06-22-2003, 08:32 AM
தகவல் தொழில்நுட்ப புரட்சியும் அதன் விளைவுகளும்
தகவல் தொழில்நுட்பம் என்பது கணணித் தொழில்நுட்பத்தினை தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பத்துடன் இணைத்துக் கூறுவதற்கு விபரிக்கும் ஒரு பதமாகும். தகவல் தொழில் நுட்பம் என்பது ஒரு தகவல் முறைமையின் தொழில்நுட்பக் கூறு அல்லது ஒரு நிறுவனத்தின் முழுமுறைமையின் சேகரிப்பு எனலாம்.
இன்றைய நவீன உலகில் மக்களிடையே செல்வாக்குப் பெற்று விளங்கும் துறைகளில் தகவல் தொழில்நுட்பம் என்னும் துறையே முன்னணியில் உள்ளது. வானொலி, தொலைக்காட்சி போன்றவையும் பின்னர் தொலைத் தொடர்பு சாதனமுமே ஆரம்ப கால தகவல் தொழில்நுட்ப சாதனங்களாகக் காணப்பட்டன. எனினும், கடந்த நு}ற்றாண்டின் இறுதிப்பகுதியில் அறிமுகமான 'தகவல் தொழில்நுட்பப் புரட்சி' என்னும் பதத்தோடும் அதனோடு புதிதாகப் புகுந்து கொண்ட வலைப்பின்னல் தொலைநகல், மின்னஞ்சல் போன்ற சாதனங்களோடு கணணியும் இணைந்து கொண்டதோடு இது உண்மையிலேயே மக்கள் மனங்களில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியும் விட்டது.
இன்று உலகின் எல்லாத் துறைகளிலுமே தகவல் தொழில் நுட்பப் புரட்சியின் தாக்கம் காணப்படுகிறது. இதனால், இன்று உலக சமூகத்தில் வாழும் ஒவ வொரு மனிதனும் அதனைக் கற்றிருக்கவோ இல்லை அது பற்றி அறிந்திருக்கவோ வேண்டியதன் அவசியம் உணரப்பட்டுள்ளது. இவ வாறெல்லாம் முக்கியத்துவம் பெற்று விட்ட இத்துறைக்கு அறிஞர்களால் பல்வேறுபட்ட வரைவிலக் கணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
தகவல் தொழில்நுட்பம் என்பது கணணித் தொழில்நுட்பத்தினை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துடன் இணைத்துக் கூறுவதற்கு விபரிக்கும் ஒரு பதமாகும். தகவல் தொழில் நுட்பம் என்பது ஒரு தகவல் முறைமையின் தொழில்நுட்பக் கூறு அல்லது ஒரு நிறுவனத்தின் முழுமுறைமையின் சேகரிப்பு எனலாம்.
இவ வாறு இன்னும் பல வரைவிலக்கணங்கள் இதற்கு வழங்கப்பட்டுள்ள போதிலும், இவ வரைவிலக்கணங்க@டாக தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் கதாநாயகன் கணணிதான் என்பதனைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
இத்துறையின் செயற்பாடானது விளையாட்டுத் துறையில் ஆரம்பித்து பாரிய நிறுவனங்கள்- அரச அலுவலகங்கள் வரை பரந்துபட்ட அளவில் காணப்படுகிறது. ஆரம்ப காலங்களில் ஒரு தொழிற்சாலையின் அமைவிடத்திற்கு போக்குவரத்து வசதி எவ வளவு அவசியமானதாக நோக்கப்பட்டதோ அதேபோன்று இன்று இவற்றின் உற்பத்திக்கு உதவும் மூலப் பொருட்களில் ஒன்றுபோல் ஆகிவிட்டது இந்த தகவல் தொழில்நுட்பம்.
இந்தத் தகவல் தொழில்நுட்பப் புரட்சியால் உலகம் பல மாற்றங்களை பெற்றிருக்கிறது. இன்றைய உலக வல்லரசுகளினதோ அல்லது அவ வாறான குழுக்களினதோ கருத்துக்கள் என்றில்லாமல் எல்லோருடைய கருத்துக்களையும் எல்லோரும் புரிந்து கொண்டு சுயமாகவும் சுதந்திரமாகவும் ஒரு முடிவினை தாமே மேற்கொள்ள இந்தத் தகவல் தொழில்நுட்பம் பெரும் பங்களிப்பை ஆற்றி வருகிறது.
ஒரு நாட்டின் விரிவான அபிவிருத்திக்கும் அதில் வாழும் மக்களின் தொழில்நுட்ப திறனை சர்வதேச தரங்களுக்கேற்ப உயர்த்தவும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் உலகப் போட்டிகளுக்கு ஈடுகொடுக்கவும் வளங்களின் உச்ச பயனைப் பெறவும் வேலையில்லாத் திண்டாட்டங்களை ஒழிக்கவும் இத்துறை பேருதவி புரிகிறது.
