06-22-2003, 08:33 AM
அன்புள்ள வகியனுக்கு
வணக்கம், எப்படியிருக்கிறாய்? நளினிக்கும் பிள்ளைகளுக்கும் எங்களின் அன்பைச் சொல். சுகவிசாரிப்பைக் கூறு. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்று உன்குரலைக் கேட்டதில் நிறையச் சந்தோசம். நேரில் பார்க்க முடியாவிட்டாலும், கதைக்க வாய்த்ததில் ஒரு நிறைவு. கனிவான அதேகுரல், அதே பா}வு, அதே உரிமை, எல்லாவற்றின் மீதுமான அதே அக்கறை. கண்டம் மாறிப் போய்க் கனகாலம் ஆனபோதும் சொந்த ஊருக்குத் திரும்புவது பற்றியே இன்னும் சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள். நாதனுடன் பேசும்போது அவனும் ஊர்திரும்புவதையே விரும்புகிறதைப் புரிந்துகொள்ள முடிந்தது.
இப்பொழுது வெளிநாடுகளிலிருந்து இங்கே வரும் நம்மவர்களின் தொகை பெருகியிருக்கிறது. சொந்த நாட்டுக்கு வருவதில் அவர்களுக்கிருக்கும் ஈடுபாட்டையும் சொந்த ஊரில் நிற்கும்போது அவர்களடையும் சந்தோசத்தையும் நிறைவையும் பார்க்கின்றேன். இந்தத்தவிப்பு சாதாரணமானதல்ல. இதுவே உங்களுக்குள்ளும் ஆட்டிப்படைக்கிறது. எப்பொழுதும் அந்நியத் தன்மை நிரம்பிய மனதுடன் ஒரு பிறத்தியானாக ஓரிடத்தில் இருப்பதையும் பிறத்தியானாக ஓரிடத்தில் நடத்தப்படுவதையும் சகிக்க முடிவதில்லை. உனக்குள்ளிருக்கும் சமூகவிழிப்பு மேலும் சொந்த தாயகத்தை நோக்கி உன் கவனத்தைத் திருப்புகிறது. நாதன் பெரிய அவாவுடன் எப்ப ஊருக்கு நிரந்தரமாகத் திரும்பி நிம்மதியாக வாழலாம் என்று தவிக்கின்றான்.
இந்தப் புரிந்துணர்வு காலத்தின் சிறு அமைதிக்குள்ளேயே எத்தனை மாற்றங்கள் நிகழ்கின்றன? உறவுகள் வருகின்றன. சேருகின்றன. விருந்தினர்களும் வெளியாட்களும் வருகிறார்கள். வியாபாரிகள் வருகிறார்கள். புதிய பொருட்களும் வருகின்றன. எங்கும் மெல்லியதொரு மகிழ்ச்சியும் ஆரவாரமும் புூத்துத் தானிருக்கிறது. இது தொடருமா? சடுதியாக வாடிவிடுமா? என்று யாருக்கும் தெரியாது. ஆனால், எல்லோரிடமும் இந்த சமாதான நடவடிக்கை பற்றிய அச்சமும் கேள்வியும் உண்டு.
புரிந்துணர்வு நடவடிக்கையில், அதிலுள்ள பல விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு பின்னடிக்கிறது. அரசை நீதியாகச் செயற்படத் தூண்டும் மக்கள் எழுச்சிப்போராட்டங்கள் நடக்கின்றன. இன்னும் சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. தொடங்கும் காலப்பகுதியோ நிகழ்ச்சி நிரலோ இன்னும் முன்வைக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. எல்லோரையும் விட நாம்தான் இதில் அதிகம் கவலைப்பட வேண்டியிருக்கிறது. பிரச்சினை எங்களுடையது. அதற்கான போராட்டத்தை, எத்தனையோ தடைதாண்டி சுமையேற்று, வலிகளைத்தாங்கி நடந்து வந்த பெரும் பயணத்தை நிகழ்த்தியவர்கள் நாம். வெற்றியோ தோல்வியோ அதிகம் பாதிப்பது நம்மைத்தான். இதனால்தான் நாம் விழிப்பாக இருக்கிறோம். இந்த விழிப்பு போராடும் மக்களுக்கு எப்போதும் அவசியம். இந்த விழிப்புடன்தான் இங்கே கண்டனப் பேரணிகளும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களும் நடக்கின்றன.
