06-22-2003, 08:31 AM
யாழ்ப்பாணத்துக்கு வரும் சிங்களவர்கள்
இது தான் சரியான தருணம்.
சிங்களவர்கள் யுத்தத்தில் சலித்துப் போயிருக்கிறார்கள்
அவர்களுடைய மனச்சாட்சிகளைத் து}ண்டினாலேயே போதும்
அது பாதியளவு சமாதானம் கிடைத்ததற்குச் சமம்.
ஜெகத் வீரசிங்க ஒரு பிரபல்யமான சிங்கள ஓவியர். புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின் அவரைச் சந்தித்த ஒரு தமிழ் நண்பரிடம் அவர் யாழ்ப்பாணத்துக்கு வரும் சிங்களவரைப் பற்றி மிகவும் வித்தியாசமான ஒரு விளக்கத்தைக் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு வரும் சிங்களவர்கள் நயினாதீவில் யாத்திரிகைத் தலத்திற்கு வரும் யாத்திரிகர்கள் போலத் தோன்றினாலும் உண்மையில் அவ வாறில்லை என்று ஜெகத் வீரசிங்க கூறுகிறார்.
இலங்கைத்தீவு முழுவதும் பௌத்தர்களின் புனிதத்தலங்கள் இருப்பதாக சிங்களவர்கள் நம்புவது என்பது இலங்கைத்தீவு முழுவதும் சிங்கள பௌத்தர்களுடையது என்ற அவர்களது நம்பிக்கையின் பாற்பட்டதே என்றும் அவர் கூறுகிறார்.
எனவே யாழ்ப்பாணத்துக்கு யாத்திரை வருவது என்பதும் அதன் பிரயோக அர்த்தத்தில் இலங்கைத் தீவு முழுவதுமான தமது ஆட்சியுரிமையை உறுதி செய்யும் ஒரு செயலே என்ற தொனிப்பட ஜெகத்வீர சிங்க கூறுகிறார்.
ஜெகத் வீரசிங்கவின் இந்த விளக்கத்தை அதன் அடுத்த கட்டத்துக்கு வளர்த்துச் சென்றால் பின்வருமாறு வரும்- யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்து வந்து அதைப் பிடித்து வைத்திருக்கும் சுமார் 30,000 சிங்களத் துருப்புக்களின் நீட்சியாகவும் அகற்சியாகவுமே இப்பொழுது சிங்களவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
அதாவது இது யாழ்ப்பாணத்தின் மீதான இரண்டாவது படையெடுப்பு, சமாதான காலப்படையெடுப்பு.
தாய்லாந்தில் முதற்சுற்றுப் பேச்சுக்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கும் ஒரு சூழலில் இப்படிப்பட்ட விடயங்களை ஏன் எழுத வேண்டும் என்று யாராவது கேட்கக்கூடும்.
அதுவும் ஒரு விதத்தில் சரிதான்.
ஆனால் சமாதானத்தின் கண்களுக்குப் புலனாகாத பகுதிகளைக் குறித்து தமிழர்கள் விழிப்பாயிருப்பது அவசியம் என்பதனால் இதை எழுதவேண்டியுள்ளது. அத்தோடு, புரிந்துணர்வுகால விருந்தாளிகளின் உளவியலை மதிப்பிட கடந்த ஆறேழுமாதகால அநுபவம் போதுமானது என்பதனாலும் இதை எழுதவேண்டியுள்ளது. இவைதவிர இங்கு வரும் சிங்களவர்கள் எத்தகைய சித்திரத்தை மனதில் வைத்திருந்தாலும் அவர்கள் திரும்பிச் செல்லும் போது அந்த சித்திரத்தை இயன்றளவு மாற்றி வரையக் கூடிய மிக வாய்ப்பான ஒரு சூழ்நிலை தமிழர்களுக்கு இப்பொழுது கிடைத்திருக்கிறது. ஈழப்போரில் முன்னெப்பொழுதும் இப்படியொரு கட்டம் வந்ததில்லை என்பதனாலும் இதைப்பற்றி எழுத இது உரிய நேரம்தான்.
