10-28-2005, 04:11 AM
Selvamuthu Wrote:பல ஆண்டுகளுக்கு முன்னர் பத்திரிகையில் படித்தது மனதிலே படிந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
சுூரியன் மறைய காரிருள் கௌவிக்கொண்ட நேரம். மழையும் இலேசாகத் து}விக்கொண்டிருந்தது. மெதுவாக வந்துகொண்டிருந்த மோட்டார் வண்டியைக் கைகாட்டி மறித்தேன். என்னருகில் வந்தபோது மெதுவாக வந்த வண்டியில் ஏறி பின் ஆசனத்தில் உட்கார்ந்துவிட்டு சாரதியைப் பார்த்தேன் அங்கே சாரதியைக் காணவில்லை. இந்த நேரத்தில் பேயா? என்மனம் என்னையே கேள்வி கேட்டது. பயத்தினால் உடலெங்கும் ஒரே பதட்டம். பேச்சுக்கூட என்னால் பேசமுடியவில்லை. மெதுவாகச் சென்றுகொண்டிருந்த வண்டி எதிரே வந்துகொண்டிருந்த இன்னொரு வண்டியுடன் மோதப்போனபோது ஒரு கை மட்டும் உள்ளே வந்து "ஸ்ரியரிங்கைப்" பிடித்து வண்டியை நேராக்கியது. இதனைப் பார்த்ததும் இதயம் இன்னும் வேகமாக அடித்துக்கொண்டது. என்னால் உள்ளே இருக்க முடியவில்லை. எதுவித சத்தமும் செய்யாமல் மெதுவாக வண்டியின் கதவைத் திறந்துகொண்டு இறங்கி வண்டியின் பின்பக்கமாக ஓடினேன். அப்போதுதான் அந்தப் ~பேயை~க் கண்டேன். பழுதடைந்த தனது மோட்டார்வண்டியை மிகவும் சிரமப்பட்டபடி தனியொருவராக பின்னாலிருந்து தள்ளிக்கொண்டு சென்ற சாரதியைக் கண்டேன்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

