06-22-2003, 08:45 AM
வரலாற்றின் ஒவ வொரு வளர்ச்சிக் கட்டங்களிலும் குடும்பம் என்ற அமைப்பும் அது தொடர்பான கருத்து நிலையும் மிகவும் சிக்கல் வாய்ந்த வளர்ச்சிப் போக்கையே காட்டி வருகின்றது. சமூகமே குடும்பமாக இருந்த ஆதிகால சமூக அமைப்பிலிருந்து மெல்ல மெல்ல மாறி இன்று ஒவ வொரு குடும்பமுமே தனித் தனிச் சமூகமாக, குடும்ப உறுப்பினர்களே தனித் தனித் தீவுகளாக மாறும் காலப் பகுதியில் நாம் வாழ்கின்றோம்.
அடித்தளம் பலமானதா..?
ஒருவனை ஏனையவர்களிலிருந்து தனித்துவமானவனாகக் காட்டும் உடல், உள, சமூக, அறநெறிப் பண்புகளும், இப்பண்புகளுக்கு இடையிலான இடைவினைத் தொடர்புகளும், சூழலுடன் இவை ஒத்திசைவாகவோ, முரண்பட்டோ இயங்கும் தன்மையும் ஒன்றிணைந்த ஒரு கலவையே ஆளுமையெனக் கருதப்படுகிறது. தோற்ற அமைவு, சிந்தனைகள், அனுபவங்கள், கற்பனைகள், விருப்பங்கள், பழக்கவழக்கங்கள், நடையுடை பாவனைகள் அனைத்துமே ஆளுமைக்குள் அடங்கியிருக்கும்.
மனித வளர்ச்சிக் கட்டங்களில் முதல் ஐந்து ஆண்டுகளிற்தான் ஆளுமை விருத்திக்கான அடித்தளம் போடப் படுகிறது எனக்கூறும் உளவியலாளர் குழந்தையின் உடலமைப்பு, குழந்தை வாழும் சுற்றுச்சூழல்கள், குழந்தை பெறும் அன்பின் அளவு, குழந்தை எதிர்கொள்ளும் எதிர்பாராத நிகழ்வுகள், குழந்தையின் வாழ்வில் நிகழும் ஆளிடைத்தொடர்புகள குடும்பத்தினரின் பொருளாதாரநிலை, குடும்பத்தினரின் நடத்தைப் போக்கு என்பன குழந்தைப்பருவ ஆளுமையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை வலியுறுத்துகின்றனர்.
குழந்தைப் பருவத்தின் முக்கியத்துவம் தொடர்பாக தமிழ்ச் சமூகம் மற்றவர்களைவிட முன்கூட்டியே சிந்திக்கத் தொடங்கிவிட்டது என்பதை கோடிகாட்டுவதாக "தொட்டில் பழக்கம்", "இளமையில் கல்வி", "ஐந்தில் வளையாதது" போன்ற சொற்றொடர்கள் அமைந்தாலும்கூட, குழந்தையின் உடல் உள மேம்பாட்டில் கவனம் செலுத்தி குழந்தையின் ஆளுமையை வளர்ப்பதற்குப் பதில் இறுக்கம் நிறைந்த, பழமைவாத கருத்தியல் அச்சுக்களில் வார்ப்பதற்கான தயார்ப்படுத்தல்களுக்கே இவை பெரிதும் உதவின என்ற கசப்பான உண்மையையும் நாம் மனதில் கொண்டேயாக வேண்டும்.
