10-23-2005, 02:35 PM
குப்பைக்குள் கிடந்த குண்டுமணி
கடந்த வருடம் டிசம்பர் மாதம் ஏற்பட்ட கடல்கோளின் பின்னர் கல்முனையில் இரண்டு நாட்களின் பின் தெய்வாதீனமாக உயிர்தப்பி நம் நாட்டில் மட்டுமல்ல உலக நாடுகளில் கூட இக் குழந்தையின் பெற்றோர்கள் யார் எனப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சர்ச்சைக்குள்ளான "பேபி 81" என அனைவராலும் அழைக்கப்பட்ட கல்முனையைச் சேர்ந்த ஜெயராஜ் ஜினித்தா தம்பதியின் மகன் "அபிலாஷ்" தான் இக் குழந்தை. என்ன இப்போது ஞாபகம் வந்து விட்டதா? அப்பாடா.....
கடல்கோளின் போது மூன்று மாத கைக்குழந்தையான அபிலாஷ் காணாமல் போனதும் இரண்டு நாட்களின் பின் ஆசிரியர் ஒருவரினால் குப்பைக்குள் கிடந்து கண்டெடுக்கப்பட்டதும் பின்னர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதும் இக் குழந்தைக்கு உரிமை கோரி பல பெற்றோர்கள் வைத்தியசாலைக்குச் சென்றதும். வைத்தியசாலை நிர்வாகம் இப் பிரச்சினையை பொலிஸாருக்குத் தெரியப் படுத்தியதும், பொலிஸார் இதனை நீதிமன்றம் வரை கொண்டு சென்றதும் கடைசியில் நீதிமன்றம் மரபணுப் பரிசோதனை மூலம் உண்மைப் பெற்றோரைக் கண்டறிய உத்தரவு பிறப்பித்ததும் இறுதியில் ஜெயராஜ் ஜினித்தா தம்பதிகளே குழந்தையின் உண்மைப் பெற்றோர் என நீதிமன்றம் தீர்ப்புக் கூறி அவர்களிடம் அபிலாஷை ஒப்படைத்ததும் உலகத்திற்கே தெரிந்த விடயம்.
தனது மகன் அபிலாஷ் கைக்குக் கிடைத்துவிட வேண்டும் என்ற ஏக்கத்துடனும் பரபரப்புடனும் இருந்த ஜெயராஜ் ஜினித்தாவிற்கு, அபிலாஷைப் பயன்படுத்தி சிலர் பணம் சம்பாதித்த செய்தி தெரிந்திருக்க வாய்ப்பில்லை....
அபிலாஷின் பெற்றோர்களை அவர்களது இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அபிலாஷ் இப்போது தத்தித்தவழ்ந்து எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டான். அம்...மா... அப்...பா... என இப்பொழுதுதான் மழலை மொழி பேச ஆரம்பித்திருக்கிறான்.
அபிலாஷின் தந்தை ஜெயராஜ் சிறிய சலூன் கடை ஒன்றின் மூலமே தமது குடும்ப சீவியத்தை நடத்தி வருகின்றார். கடல்கோளினால் இவர்களது வீடும் முற்றாக சேதமடைந்து விட்டது. குழந்தை காணாமல் போனது முதல் அது கைக்குக் கிடைக்கும் வரை இருவரும் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார்கள்.
அபிலாஷ் வைத்தியசாலையில் இருந்த அந்த 52 நாட்கள் தொடக்கம் நீதிமன்றம் ஊடாக தமது கைக்குக் கிடைக்கும் வரை அவனைக் காண்பித்துப் பணம் சம்பாதித்தவர்களே அதிகம் என ஜெயராஜ் மன வேதனையோடு கூறினார்.
ஏன்? இப்படிக் கூறுகின்றார் எனக் கேட்ட போது தமது மன ஆதங்கத்தை இப்படி வெளிப்படுத்தினார்...
இன்று நானொரு பெரும் பான்மை இனத்தவனாக அல்லது முஸ்லிமாக இருந்திருந்தால் எங்களது நிலைமை வேறாக இருந்திருக்கும். நானொரு தமிழனாகவும் அதிகம் தாழ்த்தப்பட்ட ஒரு இனத்திலும் பிறந்து விட்டேன்.
மகன் அபிலாஷ் எங்களை விட்டுப் பிரிந்திருந்த அந்த 52 நாட்களும் வேதனை மிகுந்த நாட்களாகவே இருந்தன. எங்கள் மன வேதனையைப் புரிந்து கொள்ளக் கூடியவர்களாக எவருமேயிருக்கவில்லை.
மகன் எனது கைக்குக் கிடைத்துவிட வேண்டுமென்பதற்காக நிறையப் பணம் செலவழித்து இருக்கின்றேன். அந்த நேரத்தில் நிறையப் பேருக்கு பார்த்தும் பாராமலும் உதவி செய்திருக்கின்றேன். இன்று அவர்கள் எல்லோரும் நன்றி மறந்து விட்டார்கள்.
என் மகன் அபிலாஷைக் காட்டிப் படம் பிடித்து, மகனின் பேரில் வங்கியில் கணக்குத் திறந்து உழைத்தவர்கள்தான் நிறையப் பேர் இருக்கின்றார்கள். அவை எல்லாம் இப்பொழுதுதான் தெரியவருகின்றது.
