Yarl Forum
காதலைப் பற்றிக் கதைக்கப் போறன் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: சிந்தனைக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=7)
+--- Forum: சுமுதாயம் (வாழ்வியல்) (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=34)
+--- Thread: காதலைப் பற்றிக் கதைக்கப் போறன் (/showthread.php?tid=2756)



காதலைப் பற்றிக் கதைக்கப் போறன் - narathar - 10-26-2005

சயந்தனின் அண்மய பதிவை இங்கே போடுகிறேன்,களம் கொன்ச்சம் இறுக்கமா இருக்கிற படியா இது கொன்சம் ஜாலியான விசயமா இருந்திச்சிது,இங்க கன பேருக்கு உதவும் எண்டு போடுறன் ,என்ன நினைக்கிறியள் உங்கட கருத்தென்ன என்டு சொல்லுங்கோ,பிறகு சயந்தன் வந்து என்ன சொல்லுறார் எண்டு பாப்பம்..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


அதென்ன திடீரென்று காதலைப்பற்றிக் கதைக்க வேணும் எண்டு யாரும் கேட்கக்கூடாது. என்ரை பழைய பதிவொண்டில எங்கேயோ ஒரு தடவை காதலுக்கான உடனடிக்காரணங்களில அழகும் ஒண்டு எண்டு சொன்னதுக்காக அப்ப கொழும்பிலயும் இப்ப சிங்கப்பூரிலும் இருக்கின்ற கீது காரசாரமா ஒரு பதில் எழுதியிருந்தவ. (அதில என்னை யோசிக்க வைச்ச ஒரு விசயம் என்னெண்டால் அவவின்ரை பதிவில இருந்த சயந்தன் உம்மட்டை இருந்து இதை நான் எதிர்பாக்க வில்லை எண்டது தான். ) அவவின்ரை பதிவுக்கு என்ரை பதிலை ஒரு பதிவாப் போடலாம் எண்டு தான் இருந்தன். பிறகு மறந்திட்டன்.

ஆனாலும் இப்பவும் காதலுக்கு அழகும் ஒரு உடனடிக்காரணம் எண்டதில நான் உறுதியாத்தான் இருக்கிறன். வலு சிம்பிளா என்னாலை விளக்க முடியும். யார் யார் எண்டே தெரியாத இருவர் ஒருவரை ஒருவர் நெருங்க வேண்டும் எண்ட ஆசையையும் எதிர்பார்ப்பையும் உடனடியாத் தாறதில அழகுக்கு ஒரு முக்கிய இடமிருக்கு!

இங்கை அழகெண்டதை எப்பிடி வரையறை செய்யலாம் எண்டும் ஒருவருக்கு அழகாத்தெரியறது இன்னொருவருக்கு அழகில்லாமல் தெரியும் எண்ட கேட்டலுத்துப்போன கருத்தக்கு ஒரு பதில் சொல்லுறன். அதாவது ஒருவருக்கு அழகாத்தெரியுதே.. அந்த அழகை பற்றித்தான் நான் கதைக்கிறன்.

வேணுமெண்டால் இப்பிடிச்சொல்லலாம். காதலுக்கு முந்திய ஒரு ஈர்ப்பு இருக்குது தானே.. அதுக்கெண்டாலும் இந்த அழகுதான் காரணமாயிருக்கு. அதே நேரம் இப்பிடி எந்த அழகு தொடர்பான ஈர்ப்பு எதுவுமில்லாமல் படிக்குமிடங்களிலோ பணிபுரியும் இடங்களிலோ ஒன்றாக இணைந்து இருக்க சந்தர்ப்பம் கிடைத்தவர்களுக்கும் நாட்செல்ல செல்ல இயல்பாக காதல் அரும்பக் கூடும். சிலர் இதைத்தான் உண்மையான காதல் எண்டுகினம்.