குழந்தையின் முதலாவது உலகம்
கருவறை தொடக்கம் கல்லறை வரை மனித ஆளுமையை வடிவமைப்பதில் சமூக அமைப்புக்கள் வகிக்கும் பங்கு அளவிடற்கரியது. சமூகம் ஒன்றின் சிக்கல் வாய்ந்த தன்மையைத் துல்லியமாக வெளிக்காட்ட உதவும் இவ வமைப்புக்களில் முதன்மையானதும் முக்கியமானதும் குடும்பமும் அதன் சுற்றுப்புறச்சூழலுமே. மனிதப் பண்புகளின் வளர்ப்புப் பண்ணைகளாகக் கருதப்படும் குடும்பம் என்ற ஆதார அமைப்பே பாடசாலை செல்லமுன்னர் உள்ள முதல் ஐந்து ஆண்டுகாலப் பகுதியில் குழந்தை ஆளுமை விருத்தியின் போக்கை நிர்ணயிக்கும் ஆற்றல் மிக்க கருவியாக அமைகிறது.
அன்பும், கவனிப்பும், நல்ல பண்புகளும், சேவை மனப்பாங்கும் நிறைந்த குடும்பத்தில் வளரும் குழந்தை சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உடல் உள மேம்பாட்டுடன் வளர்வதுடன் குடும்பத்தின் மேம்பாட்டையும் உயர்த்தும்.
"குழந்தையின் முதல் ஆறு ஆண்டுகளின் வாழ்க்கையை என்னிடம் ஒப்படையுங்கள். அதன் பின் அதன் வாழ்க்கை அமைப்பை எப்படிப்பட்டவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர் என்பது பற்றி எனக்குக் கவலையில்லை" என்று இற்றைக்கு இருநு}று ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்ட சுவிஸ் கல்வியியலாளரான பெஸ்ரலோசியின் கூற்றிலிருந்து குழந்தை ஆளுமை விருத்தியில் குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள முடியும்.
பண்பாட்டுப் படையெடுப்புக்கள், மனிதனைப் புூகோளப் பிராணியாக்கியிருக்கும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிகள், பெண்ணியச் சிந்தனைகள் போன்றவற்றால் குடும்பம் என்ற அமைப்பு முறிந்தும் சிதைந்தும் உருமாறியுள்ள போதும் உலகின் பெரும்பாலான இடங்களில் மனித ஆளுமையை வடிவமைக்கும் ஆதிக்கம் வாய்ந்த அமைப்பாகவே இன்றும் நிலைகொண்டிருக்கின்றது.
முதல் உலகின் முரண்கள்

குடும்பங்களுக்கிடையிலான சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அடிப்படை முரண்பாடுகளை தோற்றுவிக்கக்கூடியவை என்பது உண்மைதான். ஆனாலும் குடும்பத்திற்குள்ளே நிலவும் முரண்பாடுகள் குழந்தை ஆளுமையை மிக மோசமாகப் பாதிக்கக்கூடியவை. விருப்பமற்ற திருமணம், புரிந்துணர்வற்ற வாழ்க்கை, அறியாமை, செயலின் காரண காரியத் தொடர்பறியாத மேம்போக்கான வாழ்நிலை, முழுக்க முழுக்க இன்னொருவரில் தங்கியிருக்கும் பெண்களின் வாழ்க்கை, சமூகச் சீரழிவுகளின் பலிக்கடாக்களாக பெண்களே அதிகமாய் இருத்தல் என்பன குடும்பத்திற்குள்ளே பல மறைமுகப் பாதிப்புக்களை ஏற்படுத்தவல்லது. குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையில் ஒன்றில் அதீத கவனம் - அதீத அரட்டை, புறக்கணிப்பு - ஒத்துழைப்பு, பணிவு - அதிகாரம், பிணைப்பு - ஒதுக்கம், சுதந்திரம் - கட்டுப்பாடு என்று ஒன்றிற்கொன்று முரண்பட்ட இரு தீவிர முனைகளைக் கொண்ட தொடர்புத் தன்மை நிலவுவதற்கு இம் முரண்களே காரணமாகின்றன.
