10-27-2005, 04:24 PM
stalin Wrote:காதல்....என்ற சொல்லை சொன்னால் காதல் வந்து விடுமா..காதல் என்ற சொல்லை ஆணுக்கும் பெண்ணுக்கும் வருவதை கூறுகிறார்ளா இல்லையே...
காதலாகி கசிந்து கண்ணீர என்று இறைவனோடோயே காதல் கொள்கிறார்கள்..காதல் எனற சொல் பல இடங்களிலை பல விதமாக பாவிக்கிறார்கள்
இஙகை பேசப்படுகின்ற காதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் ..இரண்டு மனங்கள் ஈர்க்கின்றன என்று புலுடா விட்டாலும் எதிர்ப்பால் ஈர்ப்பு தான் முதலில் தங்கியிருக்கிறது.
அழுகு என்பதை காலத்துக்கு காலம் வெளியுலகம் வரையறை செய்வதை மனம் உள் வாங்கி கொள்கிறது அதன் அடிப்படையிலேயே எதிர்ப்பாலாரை தேடுகிறது..உடலழகை மீறி இரண்டு மனங்களும் telepathy மூலமாக கதைத்து சேருகின்றன இல்லேயே..
காதல் மிகைப்படுத்த உணர்வாக வேறு ஓன்றிலும் தஙகியிராத தெய்வீகமான தூய்மையான ஒன்றாக காலம் காலமாக ஆழ் மனத்துக்கு புகுத்தப்பட்ட ஒன்றேயொழிய வேறொன்றுமில்லை...
காதல் எப்போதும் தனித்து நிற்காது ஏதாவது ஒன்றில் தங்கியே தீரும்
எனக்கு ஸ்ராலின் அண்ணா சொல்றதில உடன்பாடாத்தான் இருக்கு. காதல் வந்து தனித்த நிக்காது அது ஏதோ ஒரு தேவைய நோக்காகக் கொண்டுதான் உருவாகுது. ஒண்டில் அது பாலியல் தேவையா இருக்கலாம் இல்லாட்டி வேற ஏதாவதாவும் இருக்கலாம். எதிர்ப்பால் ஈர்ப்பு எப்பிடி முதன்மைபெறுதோ அதமாதிரி அழகும் முக்கிய இடத்த பெறுது. அழகெண்டேக்க உடல் கவர்ச்சியா இருக்கலாம் இல்லாட்டி குரல் குணம் எண்டும் இருக்கலாம்.
ஆனாலும் எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கு
நான் உன்னைக் காதலிக்கிறேன் எண்டு சொல்லுறதின்ர அர்த்தம் என்ன?
அப்ப நான் உன்னை நேசிக்கிறன் எண்டால் என்ன?
காதல் எண்டு சொல்லுறதுக்கும் அன்பு எண்டு சொல்லுறதுக்கும் என்ன வித்தியாசம்?
உலக்கத்தில எங்கள கவரக்கூடியவர் ஒரே ஒராள் மட்டுமா இருப்பினம்? குறைஞ்சது ஒரு ஆயிரம் பேராவது நான் விரும்பிற மாதிரி இருப்பினந்தானே? :roll:
இன்னும் நிறைய இருக்கு. பிறகெழுதுறன் :oops:

