Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தாயகத்து அரசியல் கட்டுரைகள்
#20
எல்லாமே சற்று மாறுபாடாக இருந்தது. வாசலில் காவலுக்கு நின்ற சிப்பாய்களில் வழமையான விறைப்பு இல்லாமல் சாதுவான இலகுத்தன்மை இருந்தது.
ஆளைச் சோதிப்பவன் தலை அசைத்து அனுமதித்துவிட்டு சுவரில் காலை முண்டு கொடுத்து நின்றான்.
சற்றுத் தயங்கி நின்ற செல்லப்பு சிரித்து சமாளித்து நடந்தார். கேணல் நாற்காலியில் சாதுவாக சாய்ந்திருந்தான். முகத்தில் வழமையான இறுக்கம் தளர்ந்து ஏதோவொரு மாறுதல் தென்பட்டது.
கிழவரை அமரும்படி கூறினான். தேனீருக்கு உத்தரவு கொடுத்து விட்டு சினேகபுூர்வமாக புன்னகைத்தான்.
கிழவரிடமிருந்து வழமையான பயம் கலந்த, சமாளித்த வெற்றி கொள்ளும் சிரிப்பே எதிரொலியாக இருந்தது.
அது நடிப்பு என்பதை கேணல் அறிவான். அவன் கிழவரை நன்றாகவே எடை போட்டிருந்தான். அவரின் பணிவு, பௌவியம் எல்லாம் இராஜதந்திரமானது என்றும் அந்த, முதியவரின் நினைவெல்லாம் தன் மக்களின் நலனில் மட்டும்தான் என்பதையும் அவன் அறிவான். மற்றும்படி அந்தக் கிழவனின் எண்ணத்தில் வேறு எதுவுமே இல்லை என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும்.
அவனுக்கும் இது விருப்பமான பணியல்ல. இத்தொழிலுக்கு விரும்பியும் அவன் வரவில்லை.
ஆனந்தா கல்லூரி மைதானத்தில் நிற்கும் போதெல்லாம் எதிரியின் பந்து வீச்சை எப்படி சிதறடிப்பதென்பதே அவன் கனவாக இருந்தது.
கிறிக்கட், கிறிக்கட் அதுவே அவனது நினைவு முழுவதும் நிரவி இருந்தது!
அவனைப் பொறுத்தவரை, அதுவொரு அருமையான விளையாட்டு, கவனத்தை ஒருமைப்படுத்தி, பந்தின் வேகம், திரும்பல் ஆகியவற்றை நுணுக அவதானித்து பந்தை அதன் போக்குக்கேற்ப திருப்பி அல்லது அடித்து ஓட்டங்களை குவிக்கவேண்டும். நினைப்பது மாதிரி இதொன்றும் இலகுவானதல்ல. கவனத்தின் சின்ன சிதறல் அல்லது ஓர் சிறு தவறு ஆள் அவுட்.
அவன் நல்லதொரு துடுப்பாட்ட வீரன், விளையாட்டு மைதானத்தைவிட்டு விலகி இவ வளவு நாட்களாகியும் அது கற்றுத் தந்த பாடங்களை அவன் மறப்பதில்லை.
ஆனால், வெற்றிகளையே எப்போதும் அவன் விரும்பினான். தோல்விகளை ஏற்கமுடியாமல் தடுமாறினான்.
அது விளையாட்டு, இது யுத்தம், ஆனந்தா கல்லூரி மைதானம் போன்று இது சுகமானதல்ல. இங்கு வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிப்பது சிந்தப்படும் இரத்தம். ஆனால் அவனது பலவீனம் இங்கும் தொடர்ந்தது. தோல்விகள் அருகில் வரும்போது இப்போதும் அவன் தடுமாறினான்.
கேணல் கடவாய்ப் பல்லுக்குள் சாதுவாக சிரித்துக் கொண்டே 'நாங்கள் நாளை போகிறோம்' என்றான் ஆங்கிலத்தில்.