யாழ்ப்பாணத்தின் நவீன காலத்தைப் பொறுத்தவரை அது இப்படியொரு கவர்ச்சி மையம் ஆகியது இதுதான் முதற்தடவை.
யாழ்ப்பாணம் எப்பொழுதும் ஒரு கவர்ச்சிமையம்தான் என்பதால் தானே எல்லோரும் படையெடுத்து வந்தார்கள்.
ஆனால் இம்முறை நிலைமை முன்னெப்பொழுதையும்விட வித்தியாசமாகவுள்ளது. அமெரிக்காவின் பிரதியமைச்சர் ஆமிரேஜ் கட்டுநாயக்காவில் வந்திறங்கிய கையோடு அமைச்சர் மொறகொடவையும் அழைத்துக் கொண்டு அடுத்த விமானத்திலேறி நேரடியாக யாழ்ப்பாணத்துக்கு வருமளவுக்கு அதன் கவர்ச்சியும் பெறுமதியும் அதிகரித்துவிட்டன.
இத்துணைதொகை சிங்களவர் இப்படித் தொடர்ச்சியாகப் பெருக்கெடுத்து வருவதும் ராஜதந்திரிகளும் து}துவர்களும் ஊடகக்காரரும் மாறிமாறி வருவதும் போவதும் முன்னெப்பொழுதும் நிகழ்ந்திராத ஒன்று.
இப்பொழுது இலங்கைத்தீவில் உள்ள மற்றெல்லா நகரங்களையும்விட அதிகம் கவர்ச்சியான ஒரு நகரமாக யாழ்ப்பாணம் மாறியுள்ளது.
ஆனால் நாமிங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால்- இது எதுவும் சாதாரண யாழ்ப்பாணத்தவரை அதிகம் தீண்டவில்லை என்பதே. சுரத்தில்லாத ஒரு சாட்சிபோல எல்லாவற்றையும் பற்றின்றிப் பார்த்துக்கொண்டு தானுண்டு தன்பாடுண்டு என்று உள்ளொதுங்கிவிடும் ஒரு போக்கே அங்கு பரவலாகக் காணப்படுகிறது.
முன்பொருமுறை கூறப்பட்டது போல யாழ்ப்பாணத்தின் புதிரே சராசரி யாழ்ப்பாணத்தவன்தான் ஆனால் வரும் சிங்களவர்கள் எவரும் அவனுடன் அதிகம் கதைப்பதில்லை. அவனுக்கும் ஆர்வமில்லை.
பொதுவாகச் சிங்களவர்கள் நேரடியாக ஆரியகுளம் சந்திக்கு வருகிறார்கள். அங்கே உள்ள விகாரையில் வழிபடுகிறார்கள். சிறிது ஆறிப் பிறகு நயினாதீவுக்குப் போகிறார்கள். அவர்களில் அநேகர் நகரப்பகுதியிலும் அதன் சுற்றயல் பகுதிகளிலும் குறிப்பாகப் பிரதான வீதிகளிலும்தான் நடமாடுகிறார்கள்.
குறிப்பாக பெண் புலிகளைக் கண்டால் விடுப்பார்வத்தோடு, நெருங்கிக் கதைக்க முயல்கிறார்கள்.
மற்றும்படி அவர்கள் சாதாரண யாழ்ப்பாணத்தவர்களோடு கதைப்பதைவிடவும் படையாட்களோடு செலவழிக்கும் நேரமே மிகவும் அதிகம்.
அவர்களுடைய முகபாவம் நடையுடை பாவனை எல்லாவற்றிலும் யாழ்ப்பாணத்தைப் பிடித்து வைத்திருக்கும் சுமார் 30,000 துருப்புக்களை நம்பித்தான் இங்கு வந்தோம் என்பதான ஒரு தோரணையிருக்கிறது.
இது அவர்கள் தமிழர்களோடு நெருங்கிப்பழக முடியாதபடி ஒரு இடைவெளியை வைத்திருக்கிறது.
தவிர, மொழியும் ஒரு தடை.
யாழ்ப்பாணத்துக்கு வரும் சிங்களவரில் அநேகர் கீழ் மத்திய தர வர்க்க அல்லது அடி மட்டச் சிங்களவர்கள்தான். ஏனெனில் அவர்களில் அநேகர் அங்கேயுள்ள துருப்புக்களின் உறவினர்கள்.
