10-28-2005, 08:39 PM
என்னுள்ளே கருத்தரித்து
நிறைமாதமான
என்குழந்தை வெளியே வரத்
தயங்குகின்றது.
தயங்குகாதே என்
அஞ்சுகமே
மட்டுறுத்துனர் பெருமளவில்
கூரான கத்தியுடன்
கூசாமல் காயடிப்பர் என்றஞ்சி
நீ கருவறையில்
காலமெல்லாம் காத்திருக்க போறாயா?
வறுமையும் சச்சரவும் பெரும்
புலவர்கள் சொத்தென்பதை
மறந்தவர்கள்.
கல்லறையும் கருத்தரிக்கும்
என்றான எம்மவர் சுதந்திரமாய்
கருத்தெழுத மட்டுறுத்துனர்
இறுக்கத்தில் மலடாகி மாண்டிடுவோம்
என்றா நீ கருவறைக்குள்
துயிலுகின்றாய்.. சத்திரசிகிச்சையினால்
முகமிழந்துபோய்விடுமென்று
கருவறைக்குள் கருக்கலைந்து
போகாதே வா வா வெளியே
பீனிக்ஸ் பறவைபோல சாம்பலிலிருந்தும்
உயிர்பெறுவோம்
நிறைமாதமான
என்குழந்தை வெளியே வரத்
தயங்குகின்றது.
தயங்குகாதே என்
அஞ்சுகமே
மட்டுறுத்துனர் பெருமளவில்
கூரான கத்தியுடன்
கூசாமல் காயடிப்பர் என்றஞ்சி
நீ கருவறையில்
காலமெல்லாம் காத்திருக்க போறாயா?
வறுமையும் சச்சரவும் பெரும்
புலவர்கள் சொத்தென்பதை
மறந்தவர்கள்.
கல்லறையும் கருத்தரிக்கும்
என்றான எம்மவர் சுதந்திரமாய்
கருத்தெழுத மட்டுறுத்துனர்
இறுக்கத்தில் மலடாகி மாண்டிடுவோம்
என்றா நீ கருவறைக்குள்
துயிலுகின்றாய்.. சத்திரசிகிச்சையினால்
முகமிழந்துபோய்விடுமென்று
கருவறைக்குள் கருக்கலைந்து
போகாதே வா வா வெளியே
பீனிக்ஸ் பறவைபோல சாம்பலிலிருந்தும்
உயிர்பெறுவோம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

