10-29-2005, 01:35 AM
சோவியத்தில் மட்டுமல்ல எந்தவொரு நாட்டிலும் கம்யுூனிசம் வெற்றிகரமாக நீடித்து நிற்கவில்லை என்பது நடைமுறை வரலாறு. அந்தந்த நாடுகளின்; ஆட்சியளர்களின் பிழையான கையாழுதனினால்தான் கம்யுூனிசம் தோல்வியுற்றது இல்லாவிடின் அது வெற்றியடைந்திருக்கும் என்ற விவாதம் பரவலாக உண்டு. ஒன்று அல்லது இரண்டு அல்லது சில இடங்களில் இந்த சிக்கல் ஏற்பட்டால் இந்த விவாதம் சற்று வலுவானதாக கொள்ளக்கூடியதாகவிருக்கும். ஆனால் எல்லா இடத்திலும் இப்படியானதொரு சிக்கல் ஏற்பட்டிருப்பதால் கொள்கையில் ஒரு பாரிய சிக்கல் உள்ளதென்பது தெளிவு. கொள்கை என்பது நாட்டின் மக்களின் இயல்புகளிற்கேற்ப வளர்ச்சி விரிவாக்கத்திற்கேற்ப இருத்தல் வேண்டும். மாறாக ஒரு கொள்கையை வரைந்து விட்டு அதற்கேற்றபடி நாட்டையும் மக்களையும் வழிநடத்த முனைந்தால் நிலைமை சிக்கலாகவமைய நிறையவே சாத்தியமுண்டு.
மேற்குலக முதலாளித்துவம் என்று பொதுப்படையாக சொன்னாலும் உலகமயமாக்கலின் இன்றைய உச்சகாலத்தில்கூட முதலாளித்துவத்தின் பலவானான அமெரிக்கா விவசாயம் இறக்குமதி ஏற்றுமதி மற்றும் பலவற்றிற்கும் மானியமுறை மூலம் பக்கபலமூட்டி வருகின்றது. இது கம்யுூனிசத்தின் ஒரு மூல அம்சம்.
முதலாளித்துவம் கம்யுூனிசத்தைப் போல தன்னைச் சுற்றி ஒரு வட்டத்தினை வரைந்துவிட்டு அதற்குள் மட்டும் நின்று சுற்றிச்சுழன்று கொண்டிருக்கவில்லை. தேவைக்கேற்றபடி நீள அகலங்களை மாற்றியமைத்துக் கொண்டது. அவசியமான சந்தர்ப்பங்களில் வட்டத்திற்கு வெளியேயும் செல்லத்தயாராயிருந்தது. அந்த பண்பு கம்யுூனிசித்திடம் இருக்கவில்லை. மாக்சு என்ன சொன்னாரோ அல்லது லெனின் என்ன வழி முறைகளை கடைப்பிடித்தாரோ அதை அப்படியே அடியொற்றி செல்லவே அது முயன்றது, புவியியல், மக்கள் பண்பாட்டு பழக்க வழக்கமுறைகளுக்கேற்ப இது தன்னை மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கவில்லை.
முதலாளித்துவத்;தின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் தனிமனித நடத்தை காரணமாயமையக்கூடும். எனவேதான் உரிய பாதையில் செலுத்த கடிவாளம் தேவை