11-21-2003, 12:50 PM
இதுவரை லியோன் பொக்ஸ் வழி பிரதமர் ரணிலின் அரசு, விடுதலைப் புலிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தை பற்றிய தகவல்களை அதிபர் சந்திரிகாவோடு பகிர்ந்து கொள்ளாததுதான்,இப்பிரச்சனைக்கு வழி வகுத்துள்ளதென்றும், எனவே தாம் இனித் தொடர்ந்து நடத்தப் போகும் பேச்சு வார்த்தைகள் பற்றிய விபரங்களை எதிர்கட்சிக்கு அறியத் தரவிருப்பதாகவும், அதற்கான ஒருங்கிணைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு சமரவிக்கிரம-திக்வல்ல கமிட்டி உருவாக்கப் பட்டுள்ளதாகவும் ஜீ.எல்.பீரீஸ் தெரிவித்தார்.
மேலும், இதுவரை சரித்திரங்கள் வாயிலாக நடந்து வந்த இனவாத அரசியல் அமைப்பை மாற்றி,புதியதொரு அரசியல் அபிலாசையை உருவாக்க அதிபர் சந்திரிகாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க தமது கட்சி முன் வந்ததாகக் குறிப்பிட்டார்.
இதனிடையே எதிர்கட்சி தலைவர்,மகிந்த ராஜபக்ஸ கருத்து தெரிவிக்கும் போது மக்கள், சமாதானத்தையே விரும்புகிறார்கள், எனவே அதிபரின் வழி நடத்தலுடன்,பிரமர் ரணிலே தொடர்ந்தும் சமாதானப் பேச்சு வார்த்தையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.
JVP பற்றி அவரிடம் பிரஸ்தாபிக்கப்பட்ட போது, தனக்கும் JVP உடனான கூட்டுப் பேச்சுகளுக்கும் தொடர்பில்லை என்றார் மகிந்த ராஜபக்ஸ.