அதைவிடுவம். இங்கை ஒஸ்ரேலியாவில காதல் , கல்யாணம் பற்றி ரண்டு தமிழ்ப் பெண்களோடு கதைக்கும் சந்தர்ப்பம் போன முறை சிட்னி போயிருந்த சமயம் கிடைச்சது. அதில ஒருத்தியை கடந்த வருடமே எனக்கு அறிமுகம். கடந்த வருசம் சிட்னியில நடந்த ஒரு நிகழ்வில அவவும் அவவின்ர boyfriend ம் மும்மரமா நிகழ்வு வேலைகளை செய்து கொண்டிருக்க சந்தோசமாய் இருந்தது.

மற்றவவை இந்த முறை தான் தெரியும்.

ஒரு நாள் ரெயினுக்குள்ளை வரும் போது அவையோடு கதைச்சுக் கொண்டு வந்தன். முதலாமவர் தன்னுடைய காதல் உடைந்து விட்டதாக ஒரு கட்டத்தில சொன்னா. அது இங்கெல்லாம் சர்வ சாதாரணம் என்பதால் அது பற்றி எந்த அதிர்ச்சியையும் முகத்தில் காட்ட இல்லை நான். அல்லது காட்டுவது போல நடிக்கவும் இல்லை.

'அவன் எப்ப பாத்தாலும் நீ அதைச் செய்யாதை இதைச் செய்யாதை எண்டு சொல்லிக்கொண்டிருந்தான். எனக்கு அது பிடிக்கவில்லை.. ' என்றாள் அவள். எனக்கதில சொல்லுறதுக்கு ஒண்டும் இல்லாத படியாலை எதுவும் சொல்லேல்லை எண்டாலும் பெண்களுக்கு குறிப்பாக காதலிகளுக்கு மன்னிக்கவும் காதலிக்கு பிடிக்காத விடங்களாக அவற்றை குறிப்பெடுத்துக்கொண்டிருந்தன் மனசுக்குள்ளை.

அவ பொதுவா தன்னோடை பல்கலைக்கழக மட்ட அதுவும் தமிழ்ப்பெடியள் பற்றித்தான் கதைச்சா. இவங்கள் எல்லாரும் தங்களாலை எந்தப் பெண்ணையும் காதலிக்க வைக்க முடியும் எண்டு நினைச்சுக்கொண்டிருக்கிறாங்கள் எண்டா.

அப்பிடியில்லை எந்தப்பெண்ணையும் என்னாலை காதலிக்க வைக்க முடியாது.. சிலரை மட்டும் தான் என்னாலை முடியும் எண்டு நான் பகிடிக்கு சொன்னன்.

இதுக்கிடையில பக்கத்தில இருந்தவ அம்மா அப்பா எங்களுக்கு ஒரு நாளும் கெட்டது செய்ய மாட்டினம். அவையள் தெரிவு செய்தால் அது சரியாத்தான் இருக்கும். எண்டு சொன்னா.

தனக்கு ஒரு பெடியனைப் பிடிச்சிருந்தால் தான் நேரடியா போய் அப்பாட்டை சொல்லுவாவாம். இதுவரை ஒருத்தரையும் பிடிக்கேல்லையாம்.

பதினெட்டு வயசாகுது.. இன்னும் ஒருத்தன் மேலை கூட மனசுக்குள்ளை ஒரு இது வரேல்லையா எண்டு கேட்டதுக்கு.. அப்பிடி ஒரு இது வாறதுக்கெல்லாம் அப்பாட்டை போய் சொல்ல வேணும் எண்டால் நான் ஒவ்வொரு நாளும் எல்லோ அப்பாட்டை போய் சொல்லிக்கொண்டிருக்க வேணும் எண்டு சொல்ல எனக்கு சிரிப்பு தாங்க முடியேல்ல.. எங்களை மாதிரித்தான் பெட்டையளும்.. எண்டு நினைச்சுக் கொண்டன்..

இதுக்கிடையில நல்ல பெடியளை எப்பிடிக் கண்டு பிடிக்கிறது எண்டு முதலாமவ கேட்டா.. பேசாமல் என்னை மாதிரி இருப்பாங்கள் எண்டு சொல்லியிருக்கலாம் தான். ஆனா ஒரு அண்ணனா.. ?? என்னை மதிச்சு கேட்டவைக்கு ஒரு தரமான பதிலைச் சொல்ல வேணும் எண்டதுக்காக ஒன்று சொன்னன்.