அவர்களுக்கு அநேகமாக ஆங்கிலம் தெரியாது. யாழ்ப்பாணத்தின் புதிய தலைமுறைக்கோ சிங்களம் தெரியாது ஆங்கில அறிவும் குறைவு. இந்நிலையில் வர்த்தகர்கள் மட்டுமே வரும் சிங்களவர்களோடு உரையாடக் கூடியவர்களாகக் காணப்படுகிறார்கள்.
தமிழ் வர்த்தகர்களைப் பொறுத்தவரை அவர்களுக்குள்ள தென்னிலங்கைத் தொடர்புகள் காரணமாக அநேகமாக சிங்களம் தெரிந்தவர்களாகக் காணப்படுகின்றார்கள்.
தமிழர்களில் எப்பொழுதும் அதிகம் சிங்களம் பேசும் பிரிவினர் வர்த்தகர்களும் சிறிதளவு அதிகாரிகளும்தான். இதனால் வரும் சிங்களவர்களுடன் ஓரளவுக்கேனும் தொடர்புகளை வைத்திருப்பது வர்த்தகர்களே.
மற்றும்படி சாதாரண யாழ்ப்பாணி இது எதனாலேயும் அதிகம் அருட்டப்படாதவனாய் எதையும் பொருட்படுத்தாதவனாய் வீண்சோலி எதற்கு என்று உட்சுருங்கும் ஒரு நிலையே பொதுப்போக்காயுள்ளது.
இத்தகைய ஒரு பின்னணியில் அங்கு வரும் சிங்களவரை வரவேற்கவோ உபசரிக்கவோ உரிய, ஒருங்கிணைக்கப்பட்ட சிவில் ஏற்பாடுகள் எதுவும் இல்லை. அவர்கள் தங்கி நிற்கவும் சாப்பிடவும் போதிய வசதிகளும் இல்லை.
ஜெகத் வீரசிங்க கூறுவதுபோல அவர்கள் புதிய படையெடுப்பாளர்களோ இல்லையோ அவர்களுடன் மனந்திறந்து உரையாடவும் தமிழர்களைப் பற்றிய அவர்களது மிகப்பழைய இறுகிய முற்கற்பிதங்களை உடைக்கவும் ஒரு புதிய சித்திரத்தை அவர்களிடத்தில் கொடுக்கவும் உரிய நிறுவன மயப்பட்ட ஏற்பாடுகள் எதுவும் அங்கேயில்லை.
வரும் வழியில் அவர்கள் ஆனையிறவைப் பார்க்கிறார்கள். அது இப்பொழுது ஒரு உயிருள்ள போர்க்கால மியுூசியம் அதுகூட நினைத்துத் திட்டமிட்டு வடிமைக்கப்பட்டதல்ல. யுத்தத்தின் மிச்சங்களாய் அங்கே விடப்பட்ட சில போர்த்தளபாடங்களும் அழிவுகளும் இடிபாடுகளும் சேர்ந்து அப்பகுதியை ஒரு உயிருள்ள மியுூசியமாக்கி விட்டுள்ளன. கிளிநொச்சியைப் போல ஆனையிறவும் ஒரு மக்கள் வாழிடமாக இருந் திருந்தால் அங்கேயும் சனங்கள் மீளக்குடியமரும் ஒரு நிலை வந்திருக்கும். அப்பொழுது தவிர்க்கவியலாதபடி ஆனையிறவிலிருந்து யுத்தகால எச்சங்கள் அகற்றப்பட்டிருக்கும். ஆனால் அதிஸ்டவசமாக ஆனையிறவு ஒரு மக்கள் வாழிடம் அல்ல என்பதால் இப்பொழுது அதன் வழியாகப் பயணம் செய்யும் சிங்களவருக்கு ஒரு ஆகக்குறைந்த பட்ச செய்தியையாவது கொடுக்கக் கூடியதாயிருக்கிறது.