பழைய பாதைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன என்றார் ஒரு நண்பர். ஒரு பாதை திறப்பு என்பது அது புதிய பாதையாக இருக்க வேண்டும். உண்மையான அர்த்தத்தில். ஆனால், ஏற்கனவே இருந்த பாதையைப் புூட்டிவிட்டு மீண்டும் திறப்பதை புதிதாகப் பாதை திறப்பதாகவே அரசு காட்டவிளைகிறது. புதிதாகப் பயணங்கள் நிகழ்கின்றன. புதிய சூழல் பிறந்திருக்கிறது என்று பலரும் எழுதுகிறார்கள். பேசுகிறார்கள். ஒரு சமூகத்தின் வளர்ச்சியை மட்டுப்படுத்திவிட்டு, தடுத்துவிட்டு பின்பு சிறு இடைவெளியை அளிப்பதனூடாக அதிலேற்படும் சிறு மாற்றத்தை புதிய சூழல், புதிய வளர்ச்சியென்பதா? அதன் இயல்பான வளர்ச்சிக்கு அனுமதித்திருந்தால், அல்லது அரசு பாரபட்சம் காட்டாதிருந்தால் இப்போதுள்ள நிலைமையைவிட இன்னும் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்குமே.
சமாதானப் பேச்சுவார்த்தையும் தீர்வும்கூட அரசாங்கத்தாலும் சில ஊடகங்களாலும் இப்படித்தான் நோக்கப்படுமோ, கையாளப்படுமோ என்று அஞ்சுகிறேன். எல்லாவற்றையும் பறித்துவிட்டு அல்லது தடுத்துவிட்டு பின்பு சிறிதளவைத் தருவதனூடாக முழுவதையும் கொடுத்துவிட்டதான ஒரு மயக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், நாம் விழிப்பாகவே இருக்கிறோம்.
புரிந்துணர்வு உடன்படிக்கைக் காலமாகிய இப்போதைய சூழலில் பலவும் ஓரளவுக்கு சுமூகமடைந்துவருகிறது. அல்லது அப்படித் தோற்றம் தருகிறது. ஆனால், இதற்குள் ஒரு நிறைவான மகிழ்ச்சியும் மலர்ச்சியும் ஏற்பட்டிருப்பது உண்மை. இதை சகலரும் நிறைவானதாகவும், உயிர்ப்புள்ளதாகவும் மாற்றவேணும். சகலருக்கும் சமாதானத்தை முழுமைப்படுத்துவது தவிர்க்கமுடியாத ஒரு அவசிய பணியாகும்.
ஒரு காலகட்டத்தில் போர்பற்றிப் பேசினோம். இப்பொழுது அதிகமதிகம் சமாதானம்பற்றிப் பேசுகிறோம். நாம் சமாதானம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது மறுபக்கத்தில் போர்பற்றி அரசதரப்பில் சிந்தித்துக்கொண்டிருப்பதாகவும் பேசிக்கொள்கிறார்கள். கடந்தகாலங்களில் நமக்கு ஏற்பட்ட அனுபவங்களும் அப்படித்தானே இருந்தன. எனவே எதனையும் நாம் சந்தேகிக்காமலும் இருக்கமுடியாதல்லவா?
நண்பனே?
