Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐரோப்பிய தடைக்கு கடும்கண்டனம்
#5
<b>ஐரோப்பிய ஒன்றியத்தின் பயணத் தடை: நெதர்லாந்து தூதுவர் அதிருப்தி</b>

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் பயணத் தடை எதிர்பாராதது என்று சிறிலங்காவுக்கான புதிய நெதர்லாந்து தூதுவர் வன் டிஜிக் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது:

இலங்கையில் அமைதிப் பேச்சுக்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தாலும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் நீடிக்கிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் சீர்குலைது வருவதாக பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இனப்பிரச்சனையில் தொடர்புடைய இரு தரப்பினரும் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.

அமைதி முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதில் அனைத்துத் தரப்பினருக்கும் பொறுப்பு உண்டு.

அண்மையில் யாழ். சென்றிருந்தபோது நான் கற்பனை செய்திருந்த யாழ்ப்பாணம் வேறு என்பதை உணர்ந்து கொண்டேன். அது ஒரு மரண நகரமாக இருக்கும் என்று எண்ணினேன். ஆனால் எனது பயணத்தின் போது வியப்புக்குள்ளானேன். அசாதாரண சூழ்நிலைகளை அந்த மக்கள் எதிர்கொண்டிருக்கும் விதம் ஆச்சரியமளிக்கிறது. ஆழிப்பேரலை நிவாரண நிதிக்காக நெதர்லாந்து அரசாங்கமானது 15 மில்லியன் யூரோ அளித்துள்ளது.

அமைதிப் பேச்சுக்களில் அனுசரணையாளராக செயற்படும் நோர்வேயின் பங்களிப்பை சில ஊடகங்கள் விமர்சனம் செய்வது வருத்தத்திற்குரியது. நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் நோர்வே அனுசரணையாளர் பணியை மேற்கொண்டு வருகிறது.

கடந்த செப்டம்பர் 26 ஆம் நாள் ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருக்கும் பயணத் தடையானது எதிர்பாராதது. அது அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுகிறது.

இலங்கையில் அமைதி தொடர்ந்தால் பொருளாதார வளர்ச்சியும் படிப்படியாக உயரும் வாய்ப்புகள் உள்ளன.

ஆழிப்பேரலை மீளமைப்புப் பணிகளை மேற்கொள்வதில் பாரிய தடைகளை சிறிலங்கா அரசாங்கம் எதிர்கொண்டிருப்பதால் அதன் பணிகள் முழுமையடையாமல் உள்ளன. இப்பணிகள் நிறைவடைய ஒரு குறிப்பிட்ட காலமாகும் என்றார் அவர்.

புதினம்.... Idea
[b]

,,,,.
Reply


Messages In This Thread
[No subject] - by msuresh - 09-30-2005, 12:07 PM
[No subject] - by selvam - 10-06-2005, 09:18 AM
[No subject] - by selvanNL - 10-23-2005, 12:49 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)