என் மகன் அபிலாஷின் எதிர்காலத்திற் கென்றோ, எங்களுக்கென்றோ எவரும் பெரிதாக உதவி செய்ய முன்வரவில்லை. மகன் கிடைக்கு முன்னர் 2 இலட்சம் ரூபா கடன் பட்டுத்தான் செலவு செய்தேன். இன்றுகூட அந்தப் பணத்திற்கு 10 ஆயிரம் ரூபா வட்டி கட்டிக் கொண்டு வருகிறேன்.
அன்று எங்களைத் தேடி எங்கேயோ எல்லாம் இருந்து வருவார்கள். இன்று எங்களைத் தேடி எவரும் வருவதுமில்லை. எங்களது குடும்ப நிலைமைபற்றி விசாரிப்பதும் இல்லை. அந்தளவிற்கு வறுமையில் இருக்கின்றேன்.
மகன் அபிலாஷுக்கு இதயப் படபடப்புத் தன்மை அதிகமாக இருப்பதாக வைத்தியர் வேறு சொல்லியிருக்கின்றார்.
நான், மனைவி, மகன் மூவரும் அமெரிக்கா போய் வந்ததையே ஊரில் உள்ளவர்களும் நண்பர்களும் எல்லோரும் பெருமையாய்க் கதைக்கின்றார்கள். இந்தப் பெருமையைத் தவிர வேறு ஒன்றும் எங்களுக்குக் கிடைக்கவில்லை.
எங்களை அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்ற அ.ஆ.இ நிறுவனம் கூட மகனின் எதிர்காலத்திற்கென்று ஒரு உதவியும் செய்யவில்லை.
எங்களுக்குதவி என்று கிடைத்தது அமெரிக்காவிலுள்ள தமிழர்கள் எங்களைச் சந்தித்த போது உதவிய (240 டொலர்) இலங்கை நாணயப் பெறுமதிப் படி 48 ஆயிரம் ரூபாவைத் தவிர வேறு ஒன்றும் கிடைக்கவில்லை.
என்னைச் சந்திப்பவர்கள், கதைப்பவர்கள் பலர் என்னிடம் அமெரிக்கா சென்று வந்திருக்கின்றாய் உனக்கென்ன இலட்சக்கணக்கில் உழைத்திருப்பாய் என்று சொல்கின்றார்கள். இவற்றைக் கேட்கும் போதெல்லாம் மன வேதனையாக இருக்கின்றது எனக்கு எனது மகன் கிடைத்ததே பெரிய விடயம்.
சில நேரம் நான், மனைவி, மகன் மூவரும் சொந்தக்காரர்களின் வீட்டிற்கு அல்லது வெளியில் எங்காவது சென்றால் சிலர் எங்களைப் பார்த்து "கடல்கோள்" போகுது என்று சத்தம் போட்டு கத்துகின்றனர். மகனைப் பார்ப்பவர்கள் கூட "சுனாமி பேபி 81" என்றே அழைக்கின்றனர். இதனால் மனைவியும் அழுது விடுகிறாள். இவற்றை எல்லாம் பார்க்கும் போது எனது மகனின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற பயத்திலுள்ளேன்.
இப்போதெல்லாம் அபிலாஷைப் பற்றியும், அவனது எதிர்காலம் பற்றியுமே பயப்படுகின்றேன். எங்களுக்கு இந்தச் சமுதாயம் "சுனாமி" என்ற பட்டப்பெயரைக் கொடுத்துவிட்டால் அதைப் போலொரு அவமானத்தை எங்களால் தாங்கிக் கொள்ள முடியாது. எங்களது மனவேதனையை யார் புரிந்து கொள்வார்கள்?
இப்போது நான் இந்தச் சமுதாயத்திற்குள் வைத்து எனது மகனை வளர்க்க விரும்பவில்லை. ஏனெனில், அவனை எல்லோரும் "கடல்கோள் பேபி 81" என அழைக்கத் தொடங்கினால் அவனது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என நினைக்கின்றேன்.
எனது மகனின் எதிர்காலம் கருதி வெளிநாடு ஒன்றில் வளர்ப்பதற்கே விரும்புகின்றேன். எனது குடும்பத்தின் சங்கடமான இந் நிலையைக் கருத்தில் கொண்டு மனித நேயமுள்ளவர்கள் வெளிநாட்டில் புகலிடம் தந்தால் பெரும் புண்ணியமாய் இருக்கும். எது எப்படி இருந்தாலும் என் மகன் அபிலாஷை தெய்வக் குழந்தையாகவே கருதுகின்றேன் என்றார்.
உண்மையில் ஜெயராஜ் ஜினித்தா தம்பதி மனதளவில் பெரும் பாதிப்புக்குள்ளாகிருப்பது அவர்களைச் சந்தித்த பிற்பாடுதான் விளங்கியது. அவர்கள் இப்போது துன்பப்படும் போதுதான் உதவி செய்ய வேண்டும். இதற்கு மனித நேயமுள்ள மனிதர்கள் முன்வர வேண்டும்
நன்றி dinakkural