10-28-2005, 12:57 PM
இந்த விடயத்தில் ஏதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று முடிவு எடுத்துவிட முடியாது. அதேபோல் தேர்தலைப் புறக்கணிப்பதும் நல்லதல்ல. முதலில் எல்லோரும் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும் தற்போது சிறுபான்மை மக்களின் வாக்குகளால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாது. அப்படியொரு நிலையை ஜே.ஆர.ஜெயவர்த்தனா முன்பே ஏற்படுத்திவிட்டார். வேண்டுமாயின் வெல்பவரின் வாக்கு வித்தியாசங்களில் மட்டுமே வித்தியாசங்களைக் காட்ட உதவும். இதனை சென்றமுறை சந்திரிக்காவும் நிரூபித்து விட்டார். தற்போதுள்ள நிலைமையில் ஜனாதிபதித் தேர்தலின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கப் போவது தென்னிலங்கை மக்களின் வாக்குகளே. அப்படிப் பார்க்கும் போது தென்னிலங்கையில் மகிந்தவிற்கே ஆதரவு அதிகமாகவுள்ளது. சிறுபான்மை மக்கள் வாக்குப் போடாமல் விடுவதாலோ அல்லது அந்த வாக்குகளை செல்லுபடியற்றதாக மாற்றுவதாலோ அது வெல்பவரைப் பாதிக்கப் போவதில்லை. மாறாக வெல்லக் கூடிய ஒருவருக்கு அவ்வாக்குகள்; செல்லுமிடத்தில் அவருக்கு பெருண்பான்மை அல்லது அறுதிப் பெருண்பான்மை கிடைக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். இதனால் என்ன நன்மையென நீங்கள் கேட்கலாம். தற்போதய மகிந்தவின் இனவாதச் சிங்களக் கட்சியுடனான ஒப்பந்தங்கள் யாவும் ஒரு இராஜதந்திரமே!!! மகிந்த பலகாலமாக அரசியலிலும் பொறுப்பான பதவிகளிலும் இருந்திருக்கின்றார். ஆனால் அவர் இன்றுவரை சிறுபான்மை மக்களுக்கெதிராக நடவடிக்கைகள் மேற்கொண்டது கிடையாது. அத்துடன் மகிந்த வென்று ஆட்சிக்கு வந்தால் அவரது முதல் வேலை பண்டாரநாயக்காவின் குடும்பத்தாரை அரசியலிலிருந்து ஓரம் கட்டுவதாகவேயிருக்கும். அதேபோல் மகிந்த பெருண்பான்மையுடன் வெற்றிபெற்று வந்தால் இந்த சிங்கள இனவாதக் கட்சிகளினால் அவரை ஒன்றும் செய்ய முடியாது. அதுபோல் அறுதிப் பெருண்பான்மையுடன் ஜெயித்து வந்தால் அரசியல் சட்டங்களில் மாற்றங்களை செய்வதற்கும் வழி கிடைக்கும். இவையெல்லாவற்றையும் விட மேலாக தற்போதய வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையின் பொருளாதாரநிலை வெளிநாடுகளை எதிர்த்துக் கொண்டு சிறுபான்மை மக்களைப் பாதிக்கும் செயல்களை ஆட்சிக்கு வரும் எவரினாலும் செய்ய முடியாது. எனவே மகிந்த வென்று வந்தால் டக்ளஸ் போன்றவர்களின் சுயதம்பட்டங்களுக்குத்தான் வழிவகுக்கும் போன்ற தப்பாண எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு எதிர்காலத்தை நன்கு சிந்தித்து நிகழ்காலத்தை தீர்மானிப்பதே நன்கு சிறந்தது.

