06-22-2003, 08:36 AM
தாய்லாந்தில் பேச்சுக்கள் ஆரம்பமாக முன்பு அமைச்சர் மிலிந்த மொறகொட இந்தியாவுக்கு போயிருந்தார். அங்கே அவரிடம் செய்தியாளர்கள் இடைக்கால நிர்வாகம் பற்றிக் கேட்டார்கள். அதற்கவர் "சொற்பொறிக்குள் சிக்க வேண்டாம்" என்று பதில் கூறினார்.
இடைக்கால நிர்வாக சபை என்ற சொல்லும் சிங்கள வெகுசனங்களுக்குப் பீதியுூட்டும் ஒரு சொல்லாகிவிட்டபடியால் தான் மொறகொட அப்படிக் கூற வேண்டியிருந்தது.
இதன்படி அரசாங்கம் ஒன்றில் இடைக்கால நிர்வாக சபை என்ற சொல்லைத் தவிர்த்துவிட்டு வேறொரு பெயரைப்பாவிக்கப் போகிறதா? அல்லது இடைக்கால நிர்வாக சபைக்குப் பதிலாக வேறொரு புதிய ஏற்பாட்டை உருவாக்கப்போகிறதா?
நடந்து முடிந்த முதற்சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் இதைத்தான் காட்டுகின்றன. சமாதானத்துக்கான சிலகூட்டுச் செயலணிகளை உருவாக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது உத்தேச இடைக்கால நிர்வாக சபைக்குரிய பொறுப்புக்களைச் சொரியலாக நிறைவேற்றும் ஒரு நடவடிக்கையே.
இப்படி சொற்பொறிக்குள் சிக்கிவிடாதிருக்கும் உத்திகள் ஒருபுறம்.
இன்னொருபுறம் தாய்லாந்தில் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் கூறியவை சொற்பொறுக்கிகளுக்கும் சொற்தொங்கிகளுக்கும் வாய்ப்பாக அமைந்துவிட்டது.
தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடத்தயார் என்று அவர் கூறியது கொழும்பிலும் சர்வதேச அளவிலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கொழும்பில் உள்ள சொற்பொறுக்கிகளும் சொற்தொங்கிகளும் கலாநிதி பாலசிங்கத்தின் சொற்களில் தொங்கத் தொடங்கிவிட்டார்கள்.
ஆனால் காலநிதி பாலசிங்கம் மிகவும் சமயோசிதமாகவும் சூசகமாகவும் ஒன்றைக் கூறியுள்ளார். தமிழர்களின் தாயகம் மற்றும் சுயநிர்ணய உரிமை போன்றவற்றை ஒப்புக்கொள்ளும் ஒரு இறுதித்தீர்வே பிரிவினைக்கு ஈடானதாயிருக்கும் என்பதே அது.
கொழும்பில் உள்ள சொற்பொறிக்கிகளும் சொற்தொங்கிகளும் அவசரத்தில் இதைத் தவறவிட்டுவிட்டது போலத் தோன்றுகிறது. அல்லது வழமைபோல இது ஒரு தந்திரமான மௌனமாயிருக்கலாம்.
அதேசமயம் ஜே.வி.பி. முன்பு பாடமாக்கிய மார்க்சிசத்தில் சில விசயங்களையாவது இன்னும் மறந்துவிடவில்லை என்பது போலக் கருத்துக்கூறியுள்ளது.
கலாநிதி பாலசிங்கம் கூறிய தமிழர்தாயகம், சுயநிர்ணய உரிமை போன்றவற்றின் அடிப்படையில் பிரிந்துபோகும் உரிமை தமிழர்களுக்கு உண்டு என்பதால் புலிகள் பிரிவினைக்கோரிக்கையை வேறு வழிகளில் முன்வைக்கின்றனர் என்று ஜே.வி.பி. கூறுகிறது.
இங்கே நாம் கவனிக்க வேண்டிய மிகவும் குரூரமான யதார்த்தம் என்னவென்றால்- தமிழர்களின் உயிரும் நிலமும் வாழ்வும் உரிமைகளும் இப்படி சொற்பொறிக்குள் சிக்கிவிடக்கூடிய அல்லது சொற்பொறுக்கிகள் சொற்தொங்கிகளிடம் சிக்கிவிடக் கூடிய அற்ப விவகாரங்களாகத்தான் இன்னமும் இருக்கின்றன என்பதே.
ஒரு தீர்வைப் பற்றி எடுத்த எடுப்பிலேயே கதைத்தால் இருக்கின்ற சுமூகநிலையும் கெட்டுப்போய்விடும் என்பதாற்தான் தீர்வைப்பற்றிய உரையாடலை ஒத்திவைக்கவும் இடையில் ஒரு இடைக்கால நிர்வாகத்தைப் பற்றிச் சிந்திப்பது என்றும் முதலில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இப்பொழுது இடைக்கால நிர்வாக சபையும் கூட சிங்களவருக்குப் பீதியுூட்டும் ஒன்றாகிவிட்டதுபோலத் தோன்றுகின்றது என்பதால் இடைக்கால நிர்வாக சபையை உருவாக்குவதற்கு முன்னோடியாக மேலும் ஒரு இடைக்கால ஏற்பாடாக கூட்டுச் செயலணிகளை உருவாக்க முயல்வது போலத்தோன்றுகின்றது. அதாவது இடைக்கால நிர்வாக சபைக்கு முன்பாக மேலும் ஒரு இடைக்கால ஏற்பாடு.