குடும்பமும், சுற்றுப்புறச் சூழலும் யுத்த நெருக்கடிகளினால் சிதறுண்டு போதல், ஒன்றுக்கொன்று முரண்பட்ட பண்பாட்டு அம்சங்களைக்கொண்ட குடும்பங்கள் ஓரிடத்தில் பின்னப்படுதல், சமூகத்தின் சமூக, பொருளாதார, புவியியல் அம்சங்களுக்கு இசைந்துபோகக்கூடிய வகையில் குழந்தை வளர்ப்புத் தொடர்பாக ஆய்வுகள் செய்வதை விடுத்து மேலைத்தேய கருத்தியல்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட பிரயோகங்களை அப்படியே உள்வாங்குதல், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் இரட்டைச்சுமை காரணமாக குழந்தைக்கும் தாய்க்குமிடையிலான பிணைப்பில் மாற்றம் என்பன முதல் உலகின் முரண்களை மேலும் அதிகரித்திருக்கின்றன.
குடும்ப வாழ்க்கையின் சுமுகமற்ற நிலைக்கு இந்த முரண்களே காரணம் என்பதை அறியாமல் அல்லது அறியவிரும்பாமல் இந்த முரண்களால் உள்ளுக்குள் நொருங்கி சிதிலமடைந்து கொண்டு போகும் குடும்ப அமைப்பை இழுத்துப்பிடித்து, ஒட்டுப்போட்டு முழுமையாகக் காட்ட மேற்கொள்ளப்படும் பிரயத்தனங்கள் மீண்டும் மீண்டும் தீர்வுகாண முடியாத முரண்களுக்கே இட்டுச்செல்லும் என்பதை படித்த சமூகமே உணராமல் இருப்பதுதான் இங்கு ஆச்சரியத்திற்குரியது.
ஆட்டம் காணும் அறிதல் தளம்
முதல் மூன்று ஆண்டுகளில் ஒரு குழந்தை கற்கும் அளவைப்போல் அதன் வாழ்க்கையில் வேறு எந்த மூன்று ஆண்டுகளிலும் கற்பதில்லை" என்கிறார் இருபதாம் நு}ற்றாண்டின் சமூகவியல் போக்கின் நடுநாயகம் எனப்போற்றப்படும் அமெரிக்க கல்வியியலாளர் ஜோன் பீவே. பிறந்த 10-12 மாதங்களுக்கு உள்ளாகவே (சில சமயம் அதற்கும் முதல்) தனது முதலாவது சொல்லை சுத்தமாக உச்சரிக்கும் ஆற்றல் பெற்ற குழந்தை 11ஃ2-2 வயதுக்கிடையில் சொற்களை இணைத்துப் பேசும் ஆற்றலைப் பெறுகின்றது. 3-4 வயதுக்கிடையில் ஒரு குழந்தையின் சொல்லாட்சி 1500 சொற்களையும் தாண்டுவதாக மொழியியல் கணிப்பீடு ஒன்று கூறுகின்றது.
குழந்தையின் அறிதல் திறன் 11ஃ2-5 வயதுக்கிடையில் அபரிமித வளர்ச்சியடைவதுடன் இரண்டு வயதுவரை மொழியின் உதவியின்றி வெறும் புலன்களதும், உடல் இயக்கத்தின் உதவியுடனுமே இது வளர்கின்றது. புலன்களிலிருந்து மறைக்கப்பட்ட அனைத்துமே மறக்கப்படுகின்றன. புலன்வழித் தொடர்பே முக்கியம் பெறுவதால் ஓரிரு தடவை வந்துபோகும் சொற்களைவிட குழந்தையின் செவியில் திரும்பத்திரும்ப ஒலிக்கும் சொற்களும், குழந்தையைச் சூழ நடப்பவைகளும் குழந்தை மனதில் கல்லில் எழுத்துப்போல் ஆழப்பதிந்துவிடுவது தவிர்க்க முடியாததாகும்.
