06-22-2003, 08:26 AM
தமிழர் மத்தியில் இசை வளர்த்ததும் வளர்க்க வேண்டியதும்.
தமிழர் மத்தியில் வழங்கும் இசையினை 4 வகையாக வகுக்கலாம்.
01 செவ்விய இசை
02 நாட்டாரிசை
03 வெகுஜன இசை
04 மக்களிசை
செவ்விய இசைக்கு ஒரு வரலாறுஉண்டு. இவ்விசையைக் கர்நாடக இசை, தமிழிசை என அழைக்கும் மரபு எம்மத்தியில் உண்டு. கர்நாடக இசை, தமிழிசை சம்பந்தமாக ஏராளமான நு}ல்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன.
செவ விய இசையை வளர்ப்பதற்கென எம்மத்தியில் ஒரு பிரிவினர் இருந்து வந்துள்ளனர். அரசாலும், பிரபுக்களாலும் கோயில்களாலும், நிறுவனங்களாலும் இம்மரபு போஸிக்கப்பட்டதனால் இது வளர்க்கப்பட்டுள்ளதுடன் இவ விசைமரபே தமிழர் இசைமரபாகக் கூறப்பட்டுள்ளது.
செவ விய இசைக்குச் சமாந்தரமாக நாட்டாரிசையும் தமிழர் மத்தியில் இருந்துள்ளது. இவ விசை மக்களின் அன்றாட வாழ்வுடன் பின்னிப் பிணைந்திருந்தமையால் இது அழியாமல் இருந்துவந்துள்ளது. எனினும் கால மாற்றத்திற்கு ஏற்ப மாற்றம்பெற்றும் வந்துள்ளது.
செவ்விய இசையும், நாட்டாரிசையும் ஒன்றிலிருந்து ஒன்று பெற்றும், கொடுத்தும் வளர்ந்து வந்துள்ளமையை இசை வரலாறு மூலம் அறிகிறோம். தமிழ் இசை வரலாறு எழுதியோர் நாட்டாரிசையை அதனுடன் இணைத்தாரில்லை.
19ம் நு}ற்றாண்டில் பார்ளி நாடக மரபின் வருகையுடன் வெகுஜன இசைமரபு தமிழர் மத்தியில் புகுகின்றது. கர்நாடக இந்துஸ்தானி இசைகளை பார்ளி நாடக மரபு மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறது. பின்னணிச் சினிமா (1930களில்) இவ வெகுஜன இசையை வளர்க்கும் ஊடகமாயிற்று. அதன்பின் வானொலி, ரெலிவிஸன் என்பன வெகுஜன இசை வளரக் காரணிகளாயின.
வெகுஜனக் கலாச்சாரம் என்பது தொழில்நுட்ப உதவியுடன் செய்யப்படும் மாய்மாலம் என்பர். பணம் மீட்டும் பண்புடைய இவ வெகுஜன கலாச்சாரம் மக்களை மயக்கத்தில் ஆழ்த்தக்கூடியது. இது செவ விய கலாச்சாரத்தினதும் நாட்டுப்புற கலாச்சாரத்தினதும் வீரியத்தை நீர்த்துப் போக வைக்கும் தன்மையுடையது. 19ஆம் நு}ற்றாண்டில் எழுந்த இந்த வெகுஜன இசை(சினிமா இசை) செவ விய இசையையும், நாட்டுப்புற இசையையும் மக்கள் மத்தியில் ஜனரஞ்சகப் படுத்தியதாயினும் அவற்றின் வீரியத்தை குறைத்து விட்டது. 20ம் நு}ற்றாண்டில் இவ வெகுஜன இசை, பணம் பண்ணும் முதலாளிகளினால் திட்டமிட்டு வளர்க்கப்பட்டதை காண்கிறோம். சினிமாவில் 1930 களில் செவ விய இசை பு . இராமநாதன் போன்றோருக்கூடாகவும், 1950, 60 களில் கர்நாடக இசையை அடித்தளமாகக் கொண்ட மெல்லிசை ஆ.ளு விஸ்வநாதன் போன்றோருக்கூடாகவும், 1970 களில் கிராமிய இசை இளையராஜா போன்றோருக்கூடாகவும், 1980 களில் சிறப்பாக மேல்நாட்டிசையும் குறிப்பாக கிராமிய, கர்நாடக இசைகள் ரகுமானுக்கூடாகவும், சினிமாவுக்கூடாக வெகுஜன இசையாக பரிணமிப்பதை காண்கிறோம். இவ விசை மரபே இன்று பட்டி தொட்டிகளிலெல்லாம் கேட்கப்படுகிறது. இச்சினிமா இசையில் செவ விய, கிராமிய இசைகள் ஜனரஞ்சகப் படுத்தப்பட்டன. மக்களை மயக்கத்திலாழ்த்திய இவ விசைப் போக்கிற்கு மாற்றாக எழுந்த இசைமரபே மக்களிசை மரபாகும்.