இன்றைய, பரபரப்பான உலகில் தமது அன்றாடக் கடமைகளையே தீர்த்துக் கொள்ள வகையின்றி அந்தரிக்கும் மக்களுக்கு இத்துறை ஒரு வரப்பிரசாதமே. ஏனெனில் தற்கால சனநெருக்கடியும் போக்குவரத்து நெருக்கடியும் நிறைந்த உலகில் தமது விரல்களின் அசைவுகளின் மூலமே தேவையின்றிய செலவுகளையும் அலைவுகளையும் தவிர்த்து மிகவும் திருப்தி கரமான முறையில் தமது தேவைகளைப் புூர்த்தி செய்யவும் முடிகிறது.
பாரிய நிறுவனங்களும் மற்றும் பல்வேறுபட்ட அமைப்புக்களும் தங்களின் பண்டங்களையும் சேவைகளையும் மிகக்குறைந்த முதலீடுகளோடு மக்கள் மத்தியில் தங்களைப் பிரபல்யப்படுத்திக் கொள்ளவும் தமது நோக்கங்களைப் புூர்த்தி செய்யவும் மிகவும் குறைந்த செலவில் நிறைந்த பயனைப் பெறவும் இந்தத் தகவல் தொழில்நுட்பம் வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
இவ வாறெல்லாம் மனித முன்னேற்ற வாழ்வியலோடு ஒன்றிப்போய்விட்ட இன்றைய நவீன தகவல் தொழில்நுட்பம் அவர்களின் வாழ்வியல் மேம்பாட்டில் எவ வளவு பின்னிப் பிணைந்திருக்கிறதோ அதே போல் அவர்களின் சீரழிவிற்கும் காரணமாய் இருந்துள்ளமையையும் இருக்கின்றமையையும் மறுத்துவிட முடியாதன.
மனித வலுவைக்குறைத்து அதேவேளை அதன் சக்தியை உச்சநிலைக்கு கொண்டு செல்லல், விளம்பரம், சினிமா என்று அவரவர்க்கு ஏற்ற வகையில் மனிதர்களின் மனங்களை ஆட்டிப் படைக்கிறது இத்துறை.
இத்துறைகளோடு நேரடியாகத் தொடர்புடையோர் மட்டுமல்லாமல் இவற்றின் வெளியீடுகளை நுகர்ந்து கொள்வோரே இதனால் அதிக பாதிப்புக் குள்ளாகின்றனர். தற்காலத்தில் எங்கும் வானொலிப் பெட்டி, தொலைக்காட்சி என்று வெகு சாதாரணமாகி விட்டது. அன்றாடம் நாம் பயன்படுத்தும் 'டோச்லைட்'களில் கூட வானொலிக் கருவியின் இணைப்பு. இவ வாறான பல்வேறு உபகரணங்களை நாம் ஒரே வேளையிற் கையாள்வதால் எமது கவனங்கள் பல்வேறு திசைகளில் சிதறி விரும்பத்தகாத எதிர் விளைவுகளையெல்லாம் ஏற்படுத்தி விடுகிறது.
இவ வாறெல்லாம் பல்வேறு பெறுபேறுகளையும் தந்து கொண்டிருக்கும் இன்றைய தகவல் தொழில்நுட்பப் புரட்சியை எமது சமுதாயமும் கற்றுக் கொண்டதோ இல்லையோ அதன் இறுதி வெளியீடுகளான பிரச்சாரப் பீரங்கிகளின் வாயில் சிக்கித் தவிப்பது உண்மையே.
அந்த வகையில் எல்லா நல்ல விடயங்களிற்குமே சில எதிர்மறையான விளைவுகளும் ஏற்பட்டு விடுவது வழமையே. ஏதோ ஒன்றைப் பின்னணியாகக் கொண்டு அது அரசியலாகவும் இருக்கலாம், சமூகவியலாகவும் இருக்கலாம், இவை அனைத்திற்கும் அப்பால் விளம்பரத் துறையாகவோ விஞ்ஞான ஆராட்சித் துறையாகவோ எதுவாகவும் இருக்கலாம். இவற்றில் ஒன்றைப் பின்னணியாகக் கொண்டு மக்களின் மனங்களைச் சூழ்ந்து கொண்டுள்ள இத்துறையின் விளைவுகளை சமூகங்களின் வழிகாட்டிகள் மிகத்தெளிவாக இனம் கண்டு அவற்றினை மக்களுக்குப் புரிய வைத்து காய்களைத் தவிர்த்து கனிகளைக் கவர்வதன் மூலம் தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் புரட்சிகரமான பயனை எமது சமூகம் சரியான முறையில் பயன்படுத்த வகை செய்வது இவைகளோடு தொடர்புடை யோரின் பொறுப்பு மிக்க கடமையாகும்.
-குணாளன்-