உன்னை ஒருத்தன் பிடிச்சிருக்கெண்டு சொன்னால் வந்து அப்பாட்டை சொல்லு என்று சொல்லு.. துணிந்து வந்து கதைத்தானென்றால் கொஞ்சம் நல்ல பெடியன். ஆனா இதெல்லாத்துக்கும் முதல் உனக்கும் அவனை பிடிச்சிருக்க வேணும்.

( அண்மைக்காலமா நான் காதல் பற்றி எழுதுற பதிவெல்லாத்தையும் நானே தூக்க வேண்டியிருக்கிறது. இதுவாவது இருக்குமென்று நம்புவோம்)

posted by சயந்தன் at 4:31 PM | 9 comments

http://sayanthan.blogspot.com/


- வலைஞன் - 10-26-2005

வணக்கம் நாரதர்,

வெறுமனே வேற இடத்திலிருந்து ஒரு ஆக்கத்தை இங்கிணைப்பதைக் காட்டிலும், அது தொடர்பான உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாமே. இவ் ஆக்கத்தின் கருப்பொருளை மையமாக வைத்து ஒரு விவாதத்தை தொடங்கி கருத்துப் பரிமாறல்களை மேற்கொள்வதே பயனுள்ளதாகவும், இந்த "சிந்தனைக் களம்" பிரிவுக்கு சிறப்பானதாகவும் அமையும்.

நன்றி


- Rasikai - 10-26-2005

காதல் என்பது என்ன? மனங்கள் சம்பந்தப்பட்டது அல்லவா?? இரு உள்ளங்கள் மனதால் ஒன்று பட்டு, அன்பு என்னும் நூலினால் பின்னப்பட்ட ஒரு இறுக்கமான பிணைப்பு அல்லவா காதல். ம்ம்ம் இந்தக் காலத்துல காதலுக்கு உணர்வைவிட அழகுதான் முக்கியம் என்றது உண்மைதான். காதலர்கள் சொல்கிறார்கள் நாங்கள் காதலர்களாக கொஞ்சக் காலம் பழகிப்பார்ப்பம் இரண்டு பேருக்கும் பிடித்து இருந்தால் கலியாணம் செய்வம் இல்லாவிட்டால் நண்பர்களாக பிரிவோம் என்றல்லவா. இதுதான் காதலா? இதுவும் காதலா?? ம்ம்ம் காதலுக்கு வந்த சோதனையைப்பாருங்கள்.
ஒருவன் உன்னைக்காதலிக்கிறான் என்று சொல்லும் போது அப்பாவிடம் வந்து சொல்லு என்று சயந்தன் கூறுகிறார்.அப்போ ஒரு ஆளை பார்த்த உடனே காதல் வந்துவிடுமா?? என்னமோ அது நல்ல விடயம் தான் உடனே பெற்றவர்களுக்கு தெரியப்படுத்துவது ஆனால் அதிலும் பல சிக்கல்கள் இருக்கும் அல்லவா>?


- sOliyAn - 10-26-2005

காதலுக்கு அடிப்படைக் காரணிகளில அழகும் ஒன்றுதான்.. அவலட்சணமான தோற்றமுடையவர்மீது காதல் வந்ததாக நான் அறியவில்லை.. ஆனாலும் ஒன்று.. அழகு என்பது ஒவ்வொரு இனங்களைப் பொறுத்தவரையில் சற்று வித்தியாசக் கவனிப்புகளுக்குள்ளாகின்றது. எனக்கென்னவோ.. நம்ம பொண்ணுகதான் அழகோ அழகா தெரியுறாங்க.. ஹி


- tamilini - 10-26-2005

நல்ல தலைப்புத்தான். நமக்கும் தெரிஞ்சுக்க வேண்டிய விடயங்கள் இருக்கு காதலில. நான் நினைக்கிறன் காதலிற்கு அன்பு அன்பு கொண்ட நல் மனசு தான் வேணும் என்டு. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- narathar - 10-26-2005

