11-24-2003, 01:19 PM
Quote:P.S.Seelan wrote:
சொல்லாமல் சொல்லி விட்டீர்கள் சண்முகி. இவர்கள் இருபது வருட காலத்தின் தமிழனின் துன்பத்தில் பங்கு கொள்ளாமல் சுயநலங்களுக்காக ஓடி ஒழிந்து திரிந்துவிட்டு இப்போது அனுதாபப் பட்டுக் கொண்டு திரிகின்றார்கள். ஒரு சிலர் அதைச் சொல்லிக் கொண்டு அந்நிய மண்ணிலே குளிர் காய்ந்து கொண்டு அனைத்தையும் அவமானப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆமாம் சீலன் தமிழினத்தின் அழிவுக்குத் துணை போகும் சுயநல வாதிகள். இறந்த தமிழ் மக்களின் தொகை 1 இலட்சம். வெளிநாடுசென்ற தமிழ் மக்கள் 10 இலட்சம். சிங்களப்பகுதிக்கு இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் 10 இலட்சம். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது நீங்கள் சொல்லுவது சரிதான். நீங்கள் நாட்டுக்குள்ளிருந்துதானே சொல்லுகிறீர்கள் சொல்லுங்கள்.
24-11-2003 - உதயன்
யாழ்ப்பாணத்திலுள்ள தற்போதைய நிலை குறித்து அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பொன்றில் அங்குள்ள தமிழ் மக்கள்இ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மீதும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதும் பலத்த நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது தெரியவந்திருக்கிறது. பிரமுகர்கள்இ அமைப்புக்கள் மீதும் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை பற்றிய இந்த சமூக கருத்துக்கணிப்பில் புலிகளின் தலைவர் 78 சதவீத மக்களின் நம்பிக்கையைப் பெற்று முதலிடத்தில் இருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கம் மீது 71 சதவீத மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.

