனடைந்தது). தென்கொரியாவிற்கு உதவிகள் (முதலீடுகள், ஏற்றுமதி வியாபாரச் சந்தர்ப்பங்கள் ) வழங்கப்பட்டது வடகொரியாவைவிட உயர்நிலையில் காட்டவேண்டி பிரச்சார தேவையினால். தாய்வானை பொருளாதாரரீதியலி தன்னிறைவடைந்த ஒரு சுயாதின நிர்வாக கட்டடைமைப்பாக உருவாக்குவதற்கு பெருளாதாரவிதிகளுக்கு அப்பாற்பட்ட விதிகள் அங்கு மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளை தீர்மானித்தன.
அரசியல் இராஜதந்திர பின்னணியின்றி பொருளாதார அடிப்படையில் மாத்திரம் நீங்கள் கூறிய நாடுகளுக்கு முதலீடுகளும் அது சார்ந்த சந்தைப்படுத்தல் சந்தர்ப்பங்களும் கிடைத்திருக்குமா?
தாய்வான் யப்பான் சிங்கப்பூர் தென்கொரியா தயாரிப்பாளர்களுக்கு சந்தையையும் தொழிலாளர்களிற்கு தொழில்வாய்ப்பையும் விரும்பி தெரியாமல்த்தான் இழக்கிறார்களா?

