10-27-2005, 09:44 AM
இடியப்பதுடன் சாப்பிடுவதற்கு இப்படியொரு வாக்களிப்பா? சிறுவனாக பாடசாலையில் படித்துக்கொண்டிருந்தபோது கண்டவற்றைக் குறிப்பிட விரும்புகிறேன். அந்த நாட்களில் சாதாரணமாக எல்லோரும் காலையில் பிட்டுத்தான் அவிப்பார்கள். கொஞ்சம் வசதியானவர்கள் இடியப்பம் செய்வார்கள். இன்னும் அதிகமாக வசதியானவர்கள் தோசை, அப்பம் என்று காலையில் செய்து தமது பிள்ளைகளுக்குக் கொடுத்துவிடுவார்கள். இடியப்பம், பிட்டுடன் அநேகமாக சீனிதான் கொண்டுவருவார்கள். வசதியானவர்கள்தான் சம்பல் கொண்டுவருவார்கள். சொதி, குழம்பு கிடையவே கிடையாது. காலம் மாறிவிட்டது. எனக்குப்பிடித்தது ~அரைச்ச குழம்பு~ என்று அம்மா செய்வார் அதனுடன் சாப்பிட்டது இப்போதும் இனிக்கின்றது. ஆனால் அதற்குள் மீன் போடக்கூடடாது ஏனென்றால் நான் இப்போது சைவம்.
அது சரி தமிழைப்பற்றியும் பல போட்டிகள் வைக்கலாமே!
நான் ஒரு தமிழ் ஆசிரியர்.
அது சரி தமிழைப்பற்றியும் பல போட்டிகள் வைக்கலாமே!
நான் ஒரு தமிழ் ஆசிரியர்.