அப்ப அழகு எண்டா உடல் அழக மட்டுமா சொல்லுறார் சயந்தன் ,அப்ப சில பேருக்கு அழகான மனதும் இருக்குத் தானே சோழியன்.மற்றது சிலபேர் அழகா கவிதை எழுதிவினம்,பாடுவினம், நாட்டியம் ஆடுவினம் அதாலேயும் காதல் வரலாம் தானே.அது சரி நம்ம பொண்ணுகள் எண்டு யாரச் சொல்லுறீங்க, களத்தில இருக்கிற பெண்களயா.ஒ இது இப்ப சிந்தனைக் களம் எண்டு தெரியாமப் போச்சுது. நாபகப் படுத்தியதற்கு நன்றி வலஞ்ஞன். நீங்களும் இப்ப அடிக்கடி வாறியள். நல்ல விசயம்.

எனக்கு காதலுக்கும் எதிர்பாற் கவர்ச்சிக்கும் என்ன வித்தியாசம் எண்டு இன்னும் விளங்கேல்ல.அப்படி ஒரு இது வந்து தானே காதலாகுது.அப்ப ஏன் அப்படி ஒரு இது வாற எல்லாம் காதலாகிறது இல்லை.வந்த காதல் ஏன் சிலபேருக்கு போய்டுது,சில பேருக்கு திருப்பி வருகுது.சூழ் நிலையும்,ஆழ் மனப் படிமங்களுமா காதலை உருவாக்குது.சில இனிய கணங்களின் கோர்வயா காதல்.அல்லது கனவுகளின் கிட்டிய நிஜமா காதல்.எது காதல்.அதிலும் இந்த தெய்வீகக் காதல் புரியவே இல்லை.


- stalin - 10-26-2005

காதல்....என்ற சொல்லை சொன்னால் காதல் வந்து விடுமா..காதல் என்ற சொல்லை ஆணுக்கும் பெண்ணுக்கும் வருவதை கூறுகிறார்ளா இல்லையே...

காதலாகி கசிந்து கண்ணீர என்று இறைவனோடோயே காதல் கொள்கிறார்கள்..காதல் எனற சொல் பல இடங்களிலை பல விதமாக பாவிக்கிறார்கள்

இஙகை பேசப்படுகின்ற காதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் ..இரண்டு மனங்கள் ஈர்க்கின்றன என்று புலுடா விட்டாலும் எதிர்ப்பால் ஈர்ப்பு தான் முதலில் தங்கியிருக்கிறது.

அழுகு என்பதை காலத்துக்கு காலம் வெளியுலகம் வரையறை செய்வதை மனம் உள் வாங்கி கொள்கிறது அதன் அடிப்படையிலேயே எதிர்ப்பாலாரை தேடுகிறது..உடலழகை மீறி இரண்டு மனங்களும் telepathy மூலமாக கதைத்து சேருகின்றன இல்லேயே..

காதல் மிகைப்படுத்த உணர்வாக வேறு ஓன்றிலும் தஙகியிராத தெய்வீகமான தூய்மையான ஒன்றாக காலம் காலமாக ஆழ் மனத்துக்கு புகுத்தப்பட்ட ஒன்றேயொழிய வேறொன்றுமில்லை...

காதல் எப்போதும் தனித்து நிற்காது ஏதாவது ஒன்றில் தங்கியே தீரும்


- inthirajith - 10-26-2005

மனதில் உண்மையாக நேசித்தால். அந்த உயிரின் சந்தோசமும் கவலையும் தன் உணர்வாக நினைத்து உடலை விட உள்ளத்தை நேசிக்காத எதுமே காதல் இல்லை.நிறைய சொல்லி உண்மையா நேசிப்பவனை இல்லை நேசிப்பவளை எங்கெ எப்போதும் சந்தோசமாக இருக்க பிரார்த்திக்கவேண்டும்


