10-28-2005, 08:22 PM
tamilini Wrote:[.!
எண்ணிப்பார்ப்போம் சோதரியே
ஏக்கங்கள் உனக்குள்ளும்
எக்கச்சக்கமாய்
தேக்கி ஏன் வைக்கிறாய் ?
துணிந்து வா பெண்மையே..!
தூய்மையாய் ஓர் உலகம்
துரிதமாய் அமைப்போம்.
ஆக்கமும் அழிவும்
துணிந்த எங்கள் கையிலே..!
ஆக்குவோம் நல்லவற்றை
அழிப்போம் அராஜகத்தை
அடிமை விலங்கிற்கு
விலங்கிட்டு
புரட்சி செய்வோம்.
பெண்மை மென்மை என்ற
இயலாமையை நீக்கி
பெண்மை வல்லமை என்று
அர்த்தம் செய்வோம்.
வெண்மையாய் மிளிரவும்.
கருமையாய் எரிக்கவும்
கற்றுக்கொள்வோம்.
பேதையாய் ஒரு வாழ்வு
பேச்சிற்கும் வேண்டாம்.
வாராய் சோதரி
வல்லமையோடு
வாழ்வோம்
வாழவைப்போம்
வாழ்ந்து காட்டுவோம்..!
அந்த துணிவு தான் நிச்சயம் வேண்டும். நீண்ட நாட்களுக்கு பின் கவி கண்டதில் மகிழ்ச்சி.
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