பெரும்பாலான குடும்பங்களில் குழந்தைப் பராமரிப்பு அதனிலும் ஓரிரு வயது கூடிய குழந்தைகளின் கையிலேயே ஒப்படைக்கப்பட, வேலை பார்க்கும் நடுத்தரக் குடும்பங்களிலோ படிப்பறிவு குறைந்த பராமரிப்பாளரின் கரங்களிலேயே குழந்தையின் பெரும் பொழுது கழிகிறது. இதனால்தான் எண்ணற்ற விளையாட்டுப் பொருட்களை குழந்தை முன் பரப்பிவிட்டு தம்பணி முடிந்ததாகக் கருதும் பெற்றோர்களதும், வீட்டிலிருக்கும் சொற்ப நேரத்துக்குள் நற்பண்புகளைத் திணிக்க முனையும் வேலை பார்க்கும் பெற்றோர்களதும் குழந்தைகள் மொழித்திறன் பெறும் வாய்ப்பின்றி, பண்பற்ற சூழலில் வளரும் எதிர் வீட்டுக் குழந்தையினதும், அதனைத் து}ஸணை வார்த்தைகளால் குளிப்பாட்டும் தந்தையினதும் சொல்லாடல்களை இறுகப் பற்றிப்பிடிக்கும் இக்கட்டு நிலையை கவலையுடன் உள்வாங்க வேண்டியுள்ளது.
இதைவிட முக்கியமான அம்சம் ஒன்றும் உள்ளது. சிலேடைப் பேச்சுக்களுக்கும், அடுத்தவர்களைக் கண்டிக்கவோ, அச்சமூட்டவோ, விமர்சிக்கவோ சொற்களை விட அங்க அசைவுகளை அதிகம் பயன் படுத்துவதற்கும், வெருளி, மொக்கு, தடிச்சி போன்ற ஒற்றைச் சொல்லிலேயே விடயத்தின் முழுப் பரிமாணத்தையும் விளக்குவதற்கும் பெயர் பெற்ற குடும்பங்களில் குழந்தைகளின் இந்தக் குறிப்பிட்ட பருவத்திற்குள் பெறக்கூடிய அறிதல் திறனை இழந்து விடுதல் ஆச்சரியமில்லை.
"செய்யாதே" பல்லவி
முழுக்க முழுக்க பிறரின் அரவணைப்பிலேயே தங்கியிருக்கும் 11ஃ2 வயது வரையிலான குழவிப் பருவத்திலிருந்து மெல்ல விடுபட்டு தனித்தியங்கும் ஆற்றலுக்குள் காலடி வைக்க முயற்சிக்கும் பருவமாக தளர்நடைப் பருவம் அமைகிறது. இப்பருவத்தின் பிரதான குணாம்சங்களில் ஒன்றான அதிகூடிய உடல் இயக்க வளர்ச்சி காரணமாக குழந்தை அதிக சுறுசுறுப்பைக் காட்டும். முன் நோக்கியோ பின் நோக்கியோ நடக்கவும் ஓடவும், பெற்றோர் காட்டிக் கொடுக்காத பலவற்றை தானே முயன்று செய்யவும் து}ண்டும் இப் பருவத்தில் குழந்தை தனது தனித்தியங்கும் ஆற்றலை தானே சோதித்துப் பார்க்கும்.
"தனித்தியங்கும் மனித உயிரியாக தன்னைக் கருதும் உணர்வே தன்னைச் சூழவுள்ள உலகுடன் தன்னை இசைவித்துக் கொள்வதற்கான ஆற்றலைத் தீர்மானிக்கிறது" எனக்கூறும் எறிக்சன் என்னும் சமூக உளவியல் அறிஞர் சமூக பொருளாதார, குடும்ப சூழலைப் பொறுத்து இந்த ஆற்றல் தீர்மானிக்கப்படும் எனவும் குறிப்பிடுகிறார். தனித்தியங்கும் விருப்பே ஆராய்வுூக்கத்தின் ஆரம்ப கட்டமாக இருப்பதனால் தனக்குப் போதியளவு பாதுகாப்பும் அன்பும் உண்டு என்ற நம்பிக்கையுள்ள குழந்தை இரண்டு வயதுக்குள்ளேயே புது முயற்சிகளில் இறங்கத் தொடங்கிவிடும்.
