10-27-2005, 04:39 PM
பொருள் உற்பத்தியின்ர அல்லாட்டி சரக்கு உற்பத்தியின்ர வளர்ச்சியில ஒரு கட்டத்தில பணம் மூலதனமா மாறுகிறது. ஒரு பொருள வித்து இன்னொரு பொருள வாங்குறது சரக்குச் சுற்றோட்டத்தின்ர விதி. அதாவது பொருள் பணம் பொருள் எண்டு சுத்தும். அதுக்கு மாறாக இலாபத்த நோக்கமாக கொண்டு விற்கிறதுக்காகவே வாங்குறது மூலதனத்தின்ர பொது விதி. அதாவது பணம் சரக்கு பணம் எண்டு சுத்துறது. இந்த சுழற்சியில தொடங்குகிற அல்லாட்டி இடப்படுற பணத்தின்ர தொடக்க மதிப்பு பிறகு பிறகு கூடுந்தானே. அந்த வளர்ச்சியத்தான் மாக்ஸ் உபரி மதிப்பெண்டு சொல்லுறார். இப்பிடியான வளர்ச்சிதான் பணத்தை மூலதனமா மாத்துது :?

