Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழ தேசிய கீதத்தை உருவாக்க....
#1
<span style='font-size:25pt;line-height:100%'><b>தமிழீழத்திற்கான தேசியப் பண் உருவாக்கத்திற்கு விடுதலைப் புலிகள் வேண்டுகோள்</b></span>

[size=16]தமிழீழத் தேசியப் பண்ணினை (தேசிய கீதம்) ஆக்கும் அருமுயற்சியில் பங்கேற்குமாறு தாயகத்திலும் உலகெங்கிலும் பரந்து வாழ்கின்ற தமிழுறவுகளிடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக அரசியல்துறையினர் விடுத்துள்ள அறிக்கை:

எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது வழி காட்டுதலோடும் நெறிப்படுத்தலோடும் கடந்த கால் நூற்றாண்டு காலத்துக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த விடுதலைப் போராட்டத்தினூடாக ஈழத்தமிழர் தாயகத்தில் ஒரு நடைமுறை அரசு நிறுவப்பட்டுள்ளது.

அதை நிலை நிறுத்துகின்ற வகையில் தேசியக் கொடி, தேசிய மலர் என்பன ஏற்கனவே அறிவிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
ஆயினும், தேசியப் பண் ஆக்கப்படாத நிலையில், எமது கொடி வணக்கப் பாடலையே தேசியப் பண்ணுக்கு மாற்றாக நாம் பயன்படுத்தி வருகின்றோம்.

தேசியப் பண் இன்றைய சூழலில் காலத்தின் இன்றியமையாத் தேவையாகிவிட்டது. எதிர்காலத்தில் மீக்குயர் பண்ணாக ஒலிக்கவிருக்கும் தமிழீழத் தேசியப் பண்ணினை ஆக்கும் அருமுயற்சியில் பங்கேற்குமாறு தாயகத்திலும் உலகெங்கிலும் பரந்து வாழ்கின்ற எமது இனிய தமிழுறவுகளை அன்புடன் அழைக்கின்றோம்.

தேசியப் பண்ணினை ஆக்க முன்வருவோர் தேச விடுதலைக்காகத் தம் இன்னுயிரை ஈந்த மான மறவர்களினது விடுதலை வேட்கைக்கும் தாயகம் பற்றி அவர்கள் கொண்டிருந்த எதிர்பார்க்கைக்கும் உயிர்கொடுக்கும் வகையில், துள்ளல் நடையில் மிடுக்கோடு கூடியதாகத் தேசியப் பண்ணினை ஆக்குதல் வேண்டும்.

எமது தாயகத்தின் சிறப்பு, பெருமை, வளம் என்பவற்றை வெளிப்படுத்துகின்ற வகையில் அமைக்கப்படும் தேசியப் பண், ஈழத்தமிழர்களின் விடுதலை வேட்கையையும் அதற்கு எம்மினம் கொடுத்த விலைகளையும் எமது வழித்தோன்றல்களின் நினைவில் நிலை நிறுத்தக் கூடியதாக பிறமொழிக் கலப்பற்றதாக அமைதல் வேண்டும்.

இவ்வாறாக எமது தேசியப்பண் ஆகக்கூடியது பதினெட்டு வரிகளுக்குள் உயர் வீச்சைக் கொண்டதாக அமையவேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தேசியப் பண்ணுக்குரிய ஆக்கங்களை அனுப்புபவர்கள் தமது முழுப்பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களையும் இணைத்து அனுப்புதல் வேண்டும்.

உருவாக்கப்படும் தேசியப் பண்ணுக்குரிய ஆக்கங்கள் <b>27.11.2005 ஆம் நாளுக்கு முன்னதாகப் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.</b> தாயகத்தில் உள்ளவர்கள் தத்தம் பிரதேச அரசியல்துறை செயலகங்கள் ஊடாகவும் அனுப்பி வைக்கலாம்.

மின்னஞ்சல்: editorial@viduthalaipulikal.com
தொலைபேசி: +94 21 228 5010
தொலைநகல்:

நன்றி புதினம்....
[b]

,,,,.
Reply


Messages In This Thread
தமிழீழ தேசிய கீதத்தை உருவாக்க.... - by selvanNL - 10-27-2005, 01:58 PM
[No subject] - by வினித் - 10-27-2005, 04:16 PM
[No subject] - by Netfriend - 10-27-2005, 04:21 PM
[No subject] - by cannon - 10-27-2005, 05:26 PM
[No subject] - by KULAKADDAN - 10-28-2005, 12:54 PM
[No subject] - by MEERA - 10-29-2005, 02:21 PM
[No subject] - by Mathuran - 10-29-2005, 08:51 PM
[No subject] - by வினித் - 10-30-2005, 04:04 PM
[No subject] - by Rasikai - 10-31-2005, 08:15 PM
[No subject] - by iruvizhi - 10-31-2005, 10:36 PM
[No subject] - by hari - 11-17-2005, 06:07 AM
[No subject] - by வியாசன் - 11-17-2005, 09:16 AM
[No subject] - by Rasikai - 11-17-2005, 06:38 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)