11-21-2003, 11:37 AM
ஆஆஆஆஆஆஆஆஆ
செய்தி போடும்போது விடுபட்டுவிட்டது கவனிக்கவில்லைலலல
dinamalar
3. சந்திரிகா தலைமையில் பேச்சு;விக்கிரமசிங்கே ஒப்புதல்!
கொழும்பு: புலிகளுடனான அமைதி பேச்சுவார்த்தையை அதிபர் சந்திரிகா தலைமையில் தொடர பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சம்மதம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அதிபர் சந்திரிகாவுக்கும், பிரதமர் ரணிலுக்கும் இடையே அதிகார போட்டி நிலவுகிறது. இதன் காரணமாக புலிகளுடனான அமைதி பேச்சுவார்த்தையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் ரணில் அதிபருடன் சமரச போக்கை கடைபிடிக்க பெருந்தன்மையுடன் முன்வந்துள்ளார்.
"விடுதலைப்புலிகளுடனான அமைதி பேச்சுவார்த்தையை அதிபர் சந்திரிகா முன்னின்று நடத்த வேண்டும்' என ரணில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இத்தகவலை இலங்கை அரசின் செய்தி தொடர்பாளர் ஜி.எல்.பெரீஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
ரணில் அரசு பழைய நிகழ்வுகளை மறந்துவிட முன்வந்துள்ளது. புலிகளுடனான அமைதி பேச்சுவார்த்தையில் அதிபர் சந்திரிகாவும் அவரது கட்சியான மக்கள் கூட்டணியும் ஈடுபட்டு முடிவு எடுக்க ரணில் அரசு முழு சம்மதம் தெரிவிக்கிறது. இது தொடர்பாக அதிபருடன் உடன்படிக்கை செய்து கொள்ளவும் பிரதமர் ரணில் தயாராக உள்ளார். அமைதி பேச்சுவார்த்தை எப்படி கையாளப்பட வேண்டும் என்பதை அதிபரும், பிரதமரும் கலந்து பேசி முடிவு எடுக்க உடன்பாடு வழிவகுக்கும். எங்களை பொருத்தமட்டில் எங்களது லட்சியம் நிறைவேற வேண்டும் என்பதுதான்.
இவ்வாறு பெரீஸ் கூறினார்.
பெரீஸின் பேட்டி குறித்து கருத்து தெரிவித்த அதிபர் அலுவலக செய்தி தொடர்பாளர்,"இது நல்லதொரு மாற்றத்தை காட்டுகிறது', இருப்பினும் பெரீஸ் பேட்டியில் என்ன தெரிவித்தார் என்பதன் முழு விபரத்தை நாங்கள் எதிர்பார்த்துள்ளோம்' என்றார்.
முன்பு, அதிபர் சந்திரிகா ரணில் அரசு மீது புலிகளுக்கு அதிக சலுகை வழங்கியதாக குற்றம் சாட்டினார். அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்து சந்திரிகாவும் அவரது கட்சியும் விலகியிருக்க வேண்டும் என ரணில் முன்பு கூறியிருந்தார். இப்போது நிலைமை அதிரடியாக மாறியுள்ளது.