10-20-2005, 09:34 PM
எனது அப்பா அம்மா எப்போதும் என்னை படி படி என்று சொன்னது கிடையாது. நானாக படித்தால் தான் உண்டு. எனது நண்பனின் வீட்டில் அப்படிக்கிடையாது. மிகவும் கண்டிப்பு. அவன் விரும்பிய துறையைத்தேர்வு செய்ய முடியாது. அவர்கள் சொன்ன துறையைத்தான் தேர்வு செய்தான். எப்போதும் சோகமாக காணப்படுவான். இன்று அவன் நல்ல நிலையில் இருக்கிறான். அதற்குக் காரணம் அவன் பெற்றோர்கள் கண்டிப்பாக வழிநடத்தியது. படிக்கின்ற போது கசப்பாக இருந்தாலும் எதிர்காலத்தில் எல்லாம் இனிப்பாக மாறும்.

