10-24-2005, 08:21 AM
<b>ஐந்துக்கும் அதிக விமானங்கள்
புலிகளிடம் இப்போது உள்ளன!
இராணுவ ஆய்வாளர் அத்தாஸ் தகவல்
""தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திடம் ஐந்துக்கும் அதிகமான விமானங்கள் இப்போது உள்ளன. வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு ஒன்றின் உள்ளூர் தரப்பினால் இந்த உண்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.''
இவ்வாறு "சண்டே ரைம்ஸ்' வார இதழில் அதன் இராணுவ விமர்சகரான இக்பால் அத்தாஸ் "வாராந்த பாதுகாப்பு நிலைவரம்' தொடர்பான தமது கட்டுரையில் தெரிவித்திருக்கின்றார்.
இதேசமயம் கடந்த பதின்னான்காம் திகதி விடியல் காலை வேளையில் யாழ். குடாநாட்டின்மீது பறந்த மர்ம விமானம் பற்றிய விவகாரமும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கவலையை ஏற்படுத்தியிருப்பதாக அவர் கூறியிருக்கின்றார்.
அன்று காலை 5.30 மணிக்கு அடையாளம் காணப்படாத ஒரு விமானத்தின் இயந்திரத்தின் வலுவான இரைச்சலைக் கேட்ட பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தோரும் புலனாய்வுத்துறையினரும் உடனே தத்தமது தலைமையகங்களோடு தொடர்பு கொண்டனர்.
அந்த விமானம் இரண்டாயிரத்து ஐந்நூறு முதல் மூவாயிரம் அடி உயரத்தில் பறந்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்த நேரம் இருளாக இருந்ததால் விமானத்தை யாரும் கண்ணால் காணவில்லை என்றார் அவர்.
""தெற்கிலிருந்து வடக்கு நோக்கி அந்த விமானம் பறந்ததாகக் கருதப்படுகின்றது.'' என்றும் அவர் சொன்னார்.
எனினும், இந்த இரைச்சலைக் கேட்டதைத் தவிர, அந்த விமானம் குறித்து உறுதிப்படுத்த வேறு ஆழமான ஆதாரங்கள் கிட்டவில்லை.
சட்டவிரோத படகுகளின் நடமாட்டம் குறித்துக் கண்டுபிடிப்பதற்காக அப்பிரதேசத்தில் பொருத்தப்பட்டிருந்த படையினரின் "ராடர்' களில்கூட இந்த விமானம் தோற்றவில்லை. கடல் கண்காணிப்புக்குரியவை என்றாலும் அதிதிறன் வாய்ந்த இந்த "ராடர்'கள் வானத்தில் இடம்பெறும் நகர்வுகளையும் கூட கடந்த காலத்தில் அடையாளம் காட்டியிருக்கின்றன.
ஒருதடவை, அனுமதி பெறாத விமானம் ஒன்று பறப்பதாக இந்த ராடர்களினால் அடையாளம் காணப்பட்ட ஒன்று பின்னர், பெரிய பறவைக் கூட்டம் என உறுதிப்படுத்தப்பட்டது.
இம்முறை யாழ். குடாநாட்டின் மீது பறந்ததாகக் கருதப்படும் விமானத்தின் இயந்திர உறுமல் மட்டுமே செவிமடுக்கப்பட்டுள்ளது. அது ராடரின் அடையாளம் காணப்படவில்லை.
இப்படி இக்பால் அத்தாஸ் தமது கட்டுரையில் தெரிவித்துள்ளார்
</b>
http://www.uthayan.com/pages/news/today/02.htm