10-27-2005, 11:46 AM
aathipan Wrote:<img src='http://en.wikipedia.org/wiki/Image:Ghostly_monk.jpg' border='0' alt='user posted image'>
இது எனக்குத்தெரிந்த நண்பர்களுக்கு நடந்தது. அவர்கள் இங்கு (அவுஸ்திரேலியா) ஒரு கடையில் வேலைசெய்கின்றார்கள். அதன் அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து இருந்து வந்தார்கள். சில நாட்களாக அவர்கள் இரவில் நித்திரை கொள்ள முடியவில்லை. இரவு சுமார் இரண்டுமணியளவில் ஏதோ ஒன்று அவர்களை வந்து பிடித்து அமத்துமாம். இரண்டு நண்பர்களையும் அது விட்டு வைக்கவில்லை. சில சமயங்களில் நெஞ்சில் ஏறி அமர்ந்தும் விடுமாம். மீண்டும் தூங்கினால் மீண்டும் வந்து தொந்தரவு செய்யுமாம். தொடர்ந்து சில நாட்கள் தூக்கம் இல்லாது அவர்கள் அவதிப்பட்டனர். இரவில் விளக்கு ஏற்றி தேவாரம் பாடிவிட்டு படுத்தாலும் அந்தப்பேய்கள் வந்து தொந்தரவு கொடுக்குமாம். இப்போது அவர்கள் வேறு வீடு எடுத்து சென்றுவிட்டார்கள். இப்போது நிம்மதியாக இருக்கின்றார்கள். வெளியே எங்கும் சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பினால் கைகால் அலம்பி விளக்கு வைத்து வணங்கினால் இந்தப்பிரச்சனை வராது.
இதற்கு பெயர் அமுக்கினிப்பிசாசு, கத்த வேண்டும்போல் இருக்கும் ஆனால் சத்தம் வராது, எழும்ப வேனும்போல் இருக்கும் அனால் எழும்ப முடியாது மேலே ஏறி இருந்து அமுக்குவது போல் இருக்கும், எனக்கு பலமுறை வந்திருக்கிறது, இதற்கு காரனம் பேய் அல்ல மனம்தான்
விழித்து எழுதல் என்பது தனிய உடல்மட்டும் எழும் விடயமல்ல, விழித்தல் என்பது மனதும் உடலும் ஒரே நேரத்தில் எழுதல் ஆகும், ஏதாவது ஒண்று முன்னுக்கு பின் நடக்கும் போது இந்த பிரச்சனை நடக்கிறது, அனேகமாக உடல்தான் பிந்தி எழுகிறது, அமுக்கினிபிசாசுக்கும் இதுதான் காரணம், நாளைய தேவைக்காகவும் அவசரத்துக்காகவும் மனம் முதலில் விழித்து விடுகிறது தனக்கு தேவயான ஓய்வு கிடைக்காமையாலும், களைப்பாலும் உடல் எழ மறுக்கிறது,
அதனால்தான் கத்தநினைத்தாலும் சத்தம் வருவதில்லை எழும்ப நினைத்தாலும் எழும்ப முடிவதில்லை, மேலே யாரோ எறி எழும்பவிடாது தடுக்கிறமாதிரி இருக்கும், அந்தநேரத்தில் மனம் விழித்து விட்டது உடல் விழிக்கவில்லை என்ற எண்ணத்தை கொண்டுவாருங்கள், மனம் அமைதி அடந்துவிடும் , முடியாவிட்டால் நடப்பது நடக்கட்டும் என்று சிறுது நேரம் படுத்திருங்கள், உடலும் உள்ளமும் சமன்பட்டு சாதாரன விழிப்பு ஏற்படும். இதை பழக்கத்தில் கொண்டுவந்தால் அமுக்கினி ஓடியே ஓடிவிடும்.
காற்றோட்டமான படுக்கை வசதியும் முக்கியம்.
.
.
.