- RaMa - 10-27-2005

காதல் என்பது என்ன என்று ஆராய்வதை விட அதலினால் வரும் நன்மை தீமைகளைப் பற்றி கதைப்பது தான் சிறந்தது... காதல் என்ற உணர்ச்சி எல்லோரையும் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் தடுமாற வைக்கின்றது... காதலில் முதல் தேவை பொறுமை... எல்லாவற்றிலும் பொறுமை. அதாவது காதலை தெரியப்படுத்துவதிலிருந்து கலியாணம் வரை பொறுமை காக்க வேண்டும்... திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்பது உண்மை... நாங்கள் எத்தனை பேரை மனதில் எண்ணினாலும் கடைசியில் யாரோ ஒருவருக்கு மாலை இடப்போகின்றோம்... அதற்காக காதல் எல்லாமே தோல்வியில் தான் முடிகின்றது என்று சொல்ல வரலை.... காதலித்தவரை கலியாணம் கட்டி வாழ்க்கை தோல்வியில் முடிவதை விட காதல் தோல்வியில் முடிவது எவ்வளவோ நல்லம்.... வாழ்க்கை வாழ்பவதற்கே.. எமக்கு அடுத்த பிறப்பு எப்படியோ சாவுக்கு பிறகு என்ன என்பதையே நாம் அறியமாட்டோம்... அதற்காக கடவுள் தந்த அற்புதமான வாழ்வை ஏன் வீணாக சீரளிக்க வேண்டும்... இந்த புலத்தை பொறுத்தவரையில் காதலில் பொறுமையாய் இருப்பதே மேல்... இது எனது தாழ்மையான கருத்து


- இவோன் - 10-27-2005

Quote:நாங்கள் எத்தனை பேரை மனதில் எண்ணினாலும்

மெதுவாகச் சொல்லுங்க.. தமிழ்க் கலாசாரத்தில ஒரு பெண் ஒருத்தனைத் தான் மனசாலை நினைக்க முடியும்.!

நான் ஒன்று மட்டும் சொல்ல முடியும்! காதலில் ஆரம்பத்தில் பாலியல் கவர்ச்சியும் இணைந்தே இருக்கின்றது. காதலில் காமமும் கலந்திருப்பதனாலேயே ஒரு ஆண் பெண்ணையும் ஒரு பெண் ஆணையும் காதலிக்கிறார்கள். ஒரு ஆண் ஒரு பூனைக்குட்டியையோ அல்லது ஒரு பெண் சிட்டுக்குருவியையோ காதலிப்பதில்லை. (தகவல் உதவி - வைரமுத்து)

ஆனால் காமம் கலந்து உருவான காதல் பிற்காலத்தில் காமத் தேவைகள் அடங்கிய பின்னரும் தொடர்கின்றதென்றால் அங்கே காமத்தோடு உண்டான அன்பு மட்டும் நிலைத்திருக்கின்றது என்பது அர்த்தம்.


- sinnakuddy - 10-27-2005

ஆணோ பெண்ணோ இரகசியமாக மனசாலை பல பேரை நினைக்க முடியும்..ஆனைல் மனசிலை ஒருவரை தான் நினைத்தாய் சொல்ல முடியும் .....இவோன்


- poonai_kuddy - 10-27-2005

stalin Wrote:காதல்....என்ற சொல்லை சொன்னால் காதல் வந்து விடுமா..காதல் என்ற சொல்லை ஆணுக்கும் பெண்ணுக்கும் வருவதை கூறுகிறார்ளா இல்லையே...

காதலாகி கசிந்து கண்ணீர என்று இறைவனோடோயே காதல் கொள்கிறார்கள்..காதல் எனற சொல் பல இடங்களிலை பல விதமாக பாவிக்கிறார்கள்

இஙகை பேசப்படுகின்ற காதல் ஆணுக்கும் பெண்ணுக்கும் ..இரண்டு மனங்கள் ஈர்க்கின்றன என்று புலுடா விட்டாலும் எதிர்ப்பால் ஈர்ப்பு தான் முதலில் தங்கியிருக்கிறது.