மற்றும்படி, வரும் சிங்களவருக்கு யாழ்ப்பாணத்தில் நிற்கும் தமது பிள்ளைகள் சமாதானத்தால் உயிர்ப்பிச்சை தரப்பட்ட அற்ப பலியாடுகளாயிருக்கிறார்கள் என்ற குரூரமான யதார்த்தம் கவர்ச்சியாகவும் கூராகவும் கூறப்படவில்லை என்பதே மெய்நிலை.
துப்பாக்கியும் சீருடையுமாக சந்திகள் தோறும் வீரம் காட்டும் தமது பிள்ளைகள் யாழ்ப்பாணத்தின் மார்பின் மீதே அட்டகாசமாக நின்று போஸ் கொடுக்கிறார்கள் என்பதும். அவர்களுடைய பாரமான சப்பாத்துக்களினடியில் யாழ்ப்பாணத்தின் இதயம் நசுங்கிக் கிடப்பதும் அநேகமான சிங்களப் பெற்றோருக்கு விளங்குவதில்லை.
தமிழர்களிடமும் அதை விளங்கப்படுத்த உரிய ஏற்பாடுகள் பெருமளவு இல்லை.
இந்த இடத்தில் விடுதலைப் புலிகளால் வெளியிடப்படும் சிங்களப் பத்திரிகையான 'தேதுன்ன' (வானவில்) பற்றிக் கூறவேண்டும்.
படித்த சிங்களவர் மத்தியில் குறுகிய காலத்துள் விரைந்து பரவி வரும் "தேதுன்ன" மிகக் கடினமான ஆனால் மிகப் பொறுப்பு வாய்ந்த ஒரு பணியைத் தொடங்கியுள்ளது.
பிரதமரின் அலுவலகத்திலிருந்து தமக்கு மேலும் பல "தேதுன்ன" பிரதிகள் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது.
சிங்கள வெகுசனங்களை மனோவசியம் செய்ய இதுதான் உரிய தருணம்.
அவர்கள் வன்னியைக் கடந்து யாழ்ப்பாணத்தக்குத்தான் போகிறார்கள். அவர்களில் எத்தனைபேர் வன்னிக்கு வர விரும்புகிறார்கள்?
இது எதைக் காட்டுகிறது?
ஜெகத் வீரசிங்க கூறுவது போல அவர்கள் தமது பிள்ளைகளோடு சேர்ந்து யாழ்ப்பாணத்தின் மீதான நிலையற்ற வெற்றியைக் கொண்டாட வருகிறார்கள்.
அவ வாறாயின்- நிச்சயமாகத் தமிழர்கள் அவர்களை மறித்துக் கதைக்க வேண்டும்.
கவர்ச்சியான ஏற்பாடுகளின் மூலம் (உதாரணமாக புகைப்படக் காட்சிகள் போன்றன) அவர்களை மறித்து உரையாட வேண்டும்.
சில யுத்த வியாபாரிகளின் பொக்கற்றுக்களை நிரப்பத்தான் அவர்களுடைய பிள்ளைகள் இங்கே அனாமதேயமாக மடிகிறார்கள் என்ற உண்மை அவர்களுக்குக்கு கட்டாயம் கூறப்பட வேண்டும்.
இந்தப் பிராந்தியத்திலேயே அதிகம் தப்பியோடிகளை உடைய ராணுவம் சிறீலங்கா ராணுவம்தான் என்பதும் அதற்கான காரணங்கள் எவை என பதும் தர்க்கபுூர்வமாக அவர்களுக்குக் கூறப்படவேண்டும்.
இப்பொழுது யாழ்ப்பாணத்தைப் பிடித்து வைத்திருக்கும் அதே தொகை ராணுவ வீரர்கள் (30,000) தென்னிலங்கையில் தப்பியோடிகளாய் பாதாள உலகக் கும்பல்களில் தஞ்சம் புகுந்திருப்பது அவர்களுக்குக் கூறப்படவேண்டும்.
இலங்கைத்தீவு எப்படி யுத்தகள அநுபவம் உடைய பாதாள உலகக் கும்பல்களின் தீவாக மாறியது என்று அவர்களுக்குக் கூறப்பட வேண்டும்.
இதுதான் சரியான தருணம்.