10-25-2005, 09:45 PM
kurukaalapoovan Wrote:உபரியும் என்ற சொல்லின் ஆங்கில விளக்கத்தை தரமுடியுமா நாரதர்?
உபரி எண்டால் ஆங்கிலத்தில சேர்ப்பிளஸ்.(surplus)
இதை முன் மொழிந்தத்து கார்ல் மாக்ஸ் ,டாஸ் கபிடாலில.
இதை எனக்கு விளங்கின மாதிரி விளக்கினா,
ஒரு நாள் வேலை செய்பவர் ஒரு பண்ணயாரிடம் 100 ரூபாவுக்கு வேலை செய்து உருவாக்கும் பொருளை
பண்னயார் 200 ரூபவிற்கு விற்கிறார்.அந்த வேலை செய்தவரின் உபரி உழைப்பானது பண்னயாரின் உபரி ,
லாபகாமாக, மூலதனப் பெருக்கம் அடைகிறது.100 ரூபா பெற்ற தொழிலாழி அந்த 100 ரூபாயை தனது வாழ்வதற்கான பொருட்களை
வாங்குவதில் செலவு செய்து விடுகிறார்.அதனால் அவர் தொடர்ந்த்து வாழ்வதற்காக மீண்டும் தனது உழைப்பை இன்னொரு வருக்கு விற்க வேண்டும்.
ஆனால் 100 ருபாயை 200 ஆகியவர், தனது மூலதனத் திரட்சியை இவ்வாறான பரிமாற்றலினூடாகப் பெருக்கிக் கொள்கிறார்.
இதனால் மூலதனம் ஒரு இடத்தில் குவிக்கப் படுகிறது.
இந்த மூலத்னத் திரட்சியினால் தான் உலகின் செல்வத்தின் 80 வீதம் உலக சனத் தொகையின் 5 சத வீததிடம் தேங்கி நிற்கிறது.
இப்ப இதயே நாடுகளைப் பார்த்தா மூலதனத்தை வைத்திருக்கும் நாடுகளிடம் மற்ற நாடுகள் கடன் வாங்கி ,தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்கின்றன.
அந்தக் கடனுக்கு வட்டியும் குடுக்கின்றன.பிறகு அந்த நாடுகளிலே உள்ள மூலவளங்களைக் கொண்டு மேற்குலக நாடுகள் பொருட்களை உற்பத்தி செய்கின்றன .பின்னர் அவற்ரை திரும்ப
அதே நாடுகளுக்கு விற்கின்றன.இந்த சுழற்ச்சியில் மூலதனத்தைப் பெருக்கிக் கொள்கின்றன.
எனக்கு இருக்கும் கேள்வி ,இவ்வாறான சமத்துவம் அற்ற பொருளாதார
முறமயை நிராகரித்து உருவாக்கப்பட்ட சோசலிச பொருளாதர முறமை ஆனது ஏன் தோல்வி அடந்தது என்பதுவே.