கிழவர் தாக்குண்டார். மனதிற்குள் பரவசம் பற்றிப் படர்ந்தது. 'அப்போ, இனி விடுதலையா?' கேள்வி எழுந்து விஸ்வரூபமாடியது அடுத்த நொடி அவரின் சிறு மகிழ்ச்சி சிதறியது.
'நாளை புது றெஜிமென்ட் இந்த பகுதியை பொறுப்பேற்கும், நாங்கள உங்களை விட்டு விலகுகிறோம்' என்றான் கேணல்.
கிழவர் எதுவும் பேசவில்லை. சிறு மௌனத்தின் பின்பு அவனே தொடர்ந்தான்.
'நான் உங்களைலு} உங்களை மட்டும் மதிக்கிறன். உங்களோட மனம் விட்டு பேச விரும்புறன். அதற்காகத்தான் வரச்சொன்னேன்' அவன் நிறுத்தினான்.
கிழவர் நிமிர்ந்திருந்தார். முதன் முதலாக இவன் பேச சந்தர்ப்பம் தருகிறான். ஏனென்று தெரியவில்லை. ஏதோ தெரிந்து கொள்ளவிரும்புகின்றான். நல்லது, இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்ற முடிவோடு, 'சரி பேசலாம்' என்றார் கிழவர்.
'நீங்கள் ஏன் எங்களை புரிந்து கொள்கின்றீர்கள் இல்லை. உங்களை விடுவிக்கத்தானே நாங்கள் இவ வளவு கஸ்ரப்படுறம்'
கிழவர் அவனை நன்றாகப் பார்த்தார். அவன் இந்தமுறை பயன்படுத்திய 'நீங்கள்' என்ற வார்த்தை தன்னைக்குறிக்கவில்லை என்றும் அக்கேள்வி தன் இனத்தை நோக்கி கேட்கப்பட்ட கேள்வி என்பதையும் கிழவர் உணர்ந்துகொண்டார்.
'விடுவிப்பு என்று எதை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள், அதை யார் தீர்மானிக்க வேண்டும். என்னுடைய விடுதலை எது என்னுடைய சுதந்திரம் எது என்பதை நான் அல்லவா முடிவு செய்யவேண்டும்' அவனது விழிகளிற்குள்ளால் அவனது உணர்வுகளின் மாறுபாடுகளை அனுமானித்துக் கொண்டே கிழவர் தொடர்ந்தார்.
'அதெல்லாம் இருக்கட்டும் எங்களை நீங்கள் யாரிடம் இருந்து விடுவிக்கப் போகிறீர்கள்' கிழவர் கேணலின் முகத்தைவிட்டு விழிகளை அகற்றவில்லை. அவன் மௌனமாகவே இருந்தான்.
'இது நான் பிறந்து வளர்ந்த மண், இப்ப எனக்கு எழுபத்தைந்து வயது, நான் அறிய அப்ப இங்க ஒருத்தரும் ஆயுதங்களோட அலையேலை. இப்போ மட்டும் இப்பிடி ஏன்'
கேணல் கையை உயர்த்தி நிறுத்தினான்.
'இந்தச் சின்னத்தீவில இரண்டு நாடுலு}.' நிறுத்தி முகத்தைச் சுழித்தவன் கேட்டான்,
'தேவையா'
'ஆருமே கேட்கவில்லையே' கேணலின் விரிந்த விழிகளைப் பார்த்துக் கொண்டே கிழவர் தொடர்ந்தார்.
'அந்த நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டதுலு} உங்களால' கடைசிச் சொல்லை சற்று அழுத்திச் சொல்லிவிட்டு குனிந்தவர் நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்துக்கொண்டே.
'இதில் வேதனை என்னவென்றால் இங்கு ரெண்டு நாடுகள் இருந்தது உங்களுக்கு நல்லாவே தெரியுமல்லவா' என்றார்.
அவன் சாதுவாக சிரித்தான், 'அரசியல் வேண்டாம்' என்று தலையசைத்தான்.
