10-25-2005, 11:11 AM
Vasampu Wrote:1992 இல் ஜேர்மன் சென்ற செல்வகுமாருக்கு அங்கு வதிவிட உரிமை கிடைத்த போதும் தனது மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் அங்கு அழைக்க விரும்பவில்லை. இதனால் விசனமடைந்த மனைவி கடந்த வருடம் சுற்றுலா விசாவில் ஜேர்மன் சென்று கணவனின் செயலை வன்மையாகக் கண்டித்ததுடன் இது குறித்து ஜேர்மன் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப் போவதாகவும் மிரட்டியதையடுத்து இவ்வருடம் மார்ச் மாதம் தனது மனைவியையும் 3 பிள்ளைகளையும் ஜேர்மனுக்கு அழைத்திருந்தார்.
முகத்தார் நீங்கள் தந்த செய்தியில் மேலே சுடடிக் காட்டப்பட்ட பகுதியை ஒரு முறை படித்துப் பாருங்கள். கொஞ்சம் இடிக்கிறது. எதற்கும் சரியான தகவல் அறிந்தவர்கள் இதுபற்றித் தெரிந்திருந்தால் விபரம் தரவும்
இந்த சம்பவம் உண்மைதான். இறந்த பெண்ணின் சகோதரி ஒருவர் இங்கு ஜேர்மனியில் வசிக்கின்றார் அவர்கள்தான் முதலில் சுற்றுலா வீசாவில் இங்கு அழைத்திருந்தார்கள். பின் கணவருடன் ஒன்று சேர்த்துவிட்டார்கள்.
" "

