![]() |
|
சந்திரிகா தலைமையில் பேச்சு;விக்கிரமசிங்கே ஒப்புதல்! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: சந்திரிகா தலைமையில் பேச்சு;விக்கிரமசிங்கே ஒப்புதல்! (/showthread.php?tid=7775) |
சந்திரிகா தலைமையில் ப - yarl - 11-21-2003 கருத்து பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் இன்னொரு பகுதியிருக்கிறதே..அவர்கள் ஒப்புதல் அளித்தார்களா? இந்தியா விட்ட தவறு ஞாபகம் வந்தால் சரி Re: சந்திரிகா தலைமையில் - AJeevan - 11-21-2003 எங்கள் பிரச்சனையை தீர்ப்பதற்கு முன், உங்கள் பிரச்சனையை தீர்த்துக் கொண்டு வாருங்கள் என்று சம்பந்தப்பட்ட தரப்பு ஏற்கனவே கூறிவிட்டதே? - yarl - 11-21-2003 ஆஆஆஆஆஆஆஆஆ செய்தி போடும்போது விடுபட்டுவிட்டது கவனிக்கவில்லைலலல dinamalar 3. சந்திரிகா தலைமையில் பேச்சு;விக்கிரமசிங்கே ஒப்புதல்! கொழும்பு: புலிகளுடனான அமைதி பேச்சுவார்த்தையை அதிபர் சந்திரிகா தலைமையில் தொடர பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சம்மதம் தெரிவித்துள்ளார். இலங்கையில் அதிபர் சந்திரிகாவுக்கும், பிரதமர் ரணிலுக்கும் இடையே அதிகார போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக புலிகளுடனான அமைதி பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் ரணில் அதிபருடன் சமரச போக்கை கடைபிடிக்க பெருந்தன்மையுடன் முன்வந்துள்ளார். "விடுதலைப்புலிகளுடனான அமைதி பேச்சுவார்த்தையை அதிபர் சந்திரிகா முன்னின்று நடத்த வேண்டும்' என ரணில் கோரிக்கை விடுத்துள்ளார். இத்தகவலை இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் ஜி.எல்.பெரீஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ரணில் அரசு பழைய நிகழ்வுகளை மறந்துவிட முன்வந்துள்ளது. புலிகளுடனான அமைதி பேச்சுவார்த்தையில் அதிபர் சந்திரிகாவும் அவரது கட்சியான மக்கள் கூட்டணியும் ஈடுபட்டு முடிவு எடுக்க ரணில் அரசு முழு சம்மதம் தெரிவிக்கிறது. இது தொடர்பாக அதிபருடன் உடன்படிக்கை செய்து கொள்ளவும் பிரதமர் ரணில் தயாராக உள்ளார். அமைதி பேச்சுவார்த்தை எப்படி கையாளப்பட வேண்டும் என்பதை அதிபரும், பிரதமரும் கலந்து பேசி முடிவு எடுக்க உடன்பாடு வழிவகுக்கும். எங்களை பொருத்தமட்டில் எங்களது லட்சியம் நிறைவேற வேண்டும் என்பதுதான். இவ்வாறு பெரீஸ் கூறினார். பெரீஸின் பேட்டி குறித்து கருத்து தெரிவித்த அதிபர் அலுவலக செய்தி தொடர்பாளர்,"இது நல்லதொரு மாற்றத்தை காட்டுகிறது', இருப்பினும் பெரீஸ் பேட்டியில் என்ன தெரிவித்தார் என்பதன் முழு விபரத்தை நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்' என்றார். முன்பு, அதிபர் சந்திரிகா ரணில் அரசு மீது புலிகளுக்கு அதிக சலுகை வழங்கியதாக குற்றம் சாட்டினார். அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்து சந்திரிகாவும் அவரது கட்சியும் விலகியிருக்க வேண்டும் என ரணில் முன்பு கூறியிருந்தார். இப்போது நிலைமை அதிரடியாக மாறியுள்ளது. - AJeevan - 11-21-2003 இதுவரை லியோன் பொக்ஸ் வழி பிரதமர் ரணிலின் அரசு, விடுதலைப் புலிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தை பற்றிய தகவல்களை அதிபர் சந்திரிகாவோடு பகிர்ந்து கொள்ளாததுதான்,இப்பிரச்சனைக்கு வழி வகுத்துள்ளதென்றும், எனவே தாம் இனித் தொடர்ந்து நடத்தப் போகும் பேச்சு வார்த்தைகள் பற்றிய விபரங்களை எதிர்கட்சிக்கு அறியத் தரவிருப்பதாகவும், அதற்கான ஒருங்கிணைப்பு ஒன்றை உருவாக்குவதற்கு சமரவிக்கிரம-திக்வல்ல கமிட்டி உருவாக்கப் பட்டுள்ளதாகவும் ஜீ.எல்.பீரீஸ் தெரிவித்தார். மேலும், இதுவரை சரித்திரங்கள் வாயிலாக நடந்து வந்த இனவாத அரசியல் அமைப்பை மாற்றி,புதியதொரு அரசியல் அபிலாசையை உருவாக்க அதிபர் சந்திரிகாவுக்கு முக்கியத்துவம் கொடுக்க தமது கட்சி முன் வந்ததாகக் குறிப்பிட்டார். இதனிடையே எதிர்கட்சி தலைவர்,மகிந்த ராஜபக்ஸ கருத்து தெரிவிக்கும் போது மக்கள், சமாதானத்தையே விரும்புகிறார்கள், எனவே அதிபரின் வழி நடத்தலுடன்,பிரமர் ரணிலே தொடர்ந்தும் சமாதானப் பேச்சு வார்த்தையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றார். JVP பற்றி அவரிடம் பிரஸ்தாபிக்கப்பட்ட போது, தனக்கும் JVP உடனான கூட்டுப் பேச்சுகளுக்கும் தொடர்பில்லை என்றார் மகிந்த ராஜபக்ஸ. |