அரசியலுக்காகவே காலம் காலமாக இங்கு யுத்தம், யுத்தமே அரசியல்தான். இந்நாட்டின் அரசியல்தான் இவனுக்கு இந்த உடையை மாட்டி இங்கு வீசிவிட்டிருக்கிறது. இது இவனுக்கு தெரியாததல்ல. ஆனால், பேச்சை மாற்ற விரும்புகிறான் என்பதை உணர்ந்து கிழவர் நிறுத்தினார்.
அவன் தடுமாறி இருப்பது தெரிந்தது. குழம்பிய கண்கள் சிவந்திருந்தன.
'நான் உங்களிடம் தோற்றுவிட்டேன்' என்று சொல்லி மௌனமானான். திடீரென, மேசை லாச்சியை திறந்து கோப்பொன்றை எடுத்து மேசையில் போட்டான்.
'உங்களுக்கு விருப்பமென்டா இதை திறந்து பாருங்கோ..' சிறிது நேரம் அக்கோப்பையே பார்த்தவன் உணர்ச்சி வசப்பட்டவனாக நிமிர்ந்தான்.
'ரெண்டு வருசம்லு} ரெண்டு வருசம், இதற்குள்ள நான் முப்பது சோல்டியேசை இழந்திருக்கிறன். முப்பது சண்டை இல்லாமல், எந்த வெடிச்சத்தமும் கேட்காமல் முப்பதுபேர்.., இங்கு நாங்கள் ஆரோட சண்டை பிடிச்சம், என்னத்தோட சண்டை பிடிச்சம், நிலவு, நிழல், இருள், சத்தம், சரசரப்பு எல்லாத்துக்கும் சுட்டம், எல்லாவற்றோடும் சண்டை பிடிச்சம்.. இந்த பைலை பாருங்கோ தவறுதலான சூட்டில் மட்டும் ஐந்துபேர் அந்தக் கோப்பை விரித்து மேசையில் வீசினான்.
கிழவரில் சலனமில்லை. இவன் தன் இராணுவ விடயங்களை ஏன் தன்னுடன் பகிர்ந்து கொள்கிறான் என்பதுதான் அவருக்குப் புரியவில்லை. ஆனால், மனதால் நன்றாக தாக்கப்பட்டு விட்டான் என்று மட்டும் புரிந்தது.
'நீங்க ஒவொருவரும் எங்களை வெறுக்கீறிங்க. குடிக்கிறதற்கு தண்ணி தரேக்கைகூட ஏதோவொரு விருப்பமின்மையை சிரித்துக்கொண்டே வெளிப்படுத்துறீங்கள்லு} உங்கட சின்னதுகளுக்கு கூட இதை கற்றுத் தந்திருக்கிறீங்கலு} ஓர் அன்னியத் தன்மை, விலகி ஒதுங்கும் இயல்புலு} இதுகளால என்ர ஒவ வொரு படைவீரனும் பாதிக்கப்பட்டிருக்கிறான் தெரியுமா? எறிந்த கோப்பை திரும்பவும் கையில் எடுத்து தாள்களைத் தட்டினான்.
'மனநிலை சீரில்லா படை வீரர்களை வைத்துக்கொண்டு யார்தான் என்ன செய்ய முடியும்? மூளை குழம்பிப்போன ஒருவனால என்னுடைய மூன்று பையன்கள்.. அவனோடு சேர்ந்து நாலுபேர்.' சொல்லிவிட்டு கோப்பை திரும்பவும் மேசையில் வீசினான்.
அவனுடைய தேகம் படபடத்தது. கண்கள் மேலும் சிவந்து கலங்கிப் போயிருந்தன. முகமும் தேகமும் வியர்த்திருந்தது. அவன் தன்நிலை இழந்திருந்தான்.
'என்னைப் பொறுத்தவரை உங்கள் ஒவ வொருவரையும் தேடித்தேடி ஓட ஓட விரட்டிச் சுட வேண்டும் என்பதே விருப்பம்'

இறுதியாக அவன் தன்னை வெளிக்காட்டினான். இங்கு கூத்தாடும் பேரினவாதப் பேயின் சின்னங்களில் அவனும் ஒருவன்.
