![]() |
|
ஐரோப்பிய தடைக்கு கடும்கண்டனம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: ஐரோப்பிய தடைக்கு கடும்கண்டனம் (/showthread.php?tid=3100) |
ஐரோப்பிய தடைக்கு கடும்கண்டனம் - வினித் - 09-30-2005 ஐரோப்பிய ஒன்றியத் தடைக்கு 'யாழ் பொங்கு தமிழ் பிரகடனம்' கடும் கண்டனம் [வெள்ளிக்கிழமை, 30 செப்ரெம்பர் 2005, 16:49 ஈழம்] [யாழ். நிருபர்] இலங்கையில் தமிழர்களின் பிரதிநிகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச அரசியல் பணிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளதற்கு தற்போது நடைபெற்று வரும் யாழ். பொங்கு தமிழ் நிகழ்வின் பிரகடனம் கண்டனம் தெரிவித்துள்ளது. யாழில் தற்போது நடைபெற்று வரும் யாழ். பொங்கு தமிழ் நிகழ்வில் பிரகடன உரையை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் செயலாளர் கோகுலன் வெளியிட்டார். தமிழீழத் தமிழினம் அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு, சிறிலங்கா சுதந்திரத்துக்குப் பிந்தைய ஆட்சிக்காலங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலைகள் ஆகியவை அதில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்களும் அமைதிப் பேச்சுகளும் தோல்வியடைந்த வரலாறும் சுட்டிக்காட்டப்பட்டு இன்றைய போருமற்ற சமாதானமும் அற்ற சூழல் அந்தப் பிரகடனத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் அண்மைய தடைக்கு தமிழ்ச் சமூகமானது தனது அதிர்ச்சியையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ள அந்தப் பிரகடனம், ஐரோப்பிய ஒன்றியப் பிரகடனம் ஒரு பக்கச்சார்ப்பானது என்றும் பொங்குதமிழ் பிரகடனம் சாடியுள்ளது. பிரகடன வெளியிட்டுக்கு முன்பாக உரையாற்றிய யாழ்ப்பாண மாணவர் பேரவையின் தலைவர் விஜயரூபன் தனது உரையில் தெரிவித்ததாவது: தமிழர் தங்களது உரிமையை தங்களது இராணுவ வலிமை மூலம் வென்றெடுக்க முடியும். ஆனால் சர்வதேச சமூக அழுத்தங்களை ஏற்றுக் கொண்டு பேச்சுகளை நடாத்த நாம் முன்வந்துள்ளோம். இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை அறிக்கையானது மனிதாபிமானமற்றது. நீதியற்றது, தமிழ் மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதச் செயல்களை ஜனநாயகச் செயலாக அங்கீகரித்துள்ளது அறிக்கை. தமிழ் மக்களின் மீதான சிங்களப் பேரினவாத இனப் படுகொலைகளை நியாயப்படுத்தி அளிக்கப்பட்டுள்ள நற்சான்றுப் பத்திரம் அது. மனிதநேயமற்ற தன் முடிவை ஐரோப்பிய ஒன்றியம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும். இந்த உலகப் பரப்பில் வாழும் ஏனைய இனங்களைப் போல பாரம்பரிய வாழ்விடம் கொண்டும் கலாசார விழுமியங்கள் கொண்டும் வாழுகிற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும். www.puthinam.com - msuresh - 09-30-2005 ஐரோப்பாவின் நடவடிக்கைக்கு எதிரான அதிருப்தி மனு http://www.yarl.com/forum/viewtopic.php?p=...p=127270#127270 ஐரோப்பிய யூனியனுக்கு உங்கள் ஆழ்ந்த அதிர்ச்சியை தெரிவிக்க - msuresh - 10-06-2005 புலிகள் மீதான தடை -ஐரோப்பிய யூனியனுக்கு உங்கள் ஆழ்ந்த அதிர்ச்சியை தெரிவிக்க பின்வரும் Post Card ஐ நிரப்பி அனுப்பவும். http://www.sooriyan.com/EUTIPAppeal.pdf Post Card வசிப்பதில் சிரமம் எனில் PDF redader தரவிறக்கம் செய்து பார்க்கவும் http://ardownload.adobe.com/pub/adobe/read...LM_enu_full.exe - selvam - 10-06-2005 இந்த தபால் அட்டையை எப்படி நிரப்புவது இதைப்பிரதி செய்து நிரப்புவதா அன்றி புதிதாக தயாரிக்கவேண்டுமா? - selvanNL - 10-23-2005 <b>ஐரோப்பிய ஒன்றியத்தின் பயணத் தடை: நெதர்லாந்து தூதுவர் அதிருப்தி</b> தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் பயணத் தடை எதிர்பாராதது என்று சிறிலங்காவுக்கான புதிய நெதர்லாந்து தூதுவர் வன் டிஜிக் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: இலங்கையில் அமைதிப் பேச்சுக்கள் இடைநிறுத்தப்பட்டிருந்தாலும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் நீடிக்கிறது. யுத்த நிறுத்த ஒப்பந்தம் சீர்குலைது வருவதாக பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இனப்பிரச்சனையில் தொடர்புடைய இரு தரப்பினரும் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். அமைதி முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதில் அனைத்துத் தரப்பினருக்கும் பொறுப்பு உண்டு. அண்மையில் யாழ். சென்றிருந்தபோது நான் கற்பனை செய்திருந்த யாழ்ப்பாணம் வேறு என்பதை உணர்ந்து கொண்டேன். அது ஒரு மரண நகரமாக இருக்கும் என்று எண்ணினேன். ஆனால் எனது பயணத்தின் போது வியப்புக்குள்ளானேன். அசாதாரண சூழ்நிலைகளை அந்த மக்கள் எதிர்கொண்டிருக்கும் விதம் ஆச்சரியமளிக்கிறது. ஆழிப்பேரலை நிவாரண நிதிக்காக நெதர்லாந்து அரசாங்கமானது 15 மில்லியன் யூரோ அளித்துள்ளது. அமைதிப் பேச்சுக்களில் அனுசரணையாளராக செயற்படும் நோர்வேயின் பங்களிப்பை சில ஊடகங்கள் விமர்சனம் செய்வது வருத்தத்திற்குரியது. நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் நோர்வே அனுசரணையாளர் பணியை மேற்கொண்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 26 ஆம் நாள் ஐரோப்பிய ஒன்றியம் விதித்திருக்கும் பயணத் தடையானது எதிர்பாராதது. அது அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுகிறது. இலங்கையில் அமைதி தொடர்ந்தால் பொருளாதார வளர்ச்சியும் படிப்படியாக உயரும் வாய்ப்புகள் உள்ளன. ஆழிப்பேரலை மீளமைப்புப் பணிகளை மேற்கொள்வதில் பாரிய தடைகளை சிறிலங்கா அரசாங்கம் எதிர்கொண்டிருப்பதால் அதன் பணிகள் முழுமையடையாமல் உள்ளன. இப்பணிகள் நிறைவடைய ஒரு குறிப்பிட்ட காலமாகும் என்றார் அவர். புதினம்....
|