கண்டதையும் எடுத்துப் பல்லால் கடித்தல் பற்களின் பலத்தைச் சோதித்துப் பார்க்கவும், பொருட்களை இழுப்பதும் தள்ளுவதும் கண்ணுக்கும் கைகளுக்குமுள்ள தொடர்பை உறுதிப்படுத்தவுமே என்பது பல பெற்றோருக்குத் தெரிய வாய்ப்பில்லை. "பொத்திப் பொத்தி வளர்த்தல்" என்ற அதீத கவனிப்பினால் சுயமாக இயங்கவிடாது மாறி மாறி காவிக்கொண்டு திரிதல், தொட்டில்கள், வாளிகள், ஏணைகள் போன்றவற்றுக்குள் குழந்தையை நீண்ட நேரம் சிறைப்படுத்தி வைத்தல், உடையும் பொருட்களை குழந்தையின் கண் முன்னே விடாது முன்னெச்சரிக்கையுடன் அப்புறப்படுத்துவதை விடுத்து குழந்தை அழ அழ பலவந்தமாக அதனிடம் இருந்து பறித்தல் போன்றன குழந்தையின் தனித்தியங்கும் ஆற்றலைச் சிதைத்து ஒன்றில் எதற்கெடுத்தாலும் எதிர்நடவடிக்கையில் இறங்கும் ஆக்கிரமிப்பு மனோபாவத்தை அல்லது பயந்து அழும் தாழ்வுணர்ச்சியை அதிகரிக்கச் செய்யும் என்பதைப் பெற்றோர் மறந்து விடுகின்றனர்.
சாப்பாடு தீத்தும்போது பாத்திரத்தை குழந்தை பறிக்க முனைவது தானும் அது போல் செய்ய நினைக்கும் ஆராய்வுூக்கம் என்பது மட்டுமல்ல, இதனை உணர்ந்து கொட்டுப்படாத பாத்திரம் ஒன்றில் சிறிதளவு போட்டுக் கொடுப்பதன் மூலம் குழந்தைதானே அழகாகச் சாப்பிடக்கூடிய ஆற்றலை வளர்க்கும் தாய்மார்களின் குழந்தைகளுக்கு இருக்கும் உடல் ஆரோக்கியம், இடியப்ப உரலில் பிழிந்த சோற்றுப் பசையையும் முட்டையையும் இடித்து இடித்து தீத்தும் தாய்மாரின் குழந்தைகளுக்கு இல்லை என்பது வேதனைக்குரிய தொன்றாகும்.
சொல்லை வென்றிடும் செயல்
'பார்த்துச் செய்தல்' என்னும் பண்பு மனித வாழ்வின் அனைத்துப் பருவங்களுக்கு முரிய பொதுப்பண்பு எனினும் புலன்வழித் தொடர்பிலேயே பெரிதும் தங்கியிருக்கும் குழந்தைப் பருவத்தின் முதன்மைப் பண்பாகவும் இது கருதப்படுகின்றது. இதன் காரணமாகத்தான் சுற்றுப்புறச் சூழலுடன் நெருக்கமான தொடர்பைப் பேணும் பாடசாலைப் பருவத்திலும் கூட சோறு சமைக்கும் விளையாட்டையோ, கையில் அகப்படும் துவாய், துணிகளை கொண்டையாகச் சுற்றிக்கொண்டு அம்மா வேடம் போடுவதையோ குழந்தைகள் கைவிடுவதில்லை.