சாதாரண மனிதனாக அவன் மாற விரும்பினாலும் அவனால் முடியாது. ஏனெனில் அது அவனுக்குள் விதைக்கப்பட்டு விட்டது. அப்படியே இவன் மாறினாலும் ஆகப்போவது எதுவுமே இல்லை. இவன் கருவி, இயக்குபவனை விடுத்து கோடரியை கோவிப்பதில் அர்த்தமில்லை. இவனது மூலம் வேறு. அது திடமானது. கல்லுப்போன்ற உறுதியானது. உணர்வோ உணர்ச்சியோ அற்றது.
இவன் இவனது படைவீரர்களோடு போகலாம், வேறொருவன் அவனது ஆட்களோடு வரலாம். இதனால் மாறுதல்கள் எதுவும் நிகழப்போவதில்லை. மாறுதல்கள் தானாக நிகழ்வதுமில்லை. மாறும் மாறாதது என்று எதுவுமில்லை.
கிழவர் வெளியில் வந்தார். நெஞ்சிற்குள் ஏதோ இலகுவாக இருந்தது. தன்னையுமறியாமல் நெஞ்சு நிமிர்ந்திருந்தார். கர்வம் தலைக்கேறி இருந்தது.
இந்த இரண்டு வருடமாக தன்னுடைய சனம் மௌனமாகவே ஒரு பெரும் போராட்டத்தை நடத்தி இருக்கின்றது. அதுவும் இந்த கர்வம் பிடித்த கேணலே ஒப்புக்கொள்ளுமளவிற்கு நடந்திருக்கின்றது என்பதை நினைக்க அவருக்கு பெருமையாகவும் இருந்தது.
வாசலில் காவலர்கள் சாதுவான சிரிப்புடன் போகச் சொல்லினர். அருகில் அந்த வால் மடங்கிய வெறி நாய் நின்றது. வாயில் மாலையாக வீணீர்வடிந்தது.
திகைத்து நின்றார். அதன் வாயிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. நெஞ்சு திக்கென்றது. கண்களை திரும்பத் திரும்ப வெட்டிப்பார்த்தார். வெள்ளையாகவும் சிலநேரங்களில் சிவப்பாகவும் மாறி மாறி அதுகோலம் காட்டியது. அது வீணீராகத் தான் இருக்கவேண்டும். திடமான முடிவுக்கு அவரால் வரமுடியவில்லை.
அவர்கள் போகும்போது இதனை கூட்டிச் செல்ல மாட்டார்கள் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும்.
இதற்கு இந்த மண்தான் நிரந்தரம். அடுத்த பெரும் மழைக்கு எங்காவது வீதியில் செத்துக்கிடக்கும். கிழவர் தன்னையுமறியாமல் வானத்தைப் பார்த்தார். மழை வருவதற்கான குணம் குறி இல்லை.
வெறி நாயை மீண்டும் பார்த்தார். அதற்கு ஆயுள் சில நாட்கள் கூடவாக இருக்கலாம் என நினைத்தபடி நடந்தார்.
Reply


Messages In This Thread
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:01 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:02 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:03 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-21-2003, 09:04 PM
[No subject] - by sethu - 06-22-2003, 08:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:46 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:47 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:48 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:49 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:50 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:51 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:52 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:53 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:54 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:55 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:56 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:57 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:58 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 08:59 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:00 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:01 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:02 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:03 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:04 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:05 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:06 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:07 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:08 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:09 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:10 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:11 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:12 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:13 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:14 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:15 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:16 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:17 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:18 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:19 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:20 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:21 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:22 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:23 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:24 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:25 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:26 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:27 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:28 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:29 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:30 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:31 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:32 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:33 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:34 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:35 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:36 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:37 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:38 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:39 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:40 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:41 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:42 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:43 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:44 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:45 AM
[No subject] - by sethu - 06-22-2003, 09:46 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)