10-28-2005, 02:23 PM
அப்போது நான் சிறுவனாக இருந்த காலம்... எமது வீட்டுக்கு பின்னால் ஒரு வெளி வளவு.. அதை அடுத்து இரு வீடுகள். இரண்டுக்கும் பொதுவான பாவனைக் கிணறு.
அப்போது நல்ல மாரி காலம். பாலு என்பவர் இரவு கொழும்பிலிருந்து வந்து, தனது வீட்டவர்கள் நித்திரையில் இருந்ததால், அடுத்த வீட்டுக்கு வந்து பொதுக் கிணற்றின் கட்டு வழியாக தனது வீட்டுக்கு செல்ல முற்படுகையில்.. கிணற்றில் தவறி விழுந்து இறந்துவிட்டார். இது மறுநாள்தான் ஏனையவர்களுக்குத் தெரியும்..
இது நடந்து சிலநாட்கள் கழிந்ததா? அன்று அதிகாலை 4 மணியளவில் அடை மழை. திடீரென 'ஆ.. ஊ..' என யாரோ அலறுவதுபோன்ற சத்தம் அந்தக் கிணற்றுப் பக்கமாக இருந்து கேட்டது.
நான் தூக்கத்திலிருந்து விழித்து, 'என்ன சத்தம்?' என்று அம்மாவைக் கேட்டேன். அவர் உடனே எழுந்து சென்று, விபூதியை எடுத்து வந்து, எனக்கும் பூசி, தனக்கும் பூசி.. 'அது அவச்சாவில போன பாலுவின் ஆவி கத்துது.. நீ படு' என்றார்.
இனிப் படுப்பதா.. தூக்கமா? அரைகுறையா படித்த தேவாரமெல்லாம் முழுசு முழுசா மனதுக்குள்ளே ராகமிசைத்தன.
பின் ஓருவாறாக நன்றாக விடிய சத்தம் நின்றுவிட்டது. அம்மாவோ வீதியால் போவோர் வருவோருக்கு அதிகாலை நடந்த விடயத்தை கூறுவதிலேயே பொழுது கரைந்துகொண்டிருந்தது.
அப்போது பகல் பதினொரு மணியிருக்கும்.. மீண்டும் பின் வளவிலிருந்து அதே சத்தம்.. பகலிலும் பேயா.. பகல் என்பதால் துணிவுடன் வேலியால் எட்டிப் பார்த்தோம்.
அங்கே, சொறி நாயொன்று 'ஆ.. ஊ..' என ஊளையிட்டுக் கொண்டிருந்தது. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

.