இவ் விசை மரபு, மக்கள் நலநாட்டம் கொண்ட மக்களியக்கங்களாலும் தனிப்பட்டோராலும் மேற்கொள்ளப்பட்டன. மக்களின் பிரச்சினைகளை மக்களுக்குணர்த்த செவ விய இசை, நாட்டாரிசை கலந்த ஒருவித இசை மரபினை இவ விசையாளர் பயன்படுத்தினர். ல்னிவாசன் இதன் முன்னோடியாவார். பாடகர்களின் குரல் வளத்தை மாத்திரமே அடிப்படையாகக் கொண்ட கொயர் இசைக்கு அவர் முக்கியத்துவமளித்தார்.
ரூசூ009;நிறுவனங்களுக்குள்ளும், கோயில்களுக்குள்ளும் மேலோங்கிகளுக்குள்ளும் ஒடுங்கிக்கொண்ட கர்நாடக சங்கீதத்துக்கும் மக்களை மயக்கத்திலாழ்த்திய பாத்தனமான சினிமா சங்கீதத்திற்கும் மாற்றாகத் தோன்றிய இம் மக்கள் சங்கீதம், மக்கள் கலை இலக்கிய மன்றம், தமிழிசை இயக்கம், நக்ஸல்பாரிக் குழுவினர் போன்ற நிறுவனங்களாலும் குணசேகரன், தேவேந்திரன் போன்றோராலும் முன்னெடுக்கப் படுகின்றன.
ரூசூ009;தமிழ்நாட்டு அரசியல், சாதிப் பிரச்சினை, பெண்ணுரிமை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பன இப்பாடல்களின் கருவாக அமைந்துள்ளன.
ரூசூ009;தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கரிசல்காட்டுப் பாடல்கள், தன்னானே குழுவினரின் நக்ஸல்பாரி இயக்கம் சார்ந்தோர் வெளியிட்ட சமூக அரசியல் இயக்கப் பாடல்கள் தலித்துகளின் கஸ்டங்களை விளக்கும் குணசேகரனின் பாடல்கள் என்பன ஒலி நாடா வடிவில் இன்று பரவலாக விற்பனையாகின்றன. இவை கணிசமான அளவு மக்களைக் கவர்ந்துள்ளதுடன் மக்களைச் சிந்திக்கவும் வைக்கின்றன.
ரூசூ009;ஈழத்துத் தமிழர் மத்தியிலும் இந்த நான்கு வகை இசை மரபுகளையும் காண்கிறோம். தமிழகத் தொடர்பு காரணமாக ஈழத்துத் தமிழர் மத்தியில் பண்டுதொட்டு இன்று வரை ஒரு செவ விய இசை மரபு இருந்து வந்துள்ளது. அரசவை, பெரும் கோயில்களை மையமாகக் கொண்டு வாழ்ந்த இசை வேளாளர் இம் மரபை வளர்த்துள்ளனர். இம்மரபு இன்று கல்வி நிறுவனங்களினால் வளர்க்கப்படுகின்றது.
