11-22-2003, 09:09 AM
பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அமைச்சர் மகேஸ்வரன் எச்சரிக்கை
ஜ யாழிலிருந்து எழின்மதி ஸ ஜ சனிக்கிழமை, 22 நவம்பர் 2003, 2:40 ஈழம் ஸ
யாழ். மக்களின் தேவைகளை நிறைவேற்றாக பட்சத்தில் எதிர்வரும் ஐனவரி முதலாம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகப் போவதாக அமைச்சர் மகேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு-கிழக்கு மாகாண மக்களுக்கு இம்முறை வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லையென இந்து கலாச்சார அமைச்சர் தியாகராஐh மகேஸ்வரன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளமை தமிழ் மக்களுக்கு எவ்வகையிலும் பலனளிக்காது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
வடக்கு-கிழக்கின் அபிவிருத்திப்பணிகள் தொடர்பாக வரவு-செலவுத் திட்டத்தில் எவ்வித யோசனைகளும் முன்வைக்கவில்லையெனவும் அமைச்சர் மகேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
வரவு-செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் அவர் கலந்துகொண்டு பேசிக்கொண்டிருக்கும் போது அவரது உரையை ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் ஒலிப்பதிவு செய்வதாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக இரண்டு கட்சியினருக்கும் இடையில் வாக்குவாதம் எழுந்ததன் காரணமாக அமைச்சர் மகேஸ்வரனுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரம் முடிவடைந்து விட்டதாக சபைத் தலைவராக செயற்பட்ட ரவீந்திர ரந்தெனிய சுட்டிக்காட்டினார்.
எனினும் வரவு-செலவுத் திட்டத்தை விமர்சித்து பேசிய அமைச்சர் மகேஸ்வரனுக்கு தமது நேரத்தை ஒதுக்கி கொடுப்பதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறினர்.
எவ்வாறாயினும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நேரத்தை விட மேலதிக நேரம் வழங்கப்பட மாட்டாதென ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
இதன்படி அமைச்சர் மகேஸ்வரனுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிவடைந்து விட்டதாக சபைக்குத் தலைமை தாங்கிய ரவீந்திர ரந்தெனி கூறியதையடுத்து சபையில் அமளிதுமளி ஏற்பட்டது.
இதன் காரணமாக சபை நடவடிக்கையை பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதற்கு சபைத் தலைவர் தீர்மானித்தார்.
சபை மீண்டும் கூடிய போது விவாதத்தில் தொடர்ந்து கலந்துகொண்டு பேசிய அமைச்சர் மகேஸ்வரன் வடக்கு-கிழக்கு மாகாண மக்களின் குறைகளை இந்த சபையில் எழுப்பவுதற்கு தமக்கு உரிமை இருப்பதாக கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் பதவி தன்னைவிட்டு விலகிப் போனாலும் தமது மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்தும் சேவையாற்ற போவதாக அமைச்சர் மகேஸ்வரன் கூறினார்.
யாழ்ப்பாண மக்களின் தேவைகள் நிறைவேற்றாத பட்சத்தில் எதிர்வரும் ஐனவரி முதலாம் திகதி முதல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகப் போவதாகவும் அவர் சூளுரைத்தார்.
எவ்வாறாயினும் எதிர்வரும் டிசம்பர் 31-ம் திகதி வரை அரசாங்கத்துக்கு தனது ஒத்துழைப்பு கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர், வடக்கு-கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களின் 8 லட்சத்து 91 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர்கள் தொடர்பாக வரவு-செலவுத் திட்டத்தில் எவ்வித நிவாரண யோசனையும் முன்வைக்கப்படவில்லையெனவும் சுட்டிக்காட்டினார்.
தான் ஐக்கிய தேசிய முன்னணியில் அமைச்சராக செயற்படுகின்ற போதிலும் யாழ். மக்கள் தொடர்பாகவே கூடுதலான அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு வருடங்களாக இந்த அரசாங்கம் யாழ். மக்களை ஏமாற்றியுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், வடக்கு-கிழக்கு மாகாணத்துக்கு வெளிநாடுகள் வழங்கிய உதவிகளை சில நபர்கள் மோசடி செய்துள்ளதாகவும் கூறினார்.

<b>ra........</b>
004 1677366
004 1677366