உன்னுடன் அன்று கதைத்தபிறகே நான் உடுத்துறைக்குப் போனேன். முன்பு போல தரவைக்குள்ளால் போகமுடியாது. அந்தப்பாதை இன்னும் மிதிவெடி அச்சத்திலிருந்து மீளவில்லை. இப்போது அது புழக்கத்திலுமில்லை. மாவிலங்கைத் தோட்டம் உட்பட எங்கும் தென்னைகளெதுவும் இல்லை. வீடுகளோ, வேறு மரங்களோ என்று ஒன்றும் மிஞ்சவில்லை. பதிலாக மண்ணரண்களும் முட்கம்பிச் சுருள்களும் மிதிவெடிகளும் நிறையவுண்டு. கைவிடப்பட்ட சிதைந்துபோன காவலரண்கள் தானுண்டு. புதுக்காட்டுச் சந்தியாலதான் பயணம் நடக்கிறது. தரவை விரிந்து ஊர்களையும் தன்வசப்படுத்தியிருக்கிறது. கடற்கரையில் மட்டும் சிலவீடுகள் பாதியாகவும் அரை குறையாகவும் மிஞ்சியிருக்கின்றன. சனங்கள் கடற்கரைப்பக்கமாக வரத்தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் குறைவாகத் தானிருக்கிறார்கள். தொழில் மெல்ல தொடங்கியிருக்கிறது. ஆனாலும் கொழும்புக்கு மீனோடு லொறி ஓடுகிறது.
தரவையில் எந்த வீடும் மிச்சமில்லை. வயலுக்குள்ள வல்லிபுரம் அண்ணைகோடை வெங்காயம் வைக்கிற ஞாபகம் வருகிறது. இப்ப வயலெது, வளவு எது என்றும் பிரித்தறிய ஏலாது. வல்லிபுரம் அண்ணை வவுனியாவில ஒரு கொமினிகேசன் சென்ரர் (தொலைபேசித் தொடர்பகம்) வைத்து நடத்திக்கொண்டிருக்கிறார். தமிழ்ப்பகுதிகளில் வன்னி தவிர மற்றெங்கும் இதுவொரு புதுத்தொழில். அதேமாதிரி மிக்சர் கடைகளும் அப்பிள் கடைகளும் வழிக்குவழி புதிசா முளைச்சிருக்குதுகள்.
இப்பொழுது கொமினிகேசன் சென்ரர்களும் லொட்ஜ்களும் முக்கியமான அம்சமாகிவிட்டன. ஈழத்தமிழர் வாழ்க்கையில் ஒவ வொரு தொலைத் தொடர்பகங்களிலும் தங்கள் உறவினரின் தொலைபேசி அழைப்புக்காக தினமும் பலர் காத்திருக்கிறார்கள். இதில் பாதிப்பேர் லொட்ஜ்களில் வாரக்கணக்காக, மாதக்கணக்காகத் தங்கி தொலைபேசியில் கதைப்பதற்காகவும் காசு வருவதற்காகவும் காத்திருக்கிறார்கள். வெளிநாடுகளிலிருந்து வரும் காசில் பெரும் பகுதி ரெலிபோனுக்கும் லொட்ஜுக்கும் சாப்பாட்டுக்கடைக்கு மேபோகுது. இதுக்கொரு மாற்றுவழியை யாரும் யோசிப்பதாகவும் தெரியவில்லை. போக்குவரத்துச் செலவு, தங்குமிடச் செலவு, ரெலிபோன் செலவு, தவிர பிறசெலவுகள், அலைச்சல், காசு இன்றும் வரவில்லை என்று 'உண்டியல்' செய்பவர்கள் செய்யும் தாமதம் எல்லாவற்றுக்கும் பதிலாக மாதா மாதமோ அல்லது குறிப்பிட்டதொரு காலப்பகுதியிலோ வங்கிக@டாக பணத்தை வெளிநாடுகளிலுள்ளோர் இங்கே அனுப்பலாம். வேண்டுமானால் மிக அவசியமானவற்றுக்கு தொடர்புகொள்ளலாம். சொந்தத் தொலைபேசியில்லாதவர்கள் படும் சிரமமும் செய்யும் செலவும் சொல்லிமாளாது. இதை நீங்கள் நிச்சயம் கவனமெடுக்கவேண்டும்.
வகி, யாழ்ப்பாணத்தைவிட வவுனியா நிறைப்பெருத்த மாதிரியும் மாறியிருப்பதாகவும் தெரியுது. வடபகுதியின் ஒரு முக்கியமான நகரமாக வவுனியா வந்துவிட்டது. தொண்ணுhறுக்குப் பிறகு வடபகுதிக்கான இடைத்தங்கல் களமாகவும் தொடர்புமையமாகவும் வவுனியாதான் இருந்து வந்திருக்கிறது. புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு முந்திய டீ.டீ.ஊ யின் ஒலிபரப்பில் கூட, நீ இதனை அவதானித்திருப்பாய், ஊடகங்களில் மட்டுமல்ல மக்களின் பெரும்பாலான தேவைகளுக்கும் அரச நிர்வாக தொடர்புகளுக்கும் வவுனியாதான் மையம்.
