10-28-2005, 10:49 AM
<img src='http://www.azeriressam.com/images/theme/hind_qizi.jpg' border='0' alt='user posted image'>
<b>அறிந்தும் நீ அமைதியாய்
அறியாமலும் நீ அமைதியாய்
அடக்கம் என்று பெயர் கொண்டு
அடங்கியே விட்டாய்...!
உண்மை தெரிந்தும் -நீ
உரைக்க மறுத்து
ஊமையானதால்
ஊமையாகவே ஆக்கிவிட்டார்.!
பொன்னாய் பொருளாய்
பொக்கிசமாய்
பெண் நீ
பொத்தி வளர்க்கப்பட்டாய்.
பொத்தி வைக்கப்பட்டாய்
பாதுகாக்கப்பட்டாய்.
பொன்னல்ல
நான் பொருளல்ல
பெண் நான் என
வீரப்பெண்ணாய்
என்று நீ வாய்திறப்பாய் ?
பாதுகாப்புக்கோராது
உன்னை நீயே
தற்காப்பது எப்போது??
சீதனச்சந்தையில்
சிறுமையாய்ப் பெண்ணை
பெருமை கூறி விற்றிடும்
நம் தேசத்தில்
சிம்மாசனம் ஏறி
சனாதிபதியாய்
பிரதமராய்
போராளியுமாய்
புதுமைப்பெண்கள்
புறப்பட்ட பின்னரும்.
அச்சம், மடம்
நாணம் என்று
அடிபணிந்து எத்தனை நாள்
ஏமாந்து போவாய்?!
எண்ணிப்பார்ப்போம் சோதரியே
ஏக்கங்கள் உனக்குள்ளும்
எக்கச்சக்கமாய்
தேக்கி ஏன் வைக்கிறாய் ?
துணிந்து வா பெண்மையே..!
தூய்மையாய் ஓர் உலகம்
துரிதமாய் அமைப்போம்.
ஆக்கமும் அழிவும்
துணிந்த எங்கள் கையிலே..!
ஆக்குவோம் நல்லவற்றை
அழிப்போம் அராஜகத்தை
அடிமை விலங்கிற்கு
விலங்கிட்டு
புரட்சி செய்வோம்.
பெண்மை மென்மை என்ற
இயலாமையை நீக்கி
பெண்மை வல்லமை என்று
அர்த்தம் செய்வோம்.
வெண்மையாய் மிளிரவும்.
கருமையாய் எரிக்கவும்
கற்றுக்கொள்வோம்.
பேதையாய் ஒரு வாழ்வு
பேச்சிற்கும் வேண்டாம்.
வாராய் சோதரி
வல்லமையோடு
வாழ்வோம்
வாழவைப்போம்
வாழ்ந்து காட்டுவோம்..!</b>
பாசை தொடரும்..!
http://tamilini.blogspot.com/
<b>அறிந்தும் நீ அமைதியாய்
அறியாமலும் நீ அமைதியாய்
அடக்கம் என்று பெயர் கொண்டு
அடங்கியே விட்டாய்...!
உண்மை தெரிந்தும் -நீ
உரைக்க மறுத்து
ஊமையானதால்
ஊமையாகவே ஆக்கிவிட்டார்.!
பொன்னாய் பொருளாய்
பொக்கிசமாய்
பெண் நீ
பொத்தி வளர்க்கப்பட்டாய்.
பொத்தி வைக்கப்பட்டாய்
பாதுகாக்கப்பட்டாய்.
பொன்னல்ல
நான் பொருளல்ல
பெண் நான் என
வீரப்பெண்ணாய்
என்று நீ வாய்திறப்பாய் ?
பாதுகாப்புக்கோராது
உன்னை நீயே
தற்காப்பது எப்போது??
சீதனச்சந்தையில்
சிறுமையாய்ப் பெண்ணை
பெருமை கூறி விற்றிடும்
நம் தேசத்தில்
சிம்மாசனம் ஏறி
சனாதிபதியாய்
பிரதமராய்
போராளியுமாய்
புதுமைப்பெண்கள்
புறப்பட்ட பின்னரும்.
அச்சம், மடம்
நாணம் என்று
அடிபணிந்து எத்தனை நாள்
ஏமாந்து போவாய்?!
எண்ணிப்பார்ப்போம் சோதரியே
ஏக்கங்கள் உனக்குள்ளும்
எக்கச்சக்கமாய்
தேக்கி ஏன் வைக்கிறாய் ?
துணிந்து வா பெண்மையே..!
தூய்மையாய் ஓர் உலகம்
துரிதமாய் அமைப்போம்.
ஆக்கமும் அழிவும்
துணிந்த எங்கள் கையிலே..!
ஆக்குவோம் நல்லவற்றை
அழிப்போம் அராஜகத்தை
அடிமை விலங்கிற்கு
விலங்கிட்டு
புரட்சி செய்வோம்.
பெண்மை மென்மை என்ற
இயலாமையை நீக்கி
பெண்மை வல்லமை என்று
அர்த்தம் செய்வோம்.
வெண்மையாய் மிளிரவும்.
கருமையாய் எரிக்கவும்
கற்றுக்கொள்வோம்.
பேதையாய் ஒரு வாழ்வு
பேச்சிற்கும் வேண்டாம்.
வாராய் சோதரி
வல்லமையோடு
வாழ்வோம்
வாழவைப்போம்
வாழ்ந்து காட்டுவோம்..!</b>
பாசை தொடரும்..!
http://tamilini.blogspot.com/
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