ரூசூ009;நாட்டாரிசையை வளர்க்கும் முயற்சிகள் 1960 களில் ஈழத்தமிழர் மத்தியில் உண்டாயின. ஆனால் அவை திட்டமிட்டு வளர்க்கப்படவில்லை.
ரூசூ009;வெகுஜன இசை ஈழத்துக்கு என்று இல்லாவிடினும் தமிழ்நாட்டு வெகுஜன இசையே எமது வெகுஜன இசையாயிற்று. இன்று இவ விசை மரபினை தமிழ்நாட்டிலிருந்து இங்கு இறக்குமதியாகும் சினிமாவும், தமிழகச் சினிமாக் கலைஞர்களும், எமது நாட்டு வானொலியும், தொலைக்காட்சி நிறுவனங்களும் பெருமளவில் பரவலாக்கி வளர்த்து வருகின்றன. இவற்றிற்கு மாற்றீடாக எழுந்த மக்களிசை மரபொன்றும் எம்மத்தியில் உண்டு.
ரூசூ009;1970 களில் எம்மத்தியில் எழுந்த மெல்லிசையில் மக்களிசை மரபின் ஊற்றுக்களைக் காணமுடியும். நாட்டுப்பற்று, மக்கள் பிரச்சினைகள் என்பன அவற்றில் பேசப்பட்டன. தமிழ் தேசிய இயக்கங்கள் தம் கருத்துப் பிரச்சாரத்திற்கு ஒரு வலிமை வாய்ந்த ஆயுதமாக மக்களிசையைப் பயன்படுத்துகின்றன. கர்நாடக இசை, நாட்டாரிசை கலந்து உருவான இவ விசை மூலம், பெண்கள் பிரச்சினை (சூர்யா பெண்கள் அபிவிருத்தி நிலைய இசை ஒலி நாடா) போன்றனவும் கூறப்படுகின்றன.
ரூசூ009;ரூசூ009;ஏற்கனவே வளர்ந்திருந்த செவ விய இசை மரபையும், குணாம்சமுள்ள நாட்டாரிசை மரபையும் வெகுஜன இசை அழித்தொழிக்கும் இக்காலகட்டத்தில் இதற்கு மாற்றாக அலைகடலில் ஒரு துரும்பெனக் காட்சி தருவது இம் மக்களிசை மரபேயாகும்.
ரூசூ009;உலகெங்கணும் அடக்கப்படும் மக்களிடம் இம் மக்களிசை மரபைக் காணுகிறோம். அமெரிக்காவில் மக்கள் பிரச்சினைகளையும் வியட்நாம் எதிர்ப்புப் பிரச்சாரங்களையும் பொப்பில் பாடிய பொட்டிலன், ஜோன் பயஸ் என்போர் வளர்த்த மக்களிசை லத்தீன் அமெரிக்க நாடுகளின் மக்களிசை 3ம் உலக நாடுகளின் மக்களிசை இயக்கம் என்பன மக்களிசை இயக்கம் என்பது உலகம் தழுவியது என்பதற்கு உதாரணங்களாகும்.
ரூசூ009;தமிழர் இதுவரை வளர்த்தவை செவ விய இசையும், வெகுஜன இசையுமே. அடக்கப்படும் இனங்களோடும், நாடுகளோடும், மக்களோடும் தமிழ்நாட்டு மக்களிசையினரும் இலங்கை நாட்டு மக்களிசையினரும், ஈழத்தமிழ் மக்களிசையினரும் இணைந்து இன்று வளர்க்க வேண்டியது மாற்று இசையான மக்களிசையே. இப்பணி அங்கொன்று இங்கொன்றாக நடைபெறினும் திட்டமிட்டு ஒருங்கிணைந்து தம் ஆற்றல்களைக் குவிமையப்படுத்திச் செயலாற்றுவதன் மூலமே இம் மக்களிசை மரபு வளர்ச்சியைச் சாதிக்க முடியும்.