10-28-2005, 07:54 AM
டிஸ்கவரிச்சனலில் பேய்கள் பற்றிய ஒரு செய்தித்திரைப்படத்தில் பார்த்ததாக ஒரு நண்பன் சொன்ன கதை நினைவுக்கு வருகிறது.
ஓரு சுற்றுலா பேருந்து ஒன்று இரவு ஆளில்லா புகையிரத வீதியைக்கடக்கையில் நின்றுவிட்டதாம். ஓட்டுனர் தவிர்ந்த பெரும்பாலானவர்கள் தூக்கத்தில் இருந்ததால் அவர்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாது.
அந்தச்சமயம் புகையிரதம் வேகமாக வந்துள்ளது. ஓட்டுனர் என்ன செய்வது என்று தெரியாது திகிலுற்று நின்ற வேளை அந்த பேருந்து மேதுவாக புகையிரத வீதியைக்கடந்து பாதுகாப்பான இடத்தில் நின்றதாம்.
அதன்பின் ஓட்டுனர் இறங்கி வண்டியை சரி செய்யது ஏற்பாடு செய்திருந்த விடுதிக்கு சென்றிருக்கிறார். மறுநாள் காலை விடுதியில் உள்ளவர்களுக்கு இரவு நடந்ததை கூறியுள்ளார். அப்போது விடுதியில் உள்ளவர்கள் சொல்லியிருக்கிறார்கள் இரண்டு வருடத்திற்கு முன் அதே புகையிரத சந்திப்பில் ஓரு பாடசாலை பேருந்து பழுதடைந்து நின்று அதில் வந்த குழந்தைகள் அனைவரும் இறந்து போனதாக.
அதன் பின் சுற்றிலாப்பேருந்தை சுத்தம் செய்ய ஓட்டுனர் சென்றுள்ளார். அப்போது அந்த பேருந்தின் பின் சின்னச்சின்ன கை அடையாளங்கள் இருந்திருக்கிறது. அவையனைத்தும் நின்று போன பேருந்தை தள்ளியபோது ஏற்படுட்ட கை அடையாளங்கள் போல தென்பட்டுள்ளது. அதன்பின்தான் விசாரித்ததில் தெரிந்தது அவர்களைக் காப்பாற்றியது இரண்டுவருடங்களுக்கு முன் இறந்த அந்தக் குழந்தைகள்தான் என. அவர்கள் குழந்தை தேவதைகளாக அங்கு இருப்பதாக அந்த ஊர் மக்கள் இப்போதும் நம்புகின்றனர்.