11-24-2003, 06:20 AM
இத்தனையும் செய்தபின் அந்தக் கடவுள்கள் கூட இவர்களைத் திரும்பிப் பார்க்குமா என்பது சந்தேகம்? ஐயா மகேசுவரா ஈஸ்வராவுக்கெல்லாம் தேரும் கோயிலும் கட்டிக் கொடுத்தால் செய்த பாவங்கள் தீருமா? கோயிலுக்குப் பக்கத்தில் பார்க்கவில்லயா மரத்தின் கீழ் இருந்து வெய்யில் மழையை பொருட்படுத்தாமல் பிள்ளைகள் படிப்பதை. அதற்குப் பக்கத்தில் காணவில்லையா பல குடும்பங்கள் சுற்றியுள்ள மரத்மதடியில் வேட்டியை விரித்து மறைப்பாக்கிக் கொண்டு வாழ்வதை. மோட்டார் வாகனத்தில் போகும் போது இது எல்லாம் காணமுடியாதா? பாவம் சிவனும், முருகனும் கஸ்டப்படுவதை மட்டுமா காண முடிகின்றது. யாரை ஏமாற்ற? ஏதோ தமிழருக்குச் செய்யப் போகிறார் என்று ஆவலுடன் இருந்த பத்திரிகைகள் எல்லாம் மேய்துபார்த்ததில் வெளிச்சத்திற்கு வந்தது, இது தான் ஆச்சியின் கையால் முதுகில் தட்டுவாங்கப் பாடுபடுகின்றாரே ஒழிய தமிழருக்கல்ல. அது சரி இந்த இரண்டுவருடம் இருந்த கதிரை என்ன ஆடுகின்றதா? புதிதாக கதிரை தேட. சரி ஐதேகா தான் இரண்டு வருமாக ஒன்றும் செய்யவில்லை. ஆச்சியின் இத்தனை வருட ஆட்சியில் என்ன கிழித்து விட்டார் என்று இந்தத் துள்ளல். வங்கிக் கணக்குகளுக்கு புனர் வாழ்வு அளிக்கவோ இந்த வேசம். எல்லாம் அவனுக்கே வெளிச்சம்.
ஐயா அமைச்சரே ஏமாற்றாதே ஏமாறாதே என்றுதான் பாடத் தோன்றுகின்றது. வலக்கை கொடுக்க இடக்கை வ(h)ங்கிக் குவிக்கும் முயற்சிதான்.
அன்புடன்
சீலன்
ஐயா அமைச்சரே ஏமாற்றாதே ஏமாறாதே என்றுதான் பாடத் தோன்றுகின்றது. வலக்கை கொடுக்க இடக்கை வ(h)ங்கிக் குவிக்கும் முயற்சிதான்.
அன்புடன்
சீலன்
seelan

