10-28-2005, 12:15 PM
சின்ன வயதில் எனது அம்மம்மா சில பேய்கதைகளை சொல்லி இருக்கிறார். அதையெல்லாம் கேட்டு நான் பெரிதாகப்பயந்ததில்லை. எனது வாழ்க்கையிலும் கதைகளில் வருவது போல் திகிலான சம்பவங்கள் நடக்கும் என நான் அப்போது நினைக்கவில்லை.
பல்கலைக்கழகப்படிப்பை முடித்து சில மாதங்களில் நான் குழந்தைகளைப்பார்த்துக்கொள்ளும் வேலையில் ஈடுபத்திருந்தேன். அப்போது தான் அந்தப்பயங்கர சம்பவங்கள் எனது வாழ்வில ஏற்பட்டது. முதல் முதல் அந்த வீட்டிற்கு சென்றபோது அந்த வீடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மிகவும் அமைதியான பெரிய வீடு. விசாலமான அறைகள். உயரமான யன்னல்கள். குளிர்காலத்திலும் கொஞ்சம் கதகதப்பாக இருக்கும்.
நான் அங்கு பார்த்துக்கொள்ள வேண்டிய குழந்தைகள் இரண்டு. ஒன்று நான்கு மாதக்குழந்தை மற்றயைது. ஒன்றரைவயது. இரண்டும் பெண்குழந்தைகள். முதல் வாரம் எந்த தொந்தரவும் இருக்க வில்லை. எப்போதாவது நாய் வெறும் காற்றைப்பார்த்து குரைக்கும். அதையாரோ அதை பயமுறுத்துவபோலவும் ஆக்ரோசமாக குரைக்கும். ஆனால் அதை நான் பெரிதாக எடுக்கவில்லை.
சில வாரங்கள் கழித்து அந்தக் குழந்தைகளின் பெற்றோர் விடுமுறையைக்களிக்க அவர்களது தோட்ட வீட்டிற்கு செல்ல முடிவெடுத்து வீட்டையும் நாயையும் பார்த்துக்கொள்ளும் படி என்னைக்கேட்டுக்கொண்டார்கள். இலகுவாக பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆவலில் நான் அதற்கு ஒத்துக்கொண்டேன். நாயை என் வீட்டிற்கு அழைத்துச்சென்றுவிட்டேன். வாரத்தில் இரண்டு நாட்கள் அவர்கள் வீட்டிற்கு வந்து சுத்தம் செய்து கடிதங்களை எடுத்து ஓழுங்கு படுத்திவைத்து பின்பு நேரம் கிடைக்கும் போது நாயை நடப்பதற்கு அழைத்துச்செல்வேன்.
ஓருதடவை வழக்கம் போல எல்லாம் முடித்து சிறிது நேரம் தொலைக்காட்சி பார்க்க அமர்ந்தேன். நாய் வெளியே விளையாடச்சென்றுவிட்டது. திடீரென தொலைக்காட்சிப்பெட்டி தானாக நின்று போனது. மேலே இருந்த காற்றாடி சுற்றிக்கொண்டுதான் இருந்தது. முதலில் தொலைக்காட்சியில் ஏதும் பிழை என்றுதான் நினைத்தேன். அருகில் இருந்த ஒரு வார சஞ்சிகையை எடுத்து படிக்கத்தொடங்கினேன். ஆனால் எனக்குள் யாரோ என்னை பின்னால் இருந்து பார்ப்பது போன்ற உணர்வு. எனக்குப் பின்னால் படிக்கட்டுகள்தான் இருந்தன. அது இருளான பகுதியில் அமைந்திருந்தது. அதைப்பார்க்கவே ஏனோ பயமாக இருந்தது. சரி போய்விடலாம் என்று நான் முடிவெடுத்து எழுந்தபோது மேலே மாடியில் யாரோ துள்ளி விளையாடுவது போல ஓசை கேட்டது. அதன்பின் குழந்தை ஒன்று குதூகலித்துச்சிரிப்பது போலவும் ஏதேதோ சத்தங்கள்.
தொடரும்