யாழ்ப்பாணம் 85க்குப்பிறகு யுத்தத்தின் மையப்பிடிக்குள் சிக்கியிருந்ததால் அதன் முகம் பெருமளவுக்கும் சிதைக்கப்பட்டேயிருக்கிறது. இப்பொழுது குண்டு வீச்சால் கட்டிடங்களும் மரங்களும் சிதைந்துவிட்டன. சொத்திழப்பும் உயிரிழப்பும் அதனை வெறுமையாக்கியிருக்கிறது. சனங்கள் ஒவ வொருபோதும் விட்டோடி விட்டோடி அது சோபையிழந்துவிட்டது. பலவற்றுக்குப் பாரமரிப்பாளர்களும் இல்லை உரித்தாளரும் இல்லை. பதிலாக இவர்களில் பலர் வவுனியாவுக்குப் பெயர்ந்து வவுனியாவில் வாழத்தொடங்கி நகராக்கியிருக்கிறார்கள்.
யாழ்ப்பாணத்தில் இப்போது மின்சாரம் வந்திருக்கிறது. ஓரளவுக்குப் பாதைகள் போடப்பட்டிருக்கின்றன. போக்குவரத்தும் சீராகத் தொடங்கியிருக்கிறது. இழந்துபோன வாழ்வை ஈடேற்ற ஒவ வொரு யாழ்ப்பாணத்தாரும் உழைக்க வேண்டியிருக்கிறது. அப்படித்தான் அவர்கள் இப்போதிருக்கிறார்கள். யாருக்கும் ஓய்வில்லை ஒவ வொருவரும் இரண்டு அல்லது மூன்று வேலை செய்கிறார்கள்.
நீண்ட நாட்களின் பின் கொழும்புக்கும் போயிருந்தேன். கொழும்பும் நிறைய மாறித்தானிருக்கிறது. தங்களின் வாழ்க்கைத் தேவைகளுக்காகவும் வாழ்க்கை வசதிகளுக்காகவும் உழைத்தல், சிந்தித்தல் என்பதே பொதுமொழியாகியிருக்கு. கிட்டத்தட்ட யாழ்ப்பாணத்திலும் இதுதான் நிலைமை. ஒருகுட்டிக் கொழும்பாக யாழ்ப்பாணம் உருவாகி வருகிறது. அல்லது மாற்றப்பட்டு வருகிறது என நினைக்கிறேன்.
யாழ்ப்பாணத்திலிருந்து புராதன பொருட்களெல்லாம் கொழும்புக்கும் பிற இடங்களுக்கும் விலைப்பட்டுப்போய்க்கொண்டிருக்கின்றன. கவர்ச்சிகரமான விலையைக் கொடுத்து இந்தப் பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு வெறுங்கையர்களாக நிற்கப்போகிறோமா என்று அகிலன் கேட்கிறான். 'யாழ்ப்பாணத்தின் பல ஓவியங்களும் நல்ல புகைப்படங்களும் அழிந்து போய்விட்டன. சில பாதுகாக்க வசதியற்றிருக்கின்றன' என்று இன்னொரு நண்பர் ஆதங்கப்பட்டார். இப்போது கணணியில் இவற்றை சேமித்துப் பாதுகாக்க வாய்ப்பிருந்தும் ஒருவரும் இதற்கு முயற்சிக்கவில்லை. சிந்திப்பதாகவும் தெரியவில்லை. யுத்தத்தில் எதுவும் அழிந்து போகலாம் என்பதால் முடிந்தளவுக்கு எல்லாவழிகளிலும் பாதுகாக்க வேண்டியவற்றைக் காக்க வேண்டுமல்லவா!
அன்புடன் விதுல்யன்