அழுகு என்பதை காலத்துக்கு காலம் வெளியுலகம் வரையறை செய்வதை மனம் உள் வாங்கி கொள்கிறது அதன் அடிப்படையிலேயே எதிர்ப்பாலாரை தேடுகிறது..உடலழகை மீறி இரண்டு மனங்களும் telepathy மூலமாக கதைத்து சேருகின்றன இல்லேயே..

காதல் மிகைப்படுத்த உணர்வாக வேறு ஓன்றிலும் தஙகியிராத தெய்வீகமான தூய்மையான ஒன்றாக காலம் காலமாக ஆழ் மனத்துக்கு புகுத்தப்பட்ட ஒன்றேயொழிய வேறொன்றுமில்லை...

காதல் எப்போதும் தனித்து நிற்காது ஏதாவது ஒன்றில் தங்கியே தீரும்

எனக்கு ஸ்ராலின் அண்ணா சொல்றதில உடன்பாடாத்தான் இருக்கு. காதல் வந்து தனித்த நிக்காது அது ஏதோ ஒரு தேவைய நோக்காகக் கொண்டுதான் உருவாகுது. ஒண்டில் அது பாலியல் தேவையா இருக்கலாம் இல்லாட்டி வேற ஏதாவதாவும் இருக்கலாம். எதிர்ப்பால் ஈர்ப்பு எப்பிடி முதன்மைபெறுதோ அதமாதிரி அழகும் முக்கிய இடத்த பெறுது. அழகெண்டேக்க உடல் கவர்ச்சியா இருக்கலாம் இல்லாட்டி குரல் குணம் எண்டும் இருக்கலாம்.

ஆனாலும் எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கு
நான் உன்னைக் காதலிக்கிறேன் எண்டு சொல்லுறதின்ர அர்த்தம் என்ன?
அப்ப நான் உன்னை நேசிக்கிறன் எண்டால் என்ன?
காதல் எண்டு சொல்லுறதுக்கும் அன்பு எண்டு சொல்லுறதுக்கும் என்ன வித்தியாசம்?
உலக்கத்தில எங்கள கவரக்கூடியவர் ஒரே ஒராள் மட்டுமா இருப்பினம்? குறைஞ்சது ஒரு ஆயிரம் பேராவது நான் விரும்பிற மாதிரி இருப்பினந்தானே? :roll:

இன்னும் நிறைய இருக்கு. பிறகெழுதுறன் :oops:


- MUGATHTHAR - 10-27-2005

எல்லாரும் நல்ல கருத்துக்களை கூறுகிறீங்க ஆனா காதல் 2 வித்தியாசமான இடங்களில் வர வாய்ப்பிருக்கிறது ஒண்று பாடசாலையில் படிக்கிற போது எதிர் பாலாருக்கிடையில் உண்டாவது இதுக்கு வெளிக்கவர்ச்சி அழகுதான் பிரதான காரணம் எதிர்காலத்தை பற்றி யோசிக்கவே சந்தர்ப்பம்மில்லை இப்பிடியான காதல்கள் வெற்றியடைவதற்கு நிறையப் போராட வேண்டி வரும்; அவை தோற்றுப் போவதற்கும் சந்தர்ப்பங்கள் உண்டு ஆனா ஒரு தொழில் புரியும் காலங்களில் ஏற்படும் காதல் இனக்கவர்ச்சியாக இருந்தாலும் பிற காரணிகள் எமது நிலைக்கு ஓத்து வருமா எண்டு சிந்திச்சு பார்ப்பதுக்கு நாம் பக்குவப்பட்டு விடுவோம் இந்த வயதுகளில் ஏற்படும் காதல் முறிவடைவதுக்கு சந்தர்ப்பம்கள் குறைவு. வீட்டிலும் தையிரியமாக எமது விருப்பத்தை சொல்லமுடியும் ( இந்த காதலில் மாட்டுப்பட்டீங்க...லேசிலை எஸ்கேப் ஆகிறது கஸ்டம் ஆனபடியா பாத்து.....................)


- RaMa - 10-28-2005

காதல் என்றால் என்ன? ஒரு பெண் ஆணிடமோ இல்லை ஆண் பெண்ணிடமோ ஆசை வைப்பதன் பெயரா காதலா? அம்மா மகளிடமோ மகள் அப்பாவிடமோ வைக்கும் அன்பும் ஒரு வகை காதல் தானே.... கடவுளிடம் நாம் பக்தி வைத்தால் அதுவும் ஓருவகை காதல் தானே.. காதலுக்கு இன்னும் ஆர்த்தம் முழுமையாக எனக்கு தெரியல...
காதல் என்பது புனிதமானது தெய்விகமானது என்றும் பிறர் சொல்லக் கேள்விப்பட்டேன்... அது திரைப்படங்களுக்குத் தான் சரி.. திரைப்படத்தில் காதலனும் காதலியும் காதல் பிரிவில் தவிப்பதை நாம் ரசித்துப் பார்ப்போம்.. ஆனால் நிஐ வாழ்க்கையில் காதல் பிரிவு என்பது வேதனை... காதலித்தால் சந்தோஷம் 50 வீதம் என்றால் சோதனை 51 வீதம்.. உண்மையான காதலுக்குத் தான் இத்தனை சோகம். சும்மா பொழுது போக்காக காதலிப்பவர்களின் காதல் வாழ்க்கை சந்தோசமாய்த் தான் போகும்.

ஆனால் முகத்தார் அங்கிள் சொன்ன கருத்து எமது தாயகத்தில் அதுவும் ஒரு நல்ல மனம் படைத்தவர்களுக்கு தான் பொருந்தும். ஆனால் புலம் பெயர்ந்த நாட்டில் யாருடைய காதல் உண்மைக் காதல் என்பதை அறிவது மிகவும் கஸ்டம்... எல்லா வயதினரும் தவறு செய்கின்றார்கள்..... முன்பு யாரோ சொன்ன பழமொழி அல்லது தத்துவமே அது தெரியலை... ஆனால் அது தான் எனக்கு ஞாபகம் வருகுது
அந்த தத்துவம்
20 பெண்களை அல்லது ஆண்களை பார்த்து
அதில் ஒரு 10 பேரிடம் பேசிப் பழகி
அதிலும் 5 பேரிடம் காதல் பாடங்களை படித்துவிட்டு
பிறகு பெற்றோர் பார்க்கும் ஆணையோ பெண்ணையோ மணப்பது தான் சரி.... (இதை நான் சொல்லலை... புலத்தில் கனபேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்)


- அருவி - 10-28-2005

MUGATHTHAR Wrote:எல்லாரும் நல்ல கருத்துக்களை கூறுகிறீங்க ஆனா காதல் 2 வித்தியாசமான இடங்களில் வர வாய்ப்பிருக்கிறது ஒண்று பாடசாலையில் படிக்கிற போது எதிர் பாலாருக்கிடையில் உண்டாவது இதுக்கு வெளிக்கவர்ச்சி அழகுதான் பிரதான காரணம் எதிர்காலத்தை பற்றி யோசிக்கவே சந்தர்ப்பம்மில்லை இப்பிடியான காதல்கள் வெற்றியடைவதற்கு நிறையப் போராட வேண்டி வரும்; அவை தோற்றுப் போவதற்கும் சந்தர்ப்பங்கள் உண்டு ஆனா ஒரு தொழில் புரியும் காலங்களில் ஏற்படும் காதல் இனக்கவர்ச்சியாக இருந்தாலும் பிற காரணிகள் எமது நிலைக்கு ஓத்து வருமா எண்டு சிந்திச்சு பார்ப்பதுக்கு நாம் பக்குவப்பட்டு விடுவோம் இந்த வயதுகளில் ஏற்படும் காதல் முறிவடைவதுக்கு சந்தர்ப்பம்கள் குறைவு. வீட்டிலும் தையிரியமாக எமது விருப்பத்தை சொல்லமுடியும் ( இந்த காதலில் மாட்டுப்பட்டீங்க...லேசிலை எஸ்கேப் ஆகிறது கஸ்டம் ஆனபடியா பாத்து.....................)


பலரை ஏமாற்றி ஒருவரை ஏமாற்ற சிரமப்பட்ட அனுபவம் போல.... :wink: