11-21-2003, 03:41 PM
Ilango Wrote:அஜீவன்
உங்கள் எழுத்தை ஆழமாக வாசிப்பவனில் நானும் ஒருத்தன் உங்கள் செயற்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லாதததினால் அதை தெரிவித்தேன்.
உங்கள் பெரும்தன்மையான பதில் மற்றவர்களையும் வழிநடத்த உதவும்.
எமக்குத் தெரியாமலே நாம் தவறு செய்து விடுகிறோம்.
இது இயல்பு இளங்கோ.
கடந்த சில நாட்களுக்கு முன் <img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/peace.gif' border='0' alt='user posted image'> இந்த குறியீடைப் பார்த்து விட்டு , நளாயினியை பாராட்டி எழுதிவிட்டேன்.
திடீரென ஒரு மெயில்.
அது நளாயினியில்லை என்று.
பார்த்தால் , அது தமிழன்.
உடனே
Quote:என்னைக் காப்பாற்றியதற்கு நன்றி ..........
குறியீடு என்னைக் கவிழ்த்து விட்டதே?
Thanks a lot.................
என்று பதில் போட்டேன் என் அன்பு உறவுக்கு.
உதாரணமாக:-, பத்திரிகை அச்சகங்களில் எழுதுவோர்(முன்னர் அச்சுக் கோர்ப்போர்) தாம் செய்யும் வேலையை , திருத்துவதற்கு பிரின்ட் செய்து வேறொருவரிடம் கொடுப்பார்.அவர் ஏகப்பட்ட பிழைகளை கண்டு பிடித்து திருத்துவார்.
காரணம் , நாம் மனதில் ஒரு பகுதியை நினைத்துக் கொண்டே எழுத மறந்து விடுவோம்.அது எழுதப்பட்டதாகவே தோன்றும். ஆனால் அந்தத் தவறு இன்னோருவருக்குத்தான் தெரியும். அவர் உண்மையிலேயே எம்மைக் காப்பாற்றுபவர். இது ஒன்றும் சிறுமையில்லை.பெருமைதான்.
நான் உங்கள் கருத்தைப் பார்த்த பின்தான் விழித்தே பார்த்தேன்.
விரும்பினால் உங்கள் பகுதியில் இருக்கும் தவறான படத்தை அகற்றி விட்டு,அஜீவனின் தவறு திருத்தபட்டுள்ளதால் படம் அகற்றப்படுகிறது எனக் குறிப்பிடுங்கள். அது அந்த ஓவியரை பாதிக்கலாம்.
முடிவெடுப்பது உங்கள் கையில்.
உங்களைப் போன்றோரது விழிகள் திறந்திருப்பதால் நாங்கள் காக்கப்படுகிறோம்.
மனமார்ந்த நன்றிகள்........................
விழித்த உறவுக்கு
வாழ்த்துகளுடன்,
________________________________________அஜீவன்