இக்கூட்டுச் செயலணிகள் அதிகாரப் பகிர்வுக்கான கருநிலைச் செயற்பாட்டுத்தளங்களாய் அமையும் வாய்ப்புக்கள் அதிகம் தெரிகின்றன.
அரச செயலக வட்டாரங்களிலிருந்து வரும் தகவல் ஒன்றின்படி வடக்கு கிழக்கில் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர்மட்ட அரச அதிகாரிகளின் கூட்டங்கள் எல்லாவற்றிலும் புலிகளின் பொறுப்பு வாய்ந்த பிரதிநிதி ஒருவர் பிரசன்னமாயிருக்க வேண்டும் என்றும் இது பற்றிய விபரம் கூட்ட நடவடிக்கைக் குறிப்புகளில் பதியப்பட்டிருக்க வேண்டும் என்றும் ஒரு அறிவுறுத்தல் சமாதானச் செயலகத்தின் இயக்குனர் பேணார்ட் குணதிலகவிடமிருந்து வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இது நிர்வாக மட்டத்தில் முடிவுகளை எடுக்கும்போது புலிகளையும் பங்காளிகளாக்க அரசாங்கம் விரும்புவதையே காட்டுகிறது.
மெய்யான அர்த்தத்தில் கூறுவதாயிருந்தால் அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் தமிழ்ப் பகுதிகளில் புலிகள் அரசியல் வேலைகள் செய்ய அனுமதிக்கப்பட்ட போதே அதிகாரப் பகிர்வு அதன் கருநிலையில் தொடங்கிவிட்டது. இப்பொழுது இரண்டாம் கட்டம் வெளிநாட்டு நிதியைப்பெறுவது பிரயோகிப்பது போன்றவற்றில் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் ஒருவித அதிகாரப்பகிர்வு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச நிறுவனங்களின் மதிப்பீட்டின்படி யுத்தப் பிரதேசங்களில் புனர்வாழ்வு புனரமைப்புப் பணிகளுக்குச் சுமார் 5000 லட்சம் அமெரிக்க டொலர்கள் தேவை.
மற்றது முழு அளவு இயல்புநிலையை உருவாக்குவதற்கான கூட்டுச் செயலணிகள் இவற்றின் வீச்செல்லை கண்ணிவெடிகளை அகற்றுவதிலிருந்து உயர்பாதுகாப்பு வலயங்களைப் பற்றிக் கதைப்பது வரை வரும். இது இராணுவமய நீக்கத்திற்கான செயற்பாட்டுத்தளமாக இருக்கும். யுத்தநிறுத்தத்தின் அடுத்த கட்டம் இராணுவ அர்த்தத்தில் இதிலிருந்து பயன்பொருத்தமான விதத்தில் தொடங்கும்.
இப்படிக் கூட்டுச் செயலணிகளை உருவாக்குவதன் மூலம் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கும் இடைக்கால நிர்வாகத்திற்கும் இடையில் உள்ள இடைவெளியை நிரப்ப முடியும் என்று நம்ப இடமுண்டு. அதேசமயம் இடைக்கால நிர்வாக சபைக்குள் அடங்கும் அம்சங்களைச் சொரியலாகவும் படிப்படியாகவும் சமாதானத்துக்கு எதிரான சக்திகளின் கவனத்தை அதிகம் ஈர்க்காதவிதத்திலும் அமுல்ப்படுத்த முடியும் என்று அரசாங்கம் நம்புவது போலவும் தோன்றுகின்றது.
இது எதைக்காட்டுகிறது என்றால் இலங்கைத்தீவில் விஞ்ஞானபுூர்வமாகச் செய்யப்படும் சமாதானம் வெளிப்படையானதாக நேரடியானதாக இருப்பதற்குரிய வாய்ப்புக்கள் குறைவு என்பதையே.
சமாதானத்தின் வழியில் காணப்படும் தத்துக்களையும், சோதனைகளையும் கடப்பதற்கு அதிகம் கற்பனையும் தந்திரங்களும் உத்திகளும் தேவைப்படுகின்றன என்பதையே.
ஆனால் இது எதுவும் அரசாங்கம் ஒரு கட்டத்தில் சமாதானத்தை ஒரு தந்திரமாக அல்லது பொறியாகப் பாவிக்கக்கூடும் என்ற தமிழர்களின் இயல்பான அச்சத்தைப் பெருப் பிக்காமலும் இருக்கவேண்டும்.
நிலாந்தன்