கோயில் உள்ள ஊரில் சூரன் போர், புூசை பண்ணுதல், தவில், நாதஸ்வரம் வாசித்தல் என்பனவும், குளங்கள் அதிகம் உள்ள ஊரில் குளங்கட்டி கலிங்கு பாயப் பண்ணுதலும், சில அங்குலமே முளை விட்ட பனம் விதை 'கிரனைட்' ஆக மாறுவதும், பென்சில் வைக்கும் பெட்டி 'வோக்கி'யாக மாறுவதும் சூழலுடன் குழந்தைகளுக்குள்ள புலன்வழித் தொடர்பின் வெளிப்பாடே.
குழந்தையின் 6-8 மாதங்களிலேயே தோன்றிவிடும் இப்பண்பே குழந்தையின் ஆராய்வுூக்கத்தை வளர்த்து சுயபடைப்புக்கு வழிகோலுவதால் குழந்தைக்கு மிகவும் அவசியமாகக் கொடுக்கவேண்டியது பார்த்து நடந்து கொள்வதற்கான நல்ல மாதிரிகளே அன்றி போதனையல்ல.
புலன்வழித் தொடர்பின் முக்கியத்துவத்தை உணராதபடியால்தான், தாம் நித்திரை விட்டு எழும்பும் போதே குழந்தையையும் எழுப்பி, அதன் கண்ணெதிரிலேயே அது பழக வேண்டியதை தாம் செய்வதன் மூலம் அதையும் பின்பற்றத்து}ண்டும் இலகுவான வழிமுறை இருக்க, காலை நேரச் சமையலறைப் பரபரப்பில் முகம் கழுவ நேரமின்றி, கலைந்த தலையும் அழுக்கேறிய உடையுமாக நின்று கொண்டு அடித்தும், உறுக்கியும், கெஞ்சியும் பலவந்தப்படுத்திக் குழந்தையை சுத்தம் செய்து பள்ளிக்கு அனுப்ப நினைக்கும் அன்னையோ அல்லது கையில் சிகரட்டுடன் நின்று கொண்டு, சாம்பிராணிக் குச்சியால் அல்லது பேப்பரைச் சுருட்டி சிகரட் குடிப்பது போல் பாவனை காட்டும் குழந்தையைத் தண்டிக்க நினைக்கும் தந்தையோ தமது செயற்பாட்டில் தோல்வியடைவது மட்டுமன்றி, சுத்தமும், நற்பழக்கமும் தமக்கு மட்டுமே அமுல்ப்படுத்தப்படும் விடயங்கள் என்ற மனப்பதிவை குழந்தையிடம் ஏற்படுத்தி அதன் எதிர்க்கணிய விளைவுகளை எதிர்கொள்ளும் பரிதாபத்துக்கு மீட்சியே இல்லாமல் போய் விடுகின்றது.
இதே போன்றுதான் சற்று வளர்ந்தபின் குழந்தைக்கு கற்றுக்கொடுக்கும் "அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்ற போதனையை விடவும் தனது அம்மா அவரின் அப்பா அம்மாவை எப்படி நடத்துகின்றார் என்பது குழந்தையிடம் கூடுதல் பதிவை ஏற்படுத்தவல்லது.
மனிதன் பிறப்பதில்லை
மனித ஆளுமையை வடிவமைப்பதில் மிகவும் முக்கியமானது ஒருவன் தன்னைப்பற்றி தான் கொண்டிருக்கும் கருத்து நிலையே. குழந்தையின் மரபு நிலை, பெற்றோர்களது நடத்தை, குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையிலான உறவு, சூழலில் கிடைக்கும் நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோரின் செல்வாக்கு என்பன தற்கருத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 'மனிதன் பிறப்பதில்லை உருவாக்கப்படுகின்றான்' என்ற உண்மை மொழியின் அடிப்படையில் ஒரு குழந்தையை வார்க்கும் பள்ளிக்கூடம